14 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-05

   அன்பு நண்பர்களே,
                  tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம். இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஐந்தாவது நாள் .

          கல்கடம்பூர் மலைப்பகுதி உயர்நிலைப்பள்ளிக்கூடம்.மேலே உள்ள படம்.


     கல்கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்வமுடன் ஆய்வு செய்யும் காட்சி மேலே உள்ள படம்.

     மரியாதைக்குரிய மெய்யப்பன், ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள கிராம கல்விக்குழு உறுப்பினர்களை வரவேற்று அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக கல்விக்கான வசதிகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.        
   ''நாட்டாமைக்கல்வி'' என்னும் மிகச்சிறப்பான  கல்வி சீர்திருத்த நாடகம் அரங்கேற்றிய பள்ளி மாணவக்குழந்தைகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் மேலே உள்ளபடம்.


             மலைப்பகுதி பள்ளி மாணவக்குழந்தைகளின்  படைப்பாற்றலை வெளிப்படுத்திய திருமிகு.ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.ரகுபதி அவர்கள் விளக்கவுரையை ஆவலுடன் கேட்கும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கிராமக்கல்வி உறுப்பினர்கள், மேலே உள்ள படம்.


      ஆசிரியர் பயிற்றுனர்களான 1)திருமிகு.ரகுபதி அவர்கள் மற்றும் 2)திருமிகு.மெய்யப்பன் அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்களை கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் கண்காணித்து பள்ளியின் நலனுக்காக அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும்பயன்படுத்த வேண்டும் என  விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
              மதிய உணவு பரிமாற்றம் மற்றும் கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இளைப்பாறும் காட்சி மேலே உள்ள படங்கள்.



          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவக்குழந்தைகளின் வில்லுப்பாட்டு அனைவருக்கும் மகிழ்வூட்டும்! என பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.


          ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சியளித்தது பற்றி அப்பள்ளி ஆசிரியர் விவரிக்க அதனை கேட்டறிகின்றனர் ஆசிரியர் பயிற்றுனர்கள்.

           இதோ ''பொது அறிவு தேவை'' என்பதை உணர்த்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.பங்கு பெற்ற மாணவக்குழந்தைகள் 1)சரத்பரணி.ரு. (2)கௌதம்.ப.(3)சுவேதா.கோ.(4)நியூபாரத்.சி. இவர்கள் நால்வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். ஐந்தாவதாக பரத்.சி. என்ற மாணவன் நான்காம் வகுப்பு.பயின்று வருகின்றனர்.

        கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கு.சக்திவேல்.இவர் ஓவியம் வரைவதில் மிகவும் திறமை உள்ளவர் என  அறிமுகப்படுத்தி வைக்கிறார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.பொ.மணி,B.Lit.,D.T.Ed.



  மேலே உள்ள இரண்டு படங்களும் மாணவன் சக்திவேல் அவர்களின் கைவண்ண ஓவியங்கள்.(இன்னும் மனித உருவங்கள்,இயற்கை காட்சிகள்,என  பல படங்கள் வரைந்துள்ளார்.)
     இன்று நடந்த இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,சத்தி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் ராமம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியை அப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.ஃப்ராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியை மரியாதைக்குரிய சரஸ்வதி அவர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு  சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திய விதம் பற்றியும் அதேபோல இங்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்படுத்தி ஊர்மக்களும் ஒன்றிணைந்து பள்ளியை சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புகைப்படம் மற்றும் பதிவேற்றம்;- PARAMESWARAN.C
                                                             TAMIL NADU SCIENCE FORUM
                                                                       SATHY-THALAVADY

        

13 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-04

 அன்பு நண்பர்களே,
                           tnsfthalavady.blogspot.com  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                 கிராம கல்விக் குழுவின் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான பயிற்சியில், இன்று இரண்டாவது கட்டப்பயிற்சியாக ஆரம்பம்.மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவில் அருகில் உள்ள வடவள்ளி அடுத்து வேடர்நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் சார்பாக  கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.



          கல்வி உரிமைச்சட்டம் , பெண் கல்விச்சட்டம்,இடைநின்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ,செயல்வழிக்கற்றல் இவைகளுக்கு அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் கட்டட வசதிகள், ஆகியன பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

                  
         கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் பங்காற்றல் கண்காணித்தல் இருந்தால் அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி  அரசுப்பள்ளியான இங்கு பயிலும் குழந்தைகளை மிகவும் திறமையானவர்களாக உருவாக்க முடியும்.மேலும்,




        

         கிராம மக்களாகிய உங்களது குழந்தைகளை திறமையானவர்களாக மாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.கிராம மக்களாகிய நீங்கள்  அவ்வப்போது இந்தப்பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியப்பெருமக்களை ஊக்குவித்தல் மற்றும் அரசு திட்டங்களைக் கண்காணித்தால் போதுமானது.என வட்டார வள மைய மேற்பார்வையாளர் துவக்கவுரை ஆற்றினார்.

  
        அதற்கு முன்னதாக பள்ளி பிரார்த்தனை நேரம் நடைபெற்றது.பொதுமக்கள் கொடி ஏற்றல் மற்றும் குழந்தைகளின் பிரார்த்தனையைக் கண்டு களித்தனர்.
                வேடர்நகர் அரசு துவக்கப்பள்ளி  மாணவி ஒருவர் தினசரிச் செய்தித்தாள் ஒன்றில் மாவட்டச்செய்தி,மாநிலச்செய்தி,தேசியச்செய்தி மற்றும் உலகச்செய்தி எனப் பிரித்து வாசிக்கும் காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.பால கிருஷ்ணன் ஆசிரியர் அவர்கள்.

 கிராமக் கல்விக்குழு பயிற்சி முகாம் நடைபெறும் அறையின் பெயர்பலகை மற்றும் நடன நிகழ்ச்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவக்குழந்தைகள் மேலே உள்ள படம்.


       மரியாதைக்குரிய கொடைவள்ளல்,ஆமாங்க! இவர் சிக்கரசம்பாளையம் அருகில் சூரியக்குட்டை அரசுப்பள்ளிக்கு இவரது நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.இவருக்கு வயதாகி விட்ட நிலையிலும் கிராமக் கல்விக்குழுப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தன்னை அழைத்துச்செல்லுமாறு அப்பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் திருமதி.ப.லட்சுமக்காள் அவர்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் அழைத்து வந்திருந்தார்.
      (இவரது பயன்மிகு உரையாடல் பின்னர் காண்போம்)

     கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற அறையின் உட்புறத் தோற்றம்.குழுமியிருந்த ஊர்ப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்.

    ஆசிரியர் பயிற்றுனர் மரியாதைகுரிய . சாமுண்டீஸ்வரி அவர்கள் கிராம மக்களுக்கு கட்டாயக்கல்வி மற்றும் அரசு உதவிகள்,வசதிகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.

  பயிற்சி முகாமில் குழுமியிருந்த ஆசிரியப்பெருமக்கள் மற்றும் கிராமக் கல்வி உறுப்பினர்கள்,பொதுமக்கள்.மேலே உள்ள படம்.

       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டாரப் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்   சமூக முன்னேற்றத்திற்கு   பெண் கல்வி மிக அவசியம் எனவும், இப்பள்ளியில் பயின்ற  முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றினை ஏற்படுத்தி அரசு உதவிகளுக்கு அப்பால் அதாவது காரமடை ஒன்றியம்-ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியைப் போல சர்வதேசப் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கி இங்குள்ள திறமையான ஆசிரியர்களைப் பயன்படுத்தி இப்பள்ளி மாணவர்கள் உயர்ந்த நிலை அடைய ஊர்மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த காட்சி மேலே உள்ள படம்.
         எங்கள் பள்ளி மாணவர்கள் கலை நயம் மிக்கவர்கள்.பொருளாதார வசதியில் பின்தங்கியிருந்தாலும் திறமை மிக்கவர்கள் எனப் பாராட்டி மாணவக்குழந்தைகளை நடனமாட அழைப்பு விடுத்த காட்சி மேலே உள்ள படம்.

        வேடர்நகர் அரசு துவக்கப்பள்ளி மாணவக்குழந்தைகள் நடனமாடிய காட்சி.

           எம் பள்ளி மாணவர்களுக்கு வில்லுப்பாட்டும் தெரியும் எனப்  பள்ளி ஆசிரியர்  திருமிகு.பாலகிருஷ்ணன் அவர்கள் அருகில் அமர்ந்து ஊக்கப்படுத்தும் காட்சி.கண்காணிக்கும் ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள் மேலே உள்ள படம்.
             ஒன்றாம் வகுப்பு மழலைகள்.இவர்களது நாடகம் ''கோழிக்குஞ்சு'' பாச உணர்வினை வெளிப்படுத்தும் நாடகம் இது. நடிக்கும் பள்ளிக் குழந்தைகள் அருகில் பயிற்சி கொடுத்த ஆசிரியைப்பெருமக்கள்

           இடது பக்கம் நிற்பவர்தாங்க '' கோழிக்குஞ்சு'' கதாபாத்திரம்.மிக நன்றாக இருந்தது.மேலே உள்ள படம்.

    இந்த கோழிக்குஞ்சு அதன் அம்மாவைத்தேடி காட்டில்- குருவி,வாத்து என ஒவ்வொரு  பறவையின் அருகில் சென்று ''கீ,கீ'' எனக்குரலிட்டு ''நீ என் அம்மாவா?'' எனக் கேட்கும் விதம், அதற்கு அந்த வேறு இனப்பறவைகள் ''நான் உனது அம்மா இல்லை. என தனது உடல் அடையாளங்களின் வேறுபாட்டை உதாரணத்திற்கு காட்டும் விதம்,இறுதியாக தாய்க்கோழியிடமே சென்று ''கீ,கீ,எனக் குரலில், நீ என் அம்மாவா?'' எனக்கேட்க, அந்தக்கோழி பாசமிகுதியால் ''வாடா மகனே!'' என வாரி அணைத்துக்கொள்ள,இந்த நாடகம் குழந்தைகள் நடிப்பால் மிகவும் ரசிக்கத்தகுந்த விதத்தில் அமைந்திருந்தது.

    வேடர் நகர் அரசு துவக்கப்பள்ளி மாணவ,மாணவியர் நடனத்திற்கு தயாராக உள்ளனர்.மேலே உள்ள படம்.

    பள்ளி மாணவிகள் நடனம் மேலே உள்ள படம்.
     வேடர் நகர் அரசு துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் அவர்கள் (இடது புறம் அமர்ந்திருப்பவர்)கிராமக்கல்விக் குழு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கண்காணித்த காட்சி மேலே உள்ள படம்.இவரது முன்னோர்கள் பல வசதிகளை இப்பள்ளிக்கு செய்து உள்ளதாகத் தகவல்.

    ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் சூரிக்குட்டை அரசு துவக்கப்பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய வள்ளல் நாகப்ப கவுடர் அவர்கள் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட காட்சி மேலே உள்ள படம்.  

  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள் அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக அளித்து வரும் வசதிகள் மற்றும் வசதிகள் பற்றி விளக்கி,பொதுமக்கள் பயன்பெறும் வழிமுறைகளை விவரித்த காட்சி.கண்காணிக்கும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள்.மேலே உள்ள படம்.

   சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் குழந்தைகளின் கலைத்திறனைப் பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.அருகில் ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சங்கீதா அவர்கள் ,திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள், புரவலர்,திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள், ஆசிரியர் திருமிகு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேலே உள்ள படம் இடமிருந்து வலமாக.
 

    சூரிக்குட்டை அரசுப்பள்ளிக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய வள்ளல் திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் ஆற்றிய சிலப்பதிகார காப்பிய உரை.இங்கு அனைவரும் கற்றுக்கொண்டவை 1)கற்றலில் கேட்டல் நன்று,2)கல்வியில் அரசியல் புகுத்தக்கூடாது,3)கண்ணகியைச் சுட்டிக்காட்டி பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,4)இலக்கியத்தைக்கற்று அதன்படி நீதி தவறாமல் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் 5)தவறு இருந்து சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்ள வேண்டும்.என்பது போன்ற பல சமூகம் உணர வேண்டிய பல விசயங்கள் திருமிகு நாகப்ப கவுடர் அவர்கள் எடுத்துரைத்தார்.கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மதிய உணவினைக்கூட மறந்து மதியம் இரண்டு மணிவரை திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் உரையினை ஆர்வமுடன் கேட்டனர்


   வேடர்நகர் அரசு துவக்கப்பள்ளி மாணவிகளின் நடனம்.


    நடனம் ஆடிய மாணவிகளைப்பாராட்டும் ஆசிரியர் திருமிகு.பாலகிருஷ்ணன் அவர்கள்.மேலே உள்ள படம்.

   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி மற்றும் தாளவாடி வடாரப்பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கல்வியின் அவசியம், பொருளாதாரத்தில்தான் தீண்டாமை,பெண் அடக்குமுறை,குறிக்கோள்,இலக்கு,நேர மேலாண்மை ,திட்டமிடல் உள்ளிட்ட பல சமூகம் சார்ந்த விசயங்களை எடுத்துரைத்தார்.

             பதிவேற்றம்;-    PARAMESWARAN.C
                                   TAMIL NADU SCIENCE FORUM
                                            SATHY & THALAVADY.







12 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-03

அன்பு நண்பர்களே, 
      தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.8-2-2012 இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மூன்றாவது நாள்.இன்று சத்தி-2   மையத்தில் கிராம மக்களின் ஈடுபாடு,அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவக்குழந்தைகளின் திறமைகள்,ஆசிரியப் பெருமக்களின் உழைப்பு ஆகியன பற்றி இந்த வலைப்பக்கத்தில் காண்போம்.



    கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சி முகாமின் மூன்றாவது நாள் விழாவிற்கு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் அரசின் கல்விக்கான நலத்திட்டங்கள் பற்றி விளக்குகின்றனர்.

    அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் ஆங்கிலத்திறமையை விவரிக்கிறார் ஆசிரியர் பயிற்றுனர் சாமுண்டீஸ்வரி அவர்கள்.

   அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அறிவியல் சம்பந்தமாக உரை நிகழ்த்திய காட்சி.

    அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவிகளின் சிறப்பான நடனக் காட்சி.


    கலைத்திறன்களை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவக்குழந்தைகளின் திறமைகளை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் அவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் கண்டு களிப்புற்ற காட்சி.

    குழந்தைகளின் குரங்கும் குல்லா வியாபாரியும் நாடகக்காட்சி.




 குரங்கும் குல்லாவியாபாரியும் நாடகக்காட்சியின் ஒருபகுதி மேலே உள்ள படம்..


     நகராட்சி துவக்கப்பள்ளியில் மூன்றாவது வகுப்பு பயிலும் க.சொர்ணப்பிரியா என்ற மாணவிடம்  குழந்தைத் தொழிலாளர் பற்றிய பாடல் பாடச்சொல்லிக் கேட்கிறார்  ஆசிரியை ஒருவர்.அந்தக்குழந்தையும் (க.சொர்ணப்பிரியா-மூன்றாம் வகுப்பு-நகராட்சித்துவக்கப்பள்ளி) சிட்டுக்குருவி தலையிலே பனங்காயைப்பாருங்க,பனங்காயைப்பாருங்க  சிற்றெறும்பு முதுகிலே பாறாங்கல்லைப்பாருங்க,பாறாங்கல்லைப்பாருங்க,  பத்து வயது முடியுமுன்னே குடும்ப பாரம்தானுங்க,குடும்ப பாரம் தானுங்க   என்பிஞ்சுக்கை உழைச்சாத்தான் நாளும் ஜீவன் வாழுங்க,நாளும் ஜீவன் வாழுங்க! என்ற இந்த  கொடூர மனதுடையோர் கல் மனதையும் இளக வைக்கும் குழந்தைத்தொழிலாளர் கொடுமை பற்றிய பாடல் இன்றைய பயிற்சி நாளின் மிகச்சிறப்பானதொரு இடத்தைப்பிடித்தது எனலாம்.(இந்தப்பாடலைக் கேட்ட பிறகு எனக்கு இதை மையமாக வைத்து ''மாற்றம் தேவை'' என்ற தலைப்பில்  ஒரு குறும்படம் ஒன்று எடுக்கலாம் என்ற எண்ணம் உருவாகிஉள்ளதுங்க.முயற்சிப்போம்)


    குழந்தைகளின் வில்லுப்பாட்டு சிறப்பாக இருந்தது.




       வேப்பிலை நடனமாடும்  மாணவிகளுடன் ஆடுவோர்  பயிற்சி அளித்த உள்ளூர் கிராம இளைஞர்கள்.மேலே உள்ள படம்.
     பள்ளிக்குழந்தைகளின் நடனத்திற்கு   ஊக்கம் கொடுக்கும் ஆசிரியையின் பத்ரகாளி வேடம்.மேலே உள்ள படம்.


   
மரியாதைக்குரிய துவக்கக்கல்வி அதிகாரி அவர்கள் குழந்தைகளைப்பாராட்டியதோடு அரசின் 1)கல்வி உரிமைச்சட்டம் 2)பெண் கல்விச்சட்டம் 3) இடைநின்ற குழந்தைகளின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதாரம் 4)கட்டாயக்கல்விச்சட்டம்  உட்பட அரசின் அனைவருக்கும்  கல்விக்கான இலவசம்,நலம்,வசதிகள்,அருகாமைப்பள்ளிகள்,கட்டடவசதிகள்,என பல சிறப்பான திட்டங்கள் பற்றி கிராம மக்களிடையே விவரித்த காட்சி,மேலே  உள்ள படம்





    ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை அவர்கள் விடுகதைப் புதிர் போட்ட காட்சி மேலே உள்ள படம்.


   விடுகதைப்புதிருக்கு விடையளித்த காட்சி மேலே உள்ள படம்.




     அரசு துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் அழகான தமிழ்மொழிசிறப்புப் பாடல் ஒன்று பாடிய காட்சி மேலே உள்ள படம்.

  கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தந்த பெரியவர் ஒருவர் கல்வியை வலியுறுத்தும் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப்  பாடி மையத்தினை மெய் சிலிர்க்க வைத்த காட்சி மேலே உள்ள படம்.

      பெண் கல்வியை வலியுறுத்தும் அந்த பழைய சினிமாப்பாடல் எங்களுக்கும் தெரியும் என பள்ளி மாணவிகள் பாடிய காட்சி மேலே உள்ள படம் அதனை ஆர்வமுடன் கேட்கும் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பெரியவர் .


   பள்ளிக்குழந்தைகளின் திறமைகளைக் கண்ணுற்ற பெண்மணி ஒருவர் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்களைப் பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.


    கிராமக்கல்விக்குழு உறுப்பினர் பயிற்சியில் பங்கேற்றவர் பாராட்டியதோடு பள்ளிக்குழந்தைகளுக்கு பாராட்டுப் பரிசுத்தொகை வழங்கிய காட்சி மேலே உள்ள படம்.

      ரங்க சமுத்திரம் பகுதி பள்ளிக்குழந்தைகளும் திறமையானவர்களே,என பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் கிராமக்கல்வி உறுப்பினர்.அருகில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்.மேலே உள்ள படம்.
    அரசு துவக்கப்பள்ளி மாணவக்குழந்தைகளுடன் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் இவர்களுடன் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்.மேலே உள்ள படம்.

    அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்விதத்திலும் திறமைகுறைந்தவர்களல்லர்.! என பயிற்சி முகாமில் ஆதாரத்துடன் வாதிட்ட பெண்மணி இவர் இரண்டு டிகிரி முடித்தவர்.விழிப்புணர்வு கொண்டவர்.மேலே உள்ள படம்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த கிராம இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் காட்சி மேலே உள்ள படம்.
     வேப்பிலை நடனம் பள்ளிக்குழந்தைகளுடன் ஆடிய இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.மேலே உள்ள படம்.

   மதிய உணவு வேளை.கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு உணவு பரிமாறும் ஆசிரியப்பெருமக்கள்.மேலே உள்ள படம்.
     பள்ளி மாணவி ஒருவர் கல்வி எங்களுக்கு சுமையில்லை எனப் பாடிய காட்சி மேலே உள்ள படம்.

   அறிவியல் சம்பந்தமான மற்றும் கல்வி விழிப்புணர்வு கொண்ட ஒளிப்படங்கள் திரையிட்ட காட்சி மேலே உள்ள படம்.
                  பதிவேற்றம்;- PARAMESWARAN.C
                                TAMIL NADU SCIENCE FORUM,
                                     SATHY & THALAVADY,
                                      ERODE DISTRICT.