07 ஜூன், 2012

புத்தக வாசிப்புப் பழக்கம்



புத்தக வாசிப்புப் பழக்கம் என்ன செய்யும்?


       சுயகல்வியைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை சகலவழிகளிலும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு மாறாக சுயகல்வியின் மீது பற்று இல்லாத அல்லது அதற்கான முயற்சிகள் கூட இல்லாதவர்களாக பலர் உள்ளனர். 

அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், பல்வேறு இன்னல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் உலகில் ஒருவித அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்க்கையை கடக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வாறு உள்ளவர்கள் எதிலும் ஈடுபாடு இல்லாதவர்களாக காலப்போக்கில் மாறி வருகிறார்கள் அது ஒரு இயந்திரத்தனமாக வாழ்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

எனவே சுயகல்விப் பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை உரிய வகையில் அமைத்துக்கொண்டு சமூக மாறுதலுக்கான பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாக மாற முடியும்.

தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை மேம்படுத்தும். அதேபோல் நாம் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சம் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என்பதாகும். கற்றுக்கொடுப்பது என்பதில் நாம் படித்தவைகளைத் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அல்லது ஒருவிஷயத்தைப் பற்றி மற்றவர்களுடன் விவாதங்களை நடத்துவது, கூட்டாகப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம்.

கற்பதும், கற்றுக்கொடுப்பதும் இணைந்ததாக வாழ்வு அமைந்தால் மனிதனின் வாழ்வு முன்னேற்றகரமாக அமையும். கற்பதும் கற்றுக்கொடுப்பதும் ஒரு உன்னதமான பணியாகும்.
 
    நன்றி;- புதுவை அறிவியல் இயக்கம்.

சோதிடத்திற்கு அடித்தளம் -அறியாமையும் அச்சமுமே



அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.
ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.
முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.
பேராசிரியர் கே. ராஜு Thanks for Psf - Pondy (புதுவை அறிவியல் இயக்கம்)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - செயல்பாடுகள் SALEM-TNSF

 

 

அன்பு நண்பர்களே,வணக்கம்.

             தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள உதாரணமாக எடுக்கப்பட்டுள்ள சேலம் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடு பற்றி கீழ்கண்டவாறு காணீர்!

Monday, May 28, 2012

சேலம் மாவட்ட செயற்குழுக் கூட்ட அறிக்கை


மூன்றாவது செயற்குழு கூட்ட அறிக்கை
1.அமைப்பு
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரந்திரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருமிகு.நமசிவாயம் அவர்களால் தன்னார்வத்துடன் நிர்வாகிக்கப்படுகிறது.
இரண்டாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம்
     இரண்டாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 ஜனவரி 6 மற்றும் 7ந் தேதிகளில் சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. உணவு மற்றும் வேண்டிய அனைத்தும் ஏற்பாடுகளும் மோகன் நகர் கிளைத்தலைவர் திருமிகு சர்மா, கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், கிளைப் பொருளாளர் திருமிகு பத்மநாபன், கிளை உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி மாவட்ட உதவித் தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் திருமிகு T.ஜெயமுருகன் ஆகியோரால் சிறப்பாக செய்யபட்டது.
உபக்குழு நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு G.சுரேஷ், திருமிகு J. பாலசரவணன், திருமிகு S. அய்யணார், திருமிகு சஹிரா பேகம், திருமிகு K.சந்திரசேகர், திருமிகு விஜியலக்ஷ்மி, ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன் ஆகியார் கலந்து கொண்டனர்.
6ந்தேதி இரவு தொலைநோக்கி நிகழ்ச்சி திருமிகு T.ஜெயமுருகன் அவர்களால் நடத்தப்பட்டது.
6ந் தேதி மாலை கூடங்குளம் அணுமின் உலை மற்றும் முல்லை பெரியாறு அணை பற்றிய இரு கருத்தரங்குகள் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் திருமிகு P.சகஸ்ரநாமம் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்ட உணவு ஏற்பாடு ஊராட்சி தலைவர் திருமிகு……………. அவர்களால் செய்யபட்டது.
மூன்றாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம்
     மூன்றாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 மே 19 மற்றும் 20ந் தேதிகளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

4வது மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
      4வது நிர்வாககுழுக் கூட்டம் 09/02/2012 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திருமிகு Dr. R. சாம்சன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.  நிர்வாககுழு
உறுப்பினர்கள் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு V.சீனிவாசன்  மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு S. அய்யணார், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
5வது மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
      23/03/2012 அன்று திருமிகு N. கோபால் அவர்கள் இல்லத்தில் திருமிகு M.கற்பகம் தலைமயில் 5வது நிர்வாக்குழு கூட்டம் நடைபற்றது. நிர்வாககுழு உறுப்பினர்கள் திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு N. கோபால், திருமிகு ஏற்காடு இளங்கோ மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு R. K. லால், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது மாவட்ட செயற்குழுக் கூட்டம்
      24/12/2011 அன்று இரண்டாவது மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்ட உதவித் தலவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில், தாரமங்கலத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சீனிவாசகரின் Nice Kids Collegeல் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திருமிகு ரமேஷ், திருமிகு சீனிவாசகர், திருமிகு விஸ்வநாதன், திருமிகு முரளிதரன், திருமிகு சந்தோஷ்குமார் ஆகியோர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். 16 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கிளை மற்றும் துளிர் இல்லம்
            28 துளிர் இல்லம் மாநிலத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. (தாரமங்கலத்தில்-15, தலைவாசல்-3, ஆத்தூர்-1, சேலம் உருக்காலை-1, நல்லண்ணம்பட்டியில்-3, கன்னந்தேரியில்-3, நெத்திமேடு-1, ஜாகிரம்மாபளையம்-1,) ஆத்தூர் ஜி.டி.நாயுடு துளிர் இல்லம் என மொத்தம் 29 துளிர் இல்லங்கள் உள்ளது.
      29/04/2012 அன்று குகை கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர்  திருமிகு G. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். 5 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்தெடுக்கபட்டது. தலைவராக திருமிகு ரேவதி அவர்களும், துணைத் தலைவராக திருமிகு செளடஸ்வரி அவர்களும், செயலாளராக திருமிகு கோகிலா அவர்களும், இணைச்செயலாளராக ராம்பிரசாத் அவர்களும், பொருளாராக திருமிகு தாரணி அவர்களும் தெர்தெடுக்கபட்டனர்.
     07/05/2012 அன்று குகை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து திருமிகு G. சுரேஷ் மற்றும் திருமிகு அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டார்.
                            
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்
தேசிய அறிவியல் தினப்போட்டிகள்
     தேசிய அறிவியல் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. தேசிய அறிவியல் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சொலவடை மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அளவில் கட்டுரைப் போட்டியில் இள்மபிள்ளை ஜோதி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி மாணவ்ர் திருமிகு ஹரி முதலாம் இடமும், கதைப் போட்டியில் திருமிகு மாலதி அவர்கள் இரண்டாம் இடமும், சொலவடைப் போட்டியில் திருமிகு நிர்மலா முதல் இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அறிவியல் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.
      28/02/2012 அன்று அன்னபூர்ணி பொறியியல் க்ல்லூரியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாளாராக திருமிகு T.ஜெயமுருகன் அவர்களும், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு R. ஜெயகுமார் அவர்களும் கலந்து கொண்டனர். 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
துளிர் இல்லம்
       08/04/2012 அன்று செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில் 30 குழந்தைகளுக்கு திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் 3 மணி நேரம் பாடல், கதை, விளையாட்டு, அறிவியல் என அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
       15,22,29/04/2012 மற்றும் 06/05/2015 ஆகிய நான்கு நாட்கள் செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில் 30 குழந்தைகளுக்கு திருமிகு G. சுரேஷ், திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு அறிவியல் நிகச்சிகளை நடத்தினார்கள்.
       13/05/2012 அன்று குகையில் சர்.சி.வி.ராமன் துளிர் இல்லத்தில் திருமிகு கலையரசன் அறிவியல் நிகச்சிகளை நடத்தினார். திருமிகு சண்முகசுந்திரம், குகை கிளைத் தலைவர் மற்றும் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளருமான திருமிகு ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
       15/05/2012 அன்று கன்னந்தேரியில் துளிர் இல்ல பயிற்சி மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, 60 குழந்தைகள் கலந்து கொண்டனர். கருத்தாளாராக திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டார்.
துளிர் இல்ல பயிற்சிமுகாம்
       10&11/03/2012 இரு நாட்கள் திருப்பூர் PEM Tech பள்ளியில் நடைபெற்ற மேற்கு மண்டல துளிர் இல்ல கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     01/04/2012 அன்று துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட அளவில் தாரமங்கலத்தில் கிராம பெண்கள் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு ஏற்காடு இள்ங்கோ, திருமிகு கலையரசன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன், மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு அமலராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக கலநது கொண்டு சிறப்பாக பயிற்சியளித்தனர்.
       14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கருத்தாளர்களாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு பழனி, திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருமிகு G. சுரேஷ், திருமிகு N. கோபால், ஆத்தூர் திருமிகு P. சீனிவாசன், தலைவாசல் திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி, திருமிகு கணேசன், திருமிகு மகேந்திரன், திருமிகு சித்ரா, திருமிகு பாக்யராஜ் திருமிகு முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் நிகழ்ச்சி
      03/01/2012 அன்று ஆத்தூர் மலர் மெட்ரிக் பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிவியல் எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ கலந்து கொண்ட அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 250 மாணவர்கள்.
                மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் 2012 ஜனவரி 5,6 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அறிவியல் இயக்க கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
      16/01/2012 அன்று மேட்டூர் தாய் தமிழ் பள்ளியில் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 100 மாணவர்கள்.
      02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 150 மாணவர்கள்.
       13/04/2012 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமயில் நடைபெற்ற தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் திருமிகு தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா? தந்திரமா? மற்றும் திருமிகு G. சுரேஷ் அறிவியல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
             12/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைபெற்றது.
       20/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி காடையாம்பட்டி, மாசிகவுண்டனூர் மற்றும் K.K. நகர் பள்ளிகளில் நடைபெற்றது.
3.கல்வி
புத்தக வாசிப்பு முகாம்
26/01/2012 அன்று மாலை 6 மணிக்கு திருமிகு R.பவளவள்ளி அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் ஆளுக்கொறு கிணறுதிருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு R.சசிகலா திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு கோபால், திருமிகு S. அய்யணார், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
26/01/2012 அன்று மாலை 6 மணிக்கு திருமிகு R. சசிகலா அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் வினயா”. திருமிகு R., சசிகலா, திருமிகு R.பவளவள்ளி, திருமிகு G. சுரேஷ், திருமிகு ஐடா பிரிசில்லா, திருமிகு நமச்சிவாயம், திருமிகு குரு அறுமுகம், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
28/04/2012 அன்று நல்லண்ணம்பட்டியில் 3 துளிர் இல்ல குழந்தகளுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் “சார்லஸ் டார்வின்”.  30  புத்தகங்களை நல்லண்ணம்பட்டி பள்ளி தலைமயாசிரும் மாவட்ட பொதுகுழு உறுப்பினருமான திருமிகு P.செங்கோடன் துளிர் இல்ல குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து புத்தக வாசிப்பு முகாம் நடத்தினார். கருத்தாளராக திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.
சக்சார் பாரத் திட்டம்
01/01/2012 அன்று மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மாநிலச் செயலாளர் திருமிகு S சுப்ரமணி, திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண் எழுத்தறிவு 50%க்கு குறைவாக உள்ள மாநிலங்களில் BGVS மற்றும் NHR இணைந்து நடத்தும் சக்சார் பாரத்என்னும் அகில இந்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென் மாநிலங்களில் கலைபயணம் நடைபெற்றது  ஒரு கலைகுழு ஈரோட்டிலிருந்து எடப்பாடி, சேலம், தர்மபுரி, ஆத்தூர் ஆகிய மூன்று இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு விழுப்புரம் சென்றது. இந்நிகழ்வையொட்டி நடைபெறும் “எனது கனவுகளில் எனது கிராமம்என்னும் தலைப்பில் மக்கள் கருத்துதாள் எழுதி வாங்குவது, விவாதங்கள் நடத்தி அதை தொகுப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.சந்திரசேகர் சிறப்பாக ஒருங்கிணைத்து நட்த்தினார்.
கிராமக் கல்வி குழு பயிற்சி முகாம்
      27,28 மற்றும் 29ந் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான கிராமக் கல்வி குழு பயிற்சி முகாமில் திருமிகு J.பாலசரவணன் கலந்து கொண்டார்.
      30,31/01/2012ல் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன், திருமிகு கற்பகம், திருமிகு தமிழய்யன் ஆகியோர் நமது இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
                கிராம கல்வி குழு பயிற்சிகளில் கருத்தாளர்களாக கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர்,  நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், அரிசிபாளையத்தில் திருமிகு M.கற்பகம், திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P. சீனிவாசன், திருமிகு தமிழய்யன், திருமிகு சாமிநாதன், திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி
      கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட பயிற்சிக்கு திருமிகு M.கற்பகம், திருமிகு சஹிரா பேகம், திருமிகு சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
      வாழப்பாடி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் இரு இடங்களில் கருத்தாளராக திருமிகு N. கோபால் கலந்து கொண்டார். அதில் வேப்பிலைபட்டியில் 150 உறுப்பினர்களும், வாழப்பாடியில் 40 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
      கன்ன்ங்குறிச்சி, கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் சொர்ணபுரி பகுதியில் கருத்தாளராக திருமிகு சஹிரா பேகம் கல்நது கொண்டார்.
      தாரமங்கலத்தில் திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு ரமேஷ், மேட்டூரில் திருமிகு இமயபாலன், திருமிகு சுப்ரமணி, ஆத்தூரில் திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P. சீனிவாசன், காக்காபாளையத்தில் திருமிகு இமயபாலன், நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், திருமிகு G. சுரேஷ், கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். மேற்கண்ட பயிற்சிகள் 2012 மார்ச் 19,20 & 21 தேதிகளில் நடைபெற்றது.

4.அறிவியல் வெளியீடு
     30/12/2012 அன்று புத்தக இருப்பு எடுக்கபட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன், திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார், திருமிகு நமச்சிவாயம் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் புத்தக இருப்பு எடுப்பதில் பங்கேற்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு. சந்தோஷ், திருமிகு ரமேஷ், திருமிகு கார்த்திக், திருமிகு ஸ்ரீனிவாசகர் திருமிகு செங்கோட்டுவெல் மற்றும் திருமிகு ராஜேந்திரசோழன்  உதவி.பேராசிரியர் . சுதா, மேட்டுர் கோவிந்தராஜன், ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 225 துளிர் மற்றும் 10 ஜந்தர் மந்தர்  விற்பனை செய்கின்றனர்.
மாதந்தோறும் 30 அறிவுதென்றல் வாங்கபடுகிறது.
பாரதி புத்தகலாய புத்தகங்கள் பாலம் புத்தக மையம் மூலம் சுமார் ரூ 10,000 மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது பணம் செலுத்தப்பட வேண்டும்.
திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்களிடம் இருந்து ரூ 5700 க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டு முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஆயுள் சந்தா 7, உறுப்பினர் ஆண்டு சந்தா 632,  துளிர் ஆண்டு சந்தா 88, துளிர் ஆயுள் சந்தா 1,  மற்றும் ஜந்தர் மந்தர் ஆண்டு சந்தா 11, விழுது சந்தா - 0, சேகரிக்கப்பட்டுள்ளது.
     
புத்தக விற்பனை
ஜனவரி 5 பட்டு வளர்ச்சி துறை நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.542, துணிப்பை ரூ720)
சீலநாய்க்கன்பட்டியில் வருமானவரி ஊழியர் சங்க மாநில மாநாட்டு 2012 ஜனவரி 6,7ந் தேதிகளில் நடைபெற்றது. திருமிகு நேதாஜி அவர்கள் உதவியுடன் திருமிகு நமச்சிவாயம் அவர்கள் விற்பனை செய்யபட்டது. (ரூ3011)
சேலம் உருக்காலையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1655) 
      26/01/2012 அன்று சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் LIC லைவிழா நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.3068). விற்பனையில் திருமிகு N. கோபால், திருமிகு நேதாஜி, திருமிகு R.பவளவள்ளி ஆகியோர் பங்க் பெற்றனர்.
      02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.2615).
      10/02/2012 அன்று கன்னந்தேரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1137).
      28/02/2012 அன்று அன்ன்பூர்ணி பொறியியல் க்ல்லூரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.986).
      01/04/2012 அன்று தாரமங்கலம் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.440).
      12/04/2012 அன்று நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.255).
       14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.280).
16/04/2012 அன்று நல்லண்னம் பட்டி துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.280).
      22/04/2012 அன்று சாலைப் பணியாளர்கள் சங்க மாநாட்டில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.300).
      28/04/2012- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1645).
19/05/2012 அன்று குஜராத்தி திருமண மண்டபத்தில் வணிகர் சங்க நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் மற்றும்& கற்பகம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1935).

5.சமம்
       சமம் மாநில உபக்குழு சார்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில் 25,26/02/2012 நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தின் சார்பாக சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம் அவர்கள் கல்ந்து கொண்டார்கள்.
சர்வதேச மகளிர் தினப்போட்டிகள்
             சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.

6.வளர்ச்சி
7.இதர
நிகழ்ச்சிகள்
       தலைவாசலில் நடைபெற்ற தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவில் திருமிகு N. கோபால் அவர்கள் கலந்து கொண்டு தலவாசல் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவியல் வெளியீடு புத்தகங்களை பரிசளித்தார்.
தானே புயல்
       தானே புயல் நிவாரணநிதி ரூ 11,200 வசூல் செய்யபட்டு கடலூர் மாவட்டச் செயலாளர் திருமிகு ரஜினி அவர்களிடம் அளிக்கப்பட்டது.
       மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன் அவர்கள் முதலவராக இருக்கும் மகேந்திரா பொறியியல் கல்லூரி நிர்வாகம் மூலம் சுமார் ரூ. 2,00,000க்கு மேல் மதிப்புள்ள போர்வை மற்றும் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களை கடலூர் மாவட்ட மக்களுக்கு அளித்து உத்வினார்கள்.

       சென்னையிலிருந்து தொலைநோக்கி வாங்கபட்டுள்ளது. திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு தினேஷ் இருவரும் சென்னை சென்று தொலைநோக்கி பயிற்சி எடுத்து கொண்டு தொலைநோக்கியை வாங்கி வந்தனர்.  
சமச்சீர் கல்வி வழக்கு நிதி
       சமச்சீர் கல்விக்கான பிரின்ஸ் கஜேந்திரபாபு நடத்திய வழக்குக்கு நிதி மாநில செயற்குழுவில் கேட்டு கொண்டதற்கிணங்க ரூ 11200 வசூல் செய்யபட்டு, மாநில மையத்திடம் தரப்பட்டது.



அன்புடன்

வெ.ராமமூர்த்தி - 94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.

வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு


  

Saturday, June 02, 2012

வெள்ளி இடைநகர்வு 2012 - 

            ஓர் அபூர்வ வான் நிகழ்வு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு
நம்வாழ்வின் கடைசி வாய்ப்பு
நாம் அனைவரும் இவ்வருடம் ஜூன் 6ம் தேதி வெள்ளி இடைநகர்வு எனும் ஓர் அபூர்வ வான்நிகழ்வைக் காண இருக்கிறோம். வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
            2004ம் ஆண்டு ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது. 121 வருடங்கள் கழித்து நடந்த இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது..
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எவ்வளவு என கணக்கிடப்பட்டது.
எப்போது காணலாம்?
                        இந்த நிகழ்வு ஐந்துகட்டங்களாக நடைபெறுகின்றது.
1.     வெள்ளி  நுழையும்முன் சூரியதட்டினை வெளிப்புறமாக தொடுதல்
2.     வெள்ளி முழுவதுமாக சூரியதட்டினுள் சென்றுவிடுதல்
3.     வெள்ளி நகர்வின் மையப்பகுதி
4.     வெள்ளி வெளியேறும் முன் சூரியதட்டின் உட்புறத்தைத் தொடுதல்
5.     முழுவதுமாக வெளியேறிவிடுதல்.
சென்னையில் இந்த ஐந்து கட்டங்கள் தெரியும் நேரங்களைக் கீழே காணவும்.


தமிழ்நாட்டின் தெற்கே செல்லச் செல்ல அதிகபட்சமாக 15 வினடிகள் வரை இந்நேரங்கள் தாமதமாகலாம். முதல் இரண்டுநிகழ்வுகளும் தமிழ்நாட்டில் சூரியோதயத்திற்குமுன் நடப்பதால் நம்மால் காண இயலாது. சூரியன் உதித்ததிலிருந்து (காலை 5.41 மணி முதல்) கடைசி  நிகழ்வுவரை நம்மால் காண இயலும்.

வெள்ளி இடைநகர்வு தெரிந்த / தெரியும்  வருடங்கள்
ஜுன்

1761
1769

2004
2012

2247
2255
டிசம்பர்
1631
1639

1874
1882

2117
2125


இந்நிகழ்வை எவ்வாறு காண்பது?
இந்நிகழ்வினைப் பார்க்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.
1.     சூரியகண்ணாடிகள் அல்லது வெல்டிங்கிலாஸ் மூலம் தொடர்து பார்க்காமல் சில வினாடிகள் மட்டும் பார்த்தல்,,
2.     சிறிய கையடக்கக் கண்ணாடி( எந்த வடிவமானாலும் சரி) மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையின் சுவற்றில் வீழ்த்திப் பார்த்தல், செய்முறையை கீழே காணவும். 
3.     தொலைநோக்கி மூலம் பிம்பத்தை திரையில் வீழ்த்திப் பார்த்தல்.
எச்சரிக்கை! ஒருபோதும் சூரியனை நேரடியாகக் காணாதீர்! ஏனெனில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் நம் கண்ணிலுள்ள லென்சுகளால் குவிக்கப்பட்டு விழித்திரை நிரந்தமாக பாதிக்கப்படும். எனவே பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

செய்முறை
தேவையான பொருட்கள்: சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, சுமார் 1செ.மீ விட்டம்   துளையிட்ட அட்டை
1.     சிறிய கண்ணாடி (Pocket mirror) மூலம் சூரிய வெளிச்சத்தை இருட்டறையில் புள்ளிகளற்ற சமதளமான வெள்ளை சுவற்றிலோ அல்லது காகிதத்திலோ விழச்செய்யவும்.
2.     கண்ணாடியின் முன்பாக சுமார் ½ மீட்டர் தூரத்தில், துளையிட்ட அட்டையை கண்ணாடிக்கு செங்குத்தாக பிடிக்கவும்.அல்லது அதை இடைவெளி இல்லாது கண்ணாடியில் ஒட்டிவிடவும்.
3.     இப்போது சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் காணலாம். மேலும் அதில் சூரியபுள்ளிகளையும், வெள்ளி கோள் கடந்து செல்வதையும் காணலாம்.
4.     சூரிய பிம்பத்தின் விட்டம் 12-15 செ.மீ இருப்பதால் கரும்புள்ளியாகத் தெரியும் வெள்ளியின் விட்டம் 3.5 – 4.5 மி.மீ இருக்கும்.
குறிப்பு:
1.     15 செ.மீ விட்டம் உள்ள பிம்பம் தெரிய வேண்டுமானால் 15மீ (50 அடி) தூரத்திலிருந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யவேண்டும். அதாவது X செ.மீ விட்டம் உள்ள பிம்பம் வேண்டுமெனில் X தூரத்திலிருந்து கண்ணாடியை பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
2.     விட்டம் பெரியதாக ஆக, பிம்பத்தின் வெளிச்சம் குறைந்து கொண்டே வரும்.
3.     பிம்பத்தினை ஒரு வரைபடத்தாளில் (graph Sheet) விழச்செய்து, சூரியன் மற்றும் வெள்ளியின் பிம்பங்களை ஒரே நேரத்தில் வரைந்தால், வெள்ளியைவிட சூரியனின் பிம்பம் எத்தனை மடங்கு பெரியதாக இருக்கிறது எனக் கணக்கிடலாம்.

பாதுகாப்பான முறையில் இந்த அரியநிகழ்வை தாங்கள் ஜூன் 6 அன்று காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்கள்! நன்றி;- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - சேலம்