09 ஜனவரி, 2013

தாளவாடியில் சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013

அன்பு நண்பர்களே,வணக்கம். 
      சாலைப் பாதுகாப்பு வாரவிழா-2013 தாளவாடியில் நடைபெற்ற நிறைவு நாளான 07-01-2013  இன்று சத்தியமங்கலம்  மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறைகளைச்சார்ந்த அதிகாரிகளும்,ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும்,சமூக ஆர்வலர்களும்,சமூக நல அமைப்புகளும்,ஓட்டுனர்கள்,வாகன உரிமையாளர்கள்,பள்ளி மாணவ,மாணவியர்கள் உட்பட பேரணியில் மற்றும் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்தனர்.



                தாளவாடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திருமிகு.சிங்காரவேலு அவர்கள் (நிலை-1) மோட்டார் வாகன ஆய்வாளர்  திருமிகு.முகுந்தன் அவர்கள் (நிலை-2) மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ,திருமிகு.பாபு அவர்கள்,திருமிகு. லோகு ஓட்டுனர் பயிற்சி பள்ளி அவர்கள்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ் அவர்கள்,டிவைன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் அவர்கள்,ஜே.எஸ்.எஸ்.ஐ.டி.ஐ.மற்றும் தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர் சங்கத்தலைவர் திருமிகு.ஜோசப் அவர்கள் தாளவாடி.  சாலை பாதுகாப்புவார விழா ஒருங்கிணைப்பாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் இவர்களுடன் பள்ளி மாணவக்குழந்தைகள் பேரணி.





      திருமிகு.சிங்காரவேலு அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு.முகுந்தன் அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ,இவர்களுடன் திருமிகு.பாபு அவர்கள்   தாளவாடி  மனித உரிமைகள் கழகம்  தலைவர்  மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் நிறுவனர் திருமிகு.லோகநாதன் அவர்கள்

               தாளவாடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத ஒற்றுமைக்கு இலக்கணம் வகுக்கும் இந்து & முஸ்லீம் புண்ணிய தலங்களின் முன்பு சாலைப்பாதுகாப்பு பேரணி ..


             சாலை பாதுகாப்பு நிறைவுவிழாவில் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் தலைமை உரையாற்றிய காட்சி..

              திருமிகு.சிங்காரவேலு அவர்கள் (நிலை-1)மோட்டார் வாகன ஆய்வாளர்-சத்தியமங்கலம். சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்க உரை.நம்ம தாளவாடியில்.


           திருமிகு.சார்லஸ் அவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்-தாளவாடி   சாலைப்பாதுகாப்பு உரை.


             திருமிகு.முகுந்தன் அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 - சத்தியமங்கலம் நம்ம தாளவாடியில்  சாலைபாதுகாப்பு உரையாற்றிய காட்சி.


   திருமிகு.A.P. ராஜ் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மற்றும் அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர் அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழா பொதுக்கூட்டத்தில் வரவேற்பு மற்றும் சிறப்புரை.



         சிறந்த ஓட்டுனருக்கான பாராட்டும்,பரிசும் தாளவாடி டெம்போ ஓட்டுனர் திருமிகு.மணி அவர்களுக்கு திருமிகு.சிங்காரவேலு அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் பராட்டும் பரிசும் வழங்கினார்.சாலைப்போக்குவரத்தில் மற்ற ஓட்டுனர்களை விட  அனுசரிப்பு மற்றும் பொறுமையைக்கடைப்பிடித்தல் ஆகிய காரணங்களில்மற்ற ஓட்டுனர்களை விட அதிகம் கடைப்பிடித்ததாக  பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு நடத்தி வழங்கப்பட்டது. மற்ற இரண்டு ஓட்டுனர்கள் கனரக வகன ஓட்டுனர்கள் பணி நிமித்தம் விழா மேடைக்கு வர இயலவில்லை.கரும்பு ஆலைக்கான ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகனம் ஓட்டுபவர்கள்.திருமிகு.மூர்த்தி ஓட்டுனர் மற்றும் திருமிகு.சலீம்   இவர்களுக்கான பரிசுகள்  பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்பப்பட்டன. சாலை பாதுகாப்புக் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் தேர்வான பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பரிசுகள்  அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.


          தாளவாடி கனரக வாகன ஓட்டுனர்களுக்காக சாலைப்பாதுகாப்புவாரவிழாவின் ஆறாவது நாளான கடந்த 06-01-2013 அன்று தாளவாடியில் உள்ள  பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்தில் 'யோகா' பற்றிய பயிற்சி மற்றும் விளக்கம் கொடுத்த   திருமிகு.S.ரமேஷ் அரசுபோக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை ஓட்டுனர்  அவர்களுக்கு பாராட்டும் பரிசும் திருமிகு.மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள் வழங்கிய காட்சி. (திருமிகு.ரமேஷ் ஓட்டுனர் பாரதியார் பல்கலைக்கழகம்-கோயமுத்தூரில் யோகா பட்டயப்படிப்பு பயின்று வருகிறார்.)





  திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள் J.S.S.I.T.I.தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஜெ.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்கள் சாலைவிதிகளை மதிக்க வேண்டும் என உரையாற்றிய காட்சி.

      திருமிகு.மாதேஸ் அவர்கள் தலைமையாசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்கவுரை  தமிழிலும்,கன்னடத்திலும் உரை நிகழ்த்திய காட்சி.

      திருமிகு.லெனின் அவர்கள் ஒய்ஸ்மென் கிளப் ஆப் தாளவாடி மற்றும் மனித உரிமைகள் கழகம் தாளவாடி சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு அளித்த காட்சி.


       திருமிகு.ஜோசப் ஓட்டுனர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் சங்கத்தலைவர் தாளவாடி அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

      திருமிகு.ராயப்பன் அவர்கள் பொதுமக்கள் சார்பாக கன்னட மொழியில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி.


           சாலைப்பாதுகாப்பு வாரவிழா ஒருங்கிணைப்பாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள், தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி மற்றும் அரசு போக்குவரத்து ஓட்டுனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்தக்கழகம்-தாளவாடி அவர்கள் நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
 பதிவேற்றம்.C.PARAMESWARAN DRIVER ( TAMIL NADU SCIENCE FORUM)
                             TAMIL NADU STATE TRANSPORT CORPORATION
                               THALAVADY BRANCH.
                              ERODE DIV.


07 ஜனவரி, 2013

ROAD SAFETY WEEK-THALAVADY-01 -TO- 07-JANUARY-2013

 அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம். 
          தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சார்பாக சாலைப்பாதுகாப்பு வாரவிழா-''வாழ்க்கை வாழ்வதற்கே-குடிபோதையில் வாகனத்தை ஓட்டாதீர்'' என்னும் தலைப்பில் ஒருவார காலமாக பல்வேறு நிகழ்வுகளாக விழிப்புணர்வு செய்து வந்துள்ளோம். 

























          மிக முக்கியமான தகவல்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றோம்.அதாவது  விபத்து ஏன் ஏற்படுகிறது?,எப்படி ஏற்படுகிறது? எங்கு ஏற்படுகிறது? என்ற காரணங்களையும்,விபத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? விபரீதங்கள்,இழப்புகள்,துன்பங்கள்,நமக்கு மற்றும் நமது தேசத்திற்கு ஏற்படுகின்றன.அதனைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு? பாதுகாப்பான பயணம்-நமக்கு அவசியம். 

         மனிதத் தேவைகளுக்கு அத்தியாவசியமான 
     (1) உணவு-உண்டு உயிர்வாழ,
      (2) உடை-உடுத்தி  பண்பாடு பேண,நாகரீகமாக வாழ, 
       (3) இருப்பிடம் (தங்குமிடம்) நமது பாதுகாப்பிற்காக நமது உடைமைகள் பாதுகாப்பிற்காக, என வாழ, 
       (4) போக்குவரத்து-நமது தேவைகள் முழுமையடைய,பூர்த்தியடைய செய்ய 
                  என நான்கு அத்தியாவசியத்தேவைகள் நமக்கு அவசியம் ஆகின்றன. ஆனால் நான்காவதான தேவையான "போக்குவரத்து" மட்டும்- அதிலும் சாலைப்போக்குவரத்து மட்டும் நமக்கு "உயிர் வாழ" என்பதை விட "உயிரை பலி கொள்ள" என்ற அவல நிலையில் உள்ளது. அதற்கான 
                         பல்வேறு கருத்தரங்குகள்,விவாதக்களங்கள்,பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,
  விளம்பரப் பதாகைகள், விழிப்புணர்வு வாசக ஒட்டிகள் என்னும் ஸ்டிக்கர்கள் ,கட்டுரைகள்,கவிதைகள்,ஓவியங்கள் என பல நிகழ்வுகளைச்செய்து அருமையான பயனுள்ள தகவல்கள் பல கிடைக்கப்பெற்றோம். 

             எனது பணி நிமித்தம் மற்றும் குடும்பச்சூழல்,உறவினர் சூழல் (எனது மாமா இறந்து ஒருவாரம் ஆகிறது இதுவரை துக்கம் அனுசரிக்கச் செல்ல இயலவில்லை- பொதுநலன் கருதி) மற்றும் பொங்கல் விழாவிற்காக வீடு சுத்தம் செய்யவேண்டி இருப்பதால் என காலச்சூழல் கருதிஅனைத்தும் பதிவிட இன்னும் ஒருமாத காலமாவது ஆகும்.

           அதுவரை பொறுத்தருள வேண்டுகிறோம். என அன்புடன் C.PARAMESWARAN-TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY-ERODE Dt.

04 ஜனவரி, 2013

THALAVADY-04-01-2013-STAY ALIVE-DONT DRINK & DRIVE

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-04

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                                              வணக்கம். 
        நான்காவது நாளான இன்று சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.



 திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள்-தாளாளர் J.S.S.தொழிற்பயிற்சிநிலையம்-தாளவாடி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.
 







    திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தலைவர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றிய காட்சி.


   
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்-கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை அவர்கள் கருத்தரங்கைத்துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி.

    கூகுள் ஆண்டவர் போதிய இட அளவு முடிவுற்றதாக அறிவித்த காரணத்தால் மேலும் படங்களைப்பதிவிட இயலவில்லை. மன்னிகவும்.

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-03

 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                 சாலைப் பாதுகாப்பு வாரவிழா-2013 மூன்றாவது நாளான இன்று அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளையில் ஈஷா யோகா மையம்-மருத்துவக்குழுவினரின் இலவச மருத்துவ ஆலேசனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.




        

       ஈஷா யோகா மையம்-குழுவின் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை மேலாளர் அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்த காட்சி.


ஈஷா யோகா மையம்-குழுவினருடன் தாளவாடி கிளை மேலாளர் மற்றும் A.P.ராஜூ தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி & நடத்துனர் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை மற்றும் திருமிகு.சிவன் அவர்கள் தொழில்நுட்ப பணியாளர் அவர்கள்.இடம்-தாளவாடி கிளை பணிமனை வளாகம்.

 
 

    திருமிகு.மருத்துவர் ஐயா அவர்கள் ஈஷா யோகா மையம் அவர்கள் குழுவினர் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை பணிமனை வளாகத்தில் தொழிலாளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய காட்சி.அருகில் கிளை மேலாளர் அவர்கள்-தாளவாடி கிளை.

   மருந்தாளுநர் அவர்களிடம் இலவச மருந்துப்பொருட்கள் வாங்கிய காட்சி.
 



சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-02

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 













   


         இரண்டாம் நாளான இன்று தாளவாடிப்பகுதிய் அனைத்துப்பள்ளிகளிலும் 'விபத்து-விளைவு-பாதுகாப்பு'' என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு பற்றிய பள்ளிகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. டிவைன் மெட்ரிக் பள்ளி,சூசையபுரம் புனித ஜேம்ஸ் மேனிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,KGPV பள்ளி,திகினாரை புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளிகள் கலந்து கொண்டன.

02 ஜனவரி, 2013

ROAD SAFETY WEEK-2013 THALAVADY-ERODE Dt.


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
      சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் சாலைப்பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் சமூகத்திற்கு நினைவூட்டம் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் அனைவராலும் விழிப்புணர்வு விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ......01-ஜனவரி-2013செவ்வாய்க்கிழமை இன்று காலை 10-00மணிக்கு......




 


  தாளவாடி காவல்துறை உதவி ஆய்வாளர் முன்பு அனைவரும் வாழ்க்கை வாழ்வதற்கே! குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டோம்!! என உறுதிமொழி ஏற்ற காட்சி.
 


சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013 தாளவாடி

STAY ALIVE !                                                                          DON't DRINK AND DRIVE!!
வாழ்க்கை வாழ்வதற்கே!           குடிபோதையில் வாகனத்தை இயக்காதீர்!!

                          24வது   சாலைப்பாதுகாப்பு வாரவிழா.
                
                 01-ஜனவரி-2013 முதல் 07-ஜனவரி-2013 வரை

          சாலைப்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு; 
            தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.

                      நிகழ்ச்சிநிரல் விபரம்.

      நாள்-01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-
        நேரம் காலை 10-00மணி
இடம்-காவல்நிலையம்-தாளவாடி-
  சாலைப்பாதுகாப்பு பற்றிய அறிவுரையும்-உறுதிமொழி ஏற்பும்.
தலைமை-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
       காவல்துறை ஆய்வாளர்,தாளவாடி

நாள்-02-ஜனவரி-2013 புதன் கிழமை
சாலைப்பாதுகாப்பு-கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி
இடம்; அனைத்துப்பள்ளிகள்-தாளவாடி.

     நாள்-03-ஜனவரி-2013 வியாழக்கிழமை.
நேரம்.மதியம்12-00மணி முதல் 3-00மணிவரை.
ஈஷா யோகா மையம்-மருத்துவக்குழுவினர் வழங்கும்
        மருத்துவ ஆலோசனை முகாம்.
  இடம்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.

நாள்-04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை.
சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு.
நேரம்;காலை 10-00மணி முதல் 12-00மணி வரை.
தலைப்பு;சாலை விபத்துகளும்-விளைவுகளும்.
இடம்; J.S.S. I.T.I.மற்றும் பள்ளி வளாகம்.
தலைமை;திருமிகு.வெங்கட்ராஜ் தாளாளர் அவர்கள்-
       J.S.S. தொழிற்பயிற்சி நிலையம்-தாளவாடி.
முன்னிலை;திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,
      ஊராட்சி மன்றத்தலைவர்,
       தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
துவக்கி வைப்பவர்;திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,
    கிளை மேலாளர்,
 அரசு போக்குவரத்துக்கழகம்-
 தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

    நாள்-05-ஜனவரி-2013 சனிக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
 காவல் நிலையம் & தீயணைப்பு -மீட்பு நிலையம் & வனத்துறையுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.
இடம்; ஆசனூர் காவல்நிலையம் முன்பு (209-தேசிய நெடுஞ்சாலையில்)

   நாள்-06-ஜனவரி-2013 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
இடம்; பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்,
       தாளவாடி.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வழங்கும் -கனரக வாகன ஓட்டுனர்களுக்கான உடல் நலம்,யோகா,முதலுதவி பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு. 

 நாள்-07-ஜனவரி-2013 திங்கட் கிழமை.
  சாலைப்பபாதுகாப்பு வாரவிழா  ஒருவார கால விழிப்புணர்வுப்பிரச்சாரம் நிறைவு நாள்.
  தாளவாடி வட்டார அனைத்துப் பள்ளி மற்றும் J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள் மாபெரும் பேரணி .
 நேரம்;-காலை-10.00மணி.
பேரணி துவக்கி வைப்பவர்;-திருமிகு.K.P.ஜெயக்குமார்.B.E.அவர்கள்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,கோபிச் செட்டிபாளையம்-

 பொதுக்கூட்டம்;-காலை 10-30மணி,
இடம்;-பேருந்து நிலையம்-தாளவாடி.
தலைமை;-திருமிகு.C.பரமேஸ்வரன்.அவர்கள், தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம்.
முன்னிலை;-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள் காவல்நிலைய ஆய்வாளர்-தாளவாடி.
வரவேற்புரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.
துவக்கவுரை;-திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர்,அவர்கள்,ஊராட்சி மன்றத்தலைவர்-தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
(சிறந்த தனியார் இலகுரக & கனரக வாகன ஓட்டுனர்களுக்கு பாராட்டும்,பரிசளிப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.)
சிறப்புரை;-
           திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,அவர்கள்-
                        மோட்டார் வாகன ஆய்வாளர்-நிலை-1 சத்தி-
         திருமிகு.M.முகுந்தன் அவர்கள்.B.E,
                மோட்டார் வாகன ஆய்வாளர்-    நிலை-2
            மோட்டார் வாகனப்போக்குவரத்து அலுவலகம்-
                       சத்தியமங்கலம்.
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்-
        தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-
             தாளவாடி கிளை.(ஈரோடு மண்டலம்)
திருமிகு.K.லோகநாதன் அவர்கள்,அவர்கள்,
  லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்-
திருமிகு.Dr.சுப்பராயன்,M.B.B.S., அவர்கள் -
                   ரோட்டரி கிளப்,தாளவாடி.
திருமிகு.சிவசாமி அவர்கள்,தலைவர்-
      ஒய்ஸ்மென் கிளப் ஆஃப் தாளவாடி.
திருமதி.ராஜம்மா அவர்கள்,
     உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சத்தியமங்கலம்.
திருமதி.சரோஜா, அவர்கள்,
    உதவி தொடக்கக்கல்வி அலுவலர்-தாளவாடி.
 மற்றும் அனைத்துப்பள்ளி ஆசிரியர்கள்,
     சமூக நல ஆர்வலர்கள்-தாளவாடி.
நன்றியுரை;-
         K.பாலமுருகன்B.A.,(stamp vendor) அவர்கள்
      பொருளாளர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,தாளவாடி.

             http;//konguthendral.blogspot.com, 
        http;//tnsfthalavady.blogspot.com,
       http;// tnsfsathy.blogspot.com.

சாலைப்பாதுகாப்பு-நமது பாதுகாப்பு-நாட்டின் பாதுகாப்பு என,
        தன்யா மொபைல்ஸ் & சக்திஸ்ரீமொபைல்ஸ்-சத்தி மெயின் ரோடு,சரவணம்பட்டி-கோயமுத்தூர்-641035. MOBILE-9047617993, & , 9944400126..

அனைத்துலக மனிதநேயம் போற்றும்....
       ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப்ஸ்,கோபி செட்டிபாளையம்.,MOBILE -09360008853