30 ஜனவரி, 2012

மாவட்ட அளவிலான கிராம கல்விக்குழு துவக்கவிழா

அன்பு நண்பர்களே,வணக்கம்.
             

            இன்று ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு அலுவலகத்தில் மாவட்ட அளவிலான கிராம கல்விக்குழு துவக்க விழா நடைபெற்றது.
       

       

                        நிகழ்ச்சி நிரல் விபரம்
        இறை வணக்கம்= தமிழ்த்தாய் வாழ்த்து,
        வரவேற்புரை= உதவி திட்ட அலுவலர் அவர்கள்,
        தலைமை உரை = கூடுதல் முதன்மை அலுவலர் அவர்கள்,
        சிறப்பு துவக்கவுரை = பேரா. ந. மணி அவர்கள்,
       நன்றியுரை = திரு.சந்திர சேகர் அவர்கள்,மாவட்ட அலுவலர் ,














    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் திருமிகு.பிரபாகரன் அவர்களது மந்திரமாக்கப்பட்ட தந்திரம் என்ற விழிப்புணர்வு செயல்விளக்கம் காட்டப்பட்டது.
  

19 ஜனவரி, 2012

புதுவை அறிவியல் இயக்கம்.&விஞ்ஞான பிரச்சார்-2012

                               அன்பு நண்பர்களே,
          தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி மையம்-ஈரோடு மாவட்டம் சார்பாக தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          கடந்த 17-ந்தேதி 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி-அதாவது ஜனவரி2012-ல் புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புது டெல்லி-விஞ்ஞான் பிரச்சார் சார்பாக நடத்தப்பட்ட  புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சிப் பயிலரங்கத்தின் கண்ணோட்டம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

            அறிவியல் பயிற்சிப்பட்டறையின்  விழாப் பெயர்ப் பலகையின் தோற்றம் இது மேலே உள்ள படம்.


              புதுவை அறிவியல் இயக்கம், புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்புடன் இணைந்து நடத்திய புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சி பயிலரங்கு நடைபெற்ற பள்ளியின் முகப்பு அறைத்தோற்றம் மேலே உள்ள படம்.(கர்நாடக மாநில நண்பர்(KSF),தமிழ்நாடு மாநில நண்பர்(TNSF),புதுவை மாநில நண்பர்(PSF) ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சியுடன்.)      
 

     
            புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி திருமிகு.T.V.வெங்கடேஷ்வரன் அவர்கள் அறிவியல் செய்முறைப் பயிலரங்கத்தினைத் துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.ஸ்ரீதரன் அவர்கள்,திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்கள்,திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள்,திருமிகு.S.சீனிவாசன் அவர்கள்.

       
               புதுவை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள் பயிலரங்கத் துவக்கத்தின்போது இந்தப் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தை எடுத்துரைத்த காட்சி மேலே உள்ள படம்.



             எளிதில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு செய்யும் அறிவியல் பயிற்சியின் எளிமை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்குகிறார் பிரான்ஸ் நாட்டின் ஒடிசா பாரீஸ் சௌத்-11 பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் (ஓய்வு) அவர்கள் மேலே உள்ள படம்.



     

             புதுவை அறிவியல் இயக்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான திருமிகு.A.ஹேமாவதி அவர்களது உரையில்  பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தென்னிந்திய வட்டார அறிவியல் ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை அனைத்து எளிய மக்களுக்கும்,மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட  காட்சி மேலே உள்ள படம்.


திருமிகு.பேரா.பியர் பான்த்ஸ் அவர்கள்  அறிவியல் செய்முறை விளக்கம் கொடுத்த காட்சி மேலே உள்ள படம்.



திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்களதுஅறிவியல் விளக்கத்திற்கான  பிரெஞ்ச் மொழியின்  உரையினை, புதுவையில் உள்ள பிரெஞ்ச் பள்ளி இயற்பியல் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் இயக்க நண்பர்களுக்காக மொழி பெயர்த்து விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

            ஆந்திரா மாநில அறிவியல் இயக்க ஆசிரியப்பெருமக்கள் அறிவியல் விளக்கத்தினை ஏற்கும் காட்சி மேலே உள்ள படம்.


       கர்நாடகா மாநில அறிவியல் இயக்க அமைப்பாளர் அவர்கள் அறிவியல் செய்முறை விளக்கத்தினை சோதித்து தெளிவு பெறும் காட்சி.அதனை நோக்குபவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையத்தினைச் சேர்ந்த ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

           கேரளா மாநில அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் அறிவியல் செய்முறைகளைப் பரிசோதிக்கும் காட்சி மேலே உள்ள படம்.



      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் ஈரோடு மாவட்ட தாளவாடி மையம்-பள்ளி ஆசிரியர் அறிவியல் பரிசோதனை செய்து பார்க்கும் காட்சி மேலே உள்ள படம்.



அறிவியல் பரிசோதனை எல்லாம் கடைகளில் கிடைக்கும் சோப்பு ஆயில் மற்றும் தண்ணீரிலும் செய்யலாங்க! என்கின்றனர்,கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மேலே உள்ள படம்.


  ஆந்திர மாநில அறிவியல் இயக்க ஆசிரியர் சந்தேகத்திற்கான விளக்கம் பெற அந்த விளக்கம் தனக்கும் தேவை என்ற நோக்கில் அருகில் ஆர்வமுடன் கேட்டறிகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.



           கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் தங்கிஇருந்த விடுதிக்கு வந்து உடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்த ஆசிரியர் திருமிகு.விசாகன்-புதுச்சேரி, அவர்கள் மேலே உள்ள படம்.
       
The Alliance Francaise Of  Pondicherry வழங்கிய பொங்கல் திருவிழா 18-ந்தேதி இரவு 7-00மணிக்கு கடற்கரை அருகில் உள்ள  Maison Colombani -இல் நடந்த Clowns Sans Frontieres circus என்னும்  கலை நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்துகொண்டு மகிழ்வுற்ற காட்சி- மேலே உள்ள படம். (இந்நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க உதவிய புதுச்சேரி ஆசிரியர் திருமிகு. விசாகன் அவர்களுக்கு நன்றி!)
           கீழே உள்ள படத்தின் வலது கடைசியில் உள்ளவர் திருமிகு.விசாகன் புதுச்சேரி ஆசிரியர் அவர்கள் அவர்தம் வாரிசுடன்.!!!


   
                அன்பு நண்பர்களே,வணக்கம்.


              புதுவை அறிவியல் இயக்கம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார அமைப்பு என்னும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து கடந்த 17,18 & 19 ஜனவரி-2012 ஆகிய மூன்று நாட்கள்

          புதுச்சேரி, கண்ணன் நகரில் அமைந்துள்ள கோவிந்தபிள்ளை வீதியில் செயல்படும்- வெற்றி வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் மேல்தளத்தில் அமைந்துள்ள
     
          வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்-

           நூதன எளிய அறிவியல் செய்முறைப் பயிலரங்கு  நடத்தியது.இங்கு மூன்று நாட்களும் சுமார் 15+22+31 என 68-க்கும் அதிகமான அறிவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சிறு கிராமத்தில் எளிமையாகக்கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களைக்கொண்டு நிகழும் அறிவியல் விளைவுகளைச் செய்து காட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டன.
              இந்தப்பயிற்சியில் நியூட்டன் விதி,பாஸ்கல் விதி,கலிலியோ விதி, வேதிவினை மாற்றம் மற்றும் இயற்கையின் மாற்றம்&தோற்றம் எனப் பலவிதப் பயன்பாடுகள் அடங்கிய செய்முறைகள் எளிமையாக,தெளிவாக,ஆர்வமூட்டும் வகையில் எடுத்தாளப்பட்டன.

          ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியப்பெருமக்களும்,அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த அறிவியல் ஆக்கங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவக் கண்மணிகள் உட்பட சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்படும். என அந்தப்பயனாளர்கள் தெரிவித்தனர்.
                அடுத்து வரும்  21, 22 & 23 தேதிகளில் போபால் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  போபாலிலும்,அடுத்ததாக ஹிமாசலப்பிரதேச மாநிலம் -மாண்டியிலும் இந்த நூதன எளிய அறிவியல் பயிற்சி அளிக்கப்போவதாக இந்த அறிவியல் பயிற்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
                          
               இதன் நோக்கம் நமக்கு முன்னே இருக்கும் அறிவியல் நிகழ்வுகளை கண்டறியவைப்பதும்,அதனால் கிராமப்பகுதியினைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் கிடைக்கும் எளிய பொருட்களைக்கொண்டு அறிவியல் நிகழ்வுகளைச் செய்யவைத்து அதன்விளைவாக அறிவியலில் ஆர்வத்தினைத் தூண்டச் செய்வதும்   ஆகும் எனவும் தெரிவித்தனர்.  தென்னிந்திய அளவிலான அறிவியல் பயிற்சி பயிலரங்கத்தினை நடத்திய புதுச்சேரி அறிவியல் இயக்கத்தினரால் இப்பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று நாட்களும் - உண்ண உணவு,  தங்குவதற்கு  ஏற்ற  உறைவிடம் ஆகியன சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.இரவு பகல் பாராமல் தேவைக்கேற்ப உதவிகள் செய்த  புதுச்சேரி அறிவியல் இயக்க அனைத்து அறிவியல்ஆர்வலர்கள் & ஆசிரியர்களுக்கு  அவர்களது சேவை மனப்பான்மையினை '' தமிழ்நாடு அறிவியல் இயக்கம்'' சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். என,,,,,,,,,,

         

                                                   கீழே உள்ள படம்  
(நண்பர்களது அன்புத்தொல்லை தாங்கமுடியாமல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது).
   பேரா.பியர் பான்த்ஸ் (பிரான்ஸ்) மற்றும் பரமேஸ்வரன்.C
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம்-ஈரோடு மாவட்டம்.                                


                           பதிவேற்றம்;- PARAMES DRIVER
                                   TAMILNADU SCIENCE FORUM- THALAVADY
                                                         ERODE DISTRICT-
                                       DATE:-20-JANUARY - 2012 FRI DAY.

06 ஜனவரி, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி


     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   tnsfthalavady.blogspot.com    வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      
    '' விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்''

          23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-
                  (1) ரோட்டரி கிளப் தாளவாடி,  (2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,  (3)காவல்துறை தாளவாடி,   (4)சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம்,  இணைந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். 
           தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
            (1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி   (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி,  (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம்,   (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை,  (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
             
       முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.

         அனைத்து பள்ளிக்குழந்தைகள்&ஆசிரியர்கள் குழுவின்  பேரணியை தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாத்தினுள் ''கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்'' திருமிகு.M.சிங்காரவேலு B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள்.அருகில்  தாளவாடி பஞ்சாயத்துத்தலைவர் அவர்கள் மற்றும் திகினாரை பஞ்சாயத்து தலைவர் திருமிகு. காளநாயக்கர் அவர்கள்.இவர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள்&பணியாளர்கள்,பொது மக்கள்.(மேலே)





    பேரணியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் பேருந்து நிலையத்தினுள் ,(வெயில் காரணமாக).(மேலே)




 பள்ளிக்குழந்தைகள் ''மத ஒற்றுமைக்கு நல்லிணக்கமாக விளங்கும்'' கோவில்கள் முன்பு ''சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்'' வந்த காட்சி.(மேலே)



                         ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழு'' 
         திருமிகு.சாந்தமல்லப்பா -ரோட்டரி கிளப் தாளவாடித் தலைவர் -அவர்கள் தலைமையுரை ஆற்றிய காட்சி.(மேலே)


         திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர்  சத்தியமங்கலம் அவர்கள்   சாலைப்பாதுகாப்பின் அவசியத்தையும்,விபத்திலிருந்து நம்மைக்காத்துக்கொள்வது பற்றியும் சிறப்புரை ஆற்றிய காட்சி.(மேலே).




             தாளவாடி(CIRCLE) காவல்துறை ஆய்வாளர் திருமிகு.கா.தங்கவேல் -அவர்கள் போக்குவரத்துக்குற்றங்களும்,சட்டங்களும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)


             திருமிகு.அரிமா.K.லோகநாதன் கோபி&சத்தி வட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கத்தலைவர் அவர்கள்- ஓட்டுனர் உரிமம் எடுப்பதன் அவசியத்தையும்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,இன்சூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தையும் விளக்கிய காட்சி.(மேலே)




     திருமிகு.S.வியானி (DIVINE & ROTARY CLUB)அவர்கள் தனிநபர் வாகனக்குறைப்பின் அவசியத்தையும், அதனால் போக்குவரத்து நெரிசல் குறைவும்,சுற்றுச்சூழல் மாசு குறைவும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)



          திருமிகு. அந்தோணி முத்து-(PALM-2 & TNSF) அவர்கள் அங்குள்ள கன்னட மொழி மட்டும் தெரிந்த மக்களுக்காக ''கன்னடமொழியில்'' சாலை விபத்துக்கு நமது அறியாமை  ,தெரிந்தும் செய்யும் தவறுகள் பற்றியும் - சாலைப் பயணத்தின் பாதுகாப்பு பற்றியும் கன்னடமொழியில் விவரித்த காட்சி.(மேலே)


      திருமிகு.மனோஜ் ஆசிரியர் மற்றும் குழுமத்தினர்- டிவைன் மெட்ரிக் பள்ளி ஆகியோர் சாலை விழிப்புணர்வுப்பாடல் பாடிய காட்சி.(மேலே)








             திருமிகு. A.P.ராஜ் (TNSF)அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சமூக அக்கறையின்பேரில் சாலைப்பாதுகாப்பு விழா எடுத்த (1)ரோட்டரி கிளப்,(2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,(3)தாளவாடி காவல்துறை,(4)கோபி மற்றும் சத்தி வட்டார போக்குவரத்துத்துறை இவர்களுடன் துணை நின்ற சத்தி&கோபி வட்டஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர்&உரிமையாளர்கள்,பொதுமக்கள்,பேரணியில் கலந்து கொண்ட அனைத்துப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும்ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றி கட்டுரைகள் எழுதிக்கொடுத்த அனைத்து மாணவ,மாணவியருக்கும்   நன்றி! நவிழ்ந்த காட்சி.(மேலே)





             வரவேற்புரை வழங்கிய  திருமிகு.பரமேஸ்வரன்(TNSF) அவர்கள்        '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதிய அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் அவரவர் பயிலும் பள்ளிகளின் இந்த வருடம் நடைபெறும் ஆண்டு விழாவின்போது பாராட்டுச்சான்றும்,பரிசும் வழங்கப்படும் என அறிவித்த காட்சி.மேலும் சூசைபுரம் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு இயக்கம் (R.S.P)  மற்றும் டிவைன் மெட்ரிக் பள்ளியில் சாலைப்பாதுகாப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அறிந்து பாராட்டு நல்கிய காட்சி.(மேலே)
               23-வது சாலை பாதுகாப்பு 
      விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
             நாள்;- 06-01-2012.
      இடம்;- தாளவாடி பேருந்து நிலையம்.
    நேரம்;-காலை 10-00மணி முதல் 12-00மணிவரை.

       தலைமை;- திருமிகு.சாந்தமல்லப்பா  அவர்கள்,
                          தலைவர்-  ரோட்டரி சங்கம்-தாளவாடி.

     முன்னிலை;- திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                              காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி,

வரவேற்புரை;- திருமிகு.C.பரமேஸ்வரன்  அவர்கள்,
                      தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி,
  
      தலைமையுரை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
             தலைவர்-ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
      சிறப்புரை;- திருமிகு. சிங்காரவேலு அவர்கள்,
           மோட்டார் வாகன ஆய்வாளர் -சத்தியமங்கலம்.
       திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                            காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி(CIRCLE).
       
       திருமிகு.அரிமா.K.லோகநாதன் அவர்கள்,
                  தலைவர்- கோபி & சத்தி வட்ட ஓட்டுனர்பயிற்சிப்பள்ளி.
    
        திருமிகு.S.மரிய அருள் வியானி அவர்கள்,
                      டிவைன் பள்ளி  மற்றும் ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
        திருமிகு.அந்தோணி முத்து அவர்கள்,(PALM-2)
                    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.

          விழிப்புணர்வுப்பாடல்;- 
         திருமிகு.மனோஜ் ஆசிரியர்,மற்றும் 
                                 குழுமத்தினர்
                            டிவைன் மெட்ரிக் பள்ளி - தாளவாடி.

          நன்றியுரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி. 

நன்றிகள்;-             
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம்  அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
                (2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
     ''தாளவாடி வட்டார  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு'' 
    சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.       
                        ROTARY CLUB OF THALAVADY,
               TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
               POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
            REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
                    ASSOCIATION OF DRIVING SCHOOLS,
                         ALL SCHOOLS OF THALAVADY.
 ======================================================================
 tnsfthalavady.blogspot.com //  paramesdriver.blogspot.com // konguthendral.blogspot.com //




05 ஜனவரி, 2012

23-வதுசாலை பாதுகாப்பு வாரம்-2012-கோபி செட்டிபாளையம்

  
                    


அன்பு நண்பர்களே,வணக்கம்.

   கோபி செட்டிபாளையத்தில் 5-1-2012 அன்று நடந்த 23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதுங்க.மேலே உள்ள படம்.

   23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியைத்துவக்கிவைத்த கோபி வட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து விபத்தினைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கை என ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி.அருகில் கோபி செட்டிபாளையம் திருமிகு. நகராட்சித்தலைவி அவர்கள். மேலே உள்ள படம்.




          கோபி செட்டிபாளையத்தில் 23-வது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிக்காக உடனடியாக ஒரே நாளில் கோபி வட்டார அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள்,உரிமையாளர்கள்,சமூக அமைப்புகள்,மகளிர் கல்லூரி என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த கோபி வட்ட காவல்துறை ஆய்வாளர் மரியாதைக்குரிய ஐயா,இளங்கோ அவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப்பேரணி நடத்துவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி வாயிலாக அறிவுரை கூறுகிறார்.மேலே உள்ள படம்.




      கோபி செட்டிபாளையத்தில் 23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட சமூக அமைப்புகளில் ஒரு பகுதி இங்கு .




                                 நமது கோபி மாநகரில்05-01-2012 இன்றுகாலை 10-00மணிக்கு 23-வது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவினை மரியாதைக்குரிய கோபி செட்டிபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஐயா, அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினார்.

        திருமிகு.நகராட்சி மன்றத்தலைவி அவர்களும்,திருமிகு.வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்திருமிகு. ரகுபதி M.V.I. அவர்களும் மற்றும் இவ்விழாவினில் கலந்து கொண்ட அனைத்து சமூக ஆர்வலர்கள்,அமைப்புகள்,மோட்டார் வாகனம் சம்பந்த அனைவரின் சார்பாக ஒவ்வொருவர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினர்.

               பின்னர் மரியாதைக்குரிய துணைக்கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து பேரணியைத்துவக்கி வைத்தார்.பேரணியில்  கோபி P.K.R.மகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.மேலும் கோபி வட்டார அனைத்து சுற்றுலா வேன்,கார்,டெம்போ,ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நல சங்கங்கள்,காவல்துறையினர்,வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,வட்டாட்சியர் அலுவலர்கள்,பணியாளர்கள் என பல்வேறு சாலையைப்பயன்படுத்துவோர்கள் கலந்து கொண்டனர்.
            பேரணி காவல் நிலையத்திலிருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் சென்று நிறைவடைந்தது. 
             பதிவேற்றம்;- PARAMESDRIVER // 
          TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY

04 ஜனவரி, 2012

சாலைப் பாதுகாப்பு-2012

      அன்பு நண்பர்களே,வணக்கம். 
                   தாளவாடி ரோட்டரி சங்கம் 
              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
                  தாளவாடி காவல்துறை மற்றும் தாளவாடி வட்டார அனைத்துப் பள்ளி மாணவ,மாணவியர் இவர்களுடன்
    சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து 6-1-2012 இன்று நடத்தும் 
              23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
   ''விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்''
                   " ACCIDENTS BRING TEARS - SAFETY BRING CHEER"
  அன்புடையீர், பெருகி வரும் வாகனப்பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொறுமையில்லாமல் நமது அவசரத்தால் ,அலட்சியத்தால்,கவனக்குறைவால்,அனுசரிப்பு இல்லாததால்,சாலையை ஆக்கிரமிப்பு செய்வதால்,சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதால் -விபத்து ஏற்பட்டு அதனால் விலைமதிப்பில்லா உயிர் இழப்பும்,பொருட்சேதமும் ஏற்படுகின்றன.இதனைத் தவிர்க்கும் பொருட்டு இந்த சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் அனைவரும் கலந்து இனிய பயணத்தை உறுதி செய்து வீட்டையும்,நாட்டையும் காப்பீர்.
      
            உங்கள் கவனத்திற்கு
  ( 1) சாலைப்பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு.
  (2) சாலை விதிகளை மதிப்போம்,விபத்தினைத்தவிர்ப்போம்.
  (3) அனுசரித்து வாகனம் ஓட்டுவோம்.
  (4) அதிக வேகம்,விபத்தாக முடியும்.
  (5) பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் பெரிது.
  (6) உங்கள் கவனம் ரோட்டின் மேலே. இருக்கட்டும்.
  (7) ஓடும் பேருந்தில் ஏறாதீர் அல்லது இறங்காதீர்.
  (8) வண்டி நின்றபிறகு இறங்குவீர்.
 (9)சரக்கு வாகனங்களில் பயணம் செய்யாதீர்.
 (10) குடி போதையில் வாகனம் ஓட்டாதீர்.
 (11) அதிக பாரம் ஏற்றாதீர்.
 (12) தலைக்கவசம் உயிர்க்கவசம்.
 (13)சாலையை ஆக்கிரமிப்பு செய்யாதீர்.
 (14)சாலையைக்கடக்கும்போது இருபுறமும் கவனித்து கடக்கவும்.
 (15) இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்.
(16) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்.
(17)குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்.
(18) தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்.
 (19) போட்டிமனப்பான்மை வேண்டாம்.
  (20) கை சைகை சாலையின்மொழியாகும்.
   
  

02 ஜனவரி, 2012

சாலை பாதுகாப்பு வாரம்-2012

                    ''ACCIDENTS BRING TEARS - SAFETY BRING CHEER''
   ''விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம் ''

அன்பு நண்பர்களே,வணக்கம். 
               சாலை பாதுகாப்பு வாரம்-2012 
     தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை மற்றும் சுழற்சங்கம்(ROTARY CLUB) தாளவாடி,காவல்துறை & வட்டார போக்குவரத்துக்கழகம்-சத்தி ஆகியன இணைந்து  
        வருகிற 5-ந்தேதி அன்று தாளவாடி வட்டார காவல்துறை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,போக்குவரத்துக்கழகம்,தனியார் அனைத்து ரக வாகன ஓட்டுனர்கள்,உரிமையாளர்கள்,பொதுமக்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து பேரணி நடத்தி  விழிப்புணர்வு கொடுக்கின்றன. 

            ''சாலை விபத்து ஏன் ஏற்படுகிறது? 
     சாலை விபத்தினைத்தடுக்க என்ன செய்வது?''
  
           என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி .இவை தவிர விழிப்புணர்வுக்கருத்தரங்கம் &சாலை பாதுகாப்பு பற்றிய குறும்படம் திரையிடல்,முதலுதவி தெரிந்துகொள்வதின் அவசியம் ஆகிய நிகழ்வுகள் நடத்துகின்றன. கருத்துப்பதிவும் பொதுமக்களிடையே கேட்டறிந்து பதிவு செய்யப்படுகிறது. 

     சிறந்த கட்டுரைகள் மற்றும்கருத்துப்பதிவுகளுக்கு அறிவியல் இயக்கம் சார்பாக பாராட்டுச்சான்றுகளும்,புத்தகங்களும்  வழங்கி சிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
         மேலும் விபரங்களுக்கு, 
                PARAMESWARAN.C ,
               MOBILE NUMBER= 9585600733  

   கட்டுரைகள்  அனுப்ப வேண்டிய முகவரி
             [கடைசிநாள்-07-01-2012]
           (1) செயலாளர்,
     தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
          தாளவாடி கிளை. -638461
              ஈரோடு மாவட்டம்.

          (2)  தலைவர்,
  ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி
     தாளவாடி-638461 
    சத்தி தாலூகா - ஈரோடு மாவட்டம்.
                       என  tnsfthalavady.blogspot.com