19 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண:     அன்பு நண்பர்களே,வணக்கம்.          தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ,மாநில தலைவர் அவர்களது கட்டுரை -TNSFTHENI.BLOGSPOT.COM வாயிலாக.......    ...

புத்தகங்களுடன் இலவச அலமாரி-ஈரோட்டில்



அன்பு நண்பர்களே,வணக்கம். 
             கடந்த 17-9-2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திருமிகு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள்  அருமையான யோசனை ஒன்று தெரிவித்தார். 
             அதாவது எந்தப்பகுதியைச்சேர்ந்தவர்களானாலும் சரிங்க! புத்தக அலமாரி மற்றும் அறிவியல் உட்பட நல்ல தரமானபுத்தகங்களை வழங்கலாம். அதாவதுங்க!  பள்ளிகளுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ,அனாதை இல்லங்களுக்கோ,பயிற்சி நிலையங்களுக்கோ,பெரிய பெரிய கம்பெனிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ,மருத்துவமனைகளுக்கோ,முதியோர் இல்லங்களுக்கோ,தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கோ,அறிவுச்செல்வங்களைப்பெருக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள நன்கொடையாளர்கள் அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது விருப்பமுள்ளவர்கள் விலைக்கு பெற்றுக்கொள்ளவோ தாங்கள் செய்ய வேண்டியது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுத்தால் போதும். ஐந்தாயிரத்திற்கு உண்டான நல்ல தரமான புத்தகங்களுடன் இலவசமாக அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க கண்ணாடிபொருத்திய புத்தக அலமாரி கொடுக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிடவும். அல்லது அருகில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களை அணுகவும்.

வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி


                    முயற்சிகள் தவறலாம்! முயற்சிக்க தவறக்கூடாது!!


 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                            நமது ஈரோடு மாவட்டம்- சத்தி வட்டம்- தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரப்பகுதிவாழ் 'பிறமொழி' பேசும் மக்களுக்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(தாளவாடி மையம்)
        மற்றும்  டிவைன் மெட்ரிக் பள்ளி (தாளவாடி)உடன்  இணைந்து  தமிழ் மொழிப்பயிற்சி மையம்  ஏற்படுத்தி உள்ளது. 
          இந்த மொழிப்பயிற்சி மையம் தாளவாடி கொங்கள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்ட காஜனூர்  டிவைன் மெட்ரிக் பள்ளியில் 18-09-2012 அன்று முதல் நடைபெறுகிறது.விருப்பமும்,ஆர்வமும் உள்ள இளைஞர் முதல் வயதானவர் வரை சாதி, மத, இன, மொழி, வயது ,பாலினம் வேறுபாடு இன்றி அனைவரும்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.இப்பயிற்சி சமூக நலன் கருதி இலவசமாக நடத்தப்படுகிறது.

        மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் - காரணம்.
      
               இத்தாலி நாட்டைச் சேர்ந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" (Constantine joseph beschi) என்னும் பெயருடைய கிறித்துவப் பாதிரியார் அவர்கள் கிறித்துவ சமயம் பரப்ப 1710 ஜூன்மாதம் 'லிஸ்பனில்' புறப்பட்டு 'கோவா' (இந்தியா) வந்து அங்கிருந்து 'கொச்சி' வந்து பிறகு கால்நடையாக 'அம்பலக்காடு' வந்து தங்கி மதுரையில் 'காமநாயக்கன்பட்டி' வந்து சேர்ந்தார்.
              தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் கற்றிருந்த போதிலும் தமிழின் இனிமை மற்றும் பெருமையினை உணர்ந்து   இத்தாலி மொழியிலிருந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்ற தனது பெயரை "தைரிய நாதன்" என மாற்றினார்.பிறகு அந்தப்பெயர் வடமொழி என அறிந்து மீண்டும் "வீரமாமுனிவர்" என தனது பெயரை மாற்றி தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டார்.
          முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தார்.மேலும் தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து எளிமையாக்கினார்.செய்யுள் நடையில் இருந்த 'சதுரகராதி' யினை பேச்சுத்தமிழில் படைத்தார்.அதனால் 'தமிழ் அகராதிகளின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
                 இலக்கியப்படைப்புகளை உரைநடையில் அறிமுகப்படுத்தினார்.இவருக்கு முன்னரே "தத்துவ போதகர்" (1577-1656) இவரது இயற்பெயர் "இராபர்ட் டி நொபிலி" (Robert de nobili) என்னும் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கிறித்துவ பாதிரியார் சமயம் பரப்ப இந்தியா வருகை தந்த போது  முதன்முதலாக  பிறமொழிக்கலப்போடு தமிழில் உரைநடை எழுதியுள்ளார்.எனினும் வீரமாமுனிவர் பிறமொழிக்கலப்பின்றி தூய தமிழில் உரைநடை எழுதினார்.
             உரைநடையில் வேதவிளக்கம்,வேதியர் ஒழுக்கம்,ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,பரமார்த்த குருவின் கதைகள்,வாமன் கதை, திருக்காவல் ஊர்க்கலம்பகம்,கித்தேரி அம்மன் அம்மானை, தேம்பாவனி என 23 உரைநடைகள் எழுதி உள்ளார்.உலகப்பொதுமறை நூலான திருக்குறளை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
         இவ்வாறு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,அகராதி,மொழி பெயர்ப்பு,காவியம் என தமிழ்த்துறையில் பல சிறப்பான படைப்புகளை தந்து தமிழுக்காக செய்த தொண்டின்  நினைவாக  தாளவாடியில் மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் இட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளோம்.

      வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்ப்பேட்டை அருகில் (6கிலோமீட்டர் தூரத்தில்)உள்ள கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகிமாதா கோவிலில் அமைந்துள்ளது.
           வீரமாமுனிவரின் சரித்திரத்தை 1822-இல் வித்துவான் முத்துசாமிபிள்ளை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டு உள்ளார்.

TNSF ERODE பொதுக்குழு கூட்டம்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் 

 

 

      அன்பு நண்பர்களே,வணக்கம். 

             17-09-2012 இன்று மாலை5-30 மணிக்கு தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் TNGEA - அலுவலகத்தில்  நடைபெற்றது.


      மாநிலத்தலைவர் பேரா.ந.மணி அவர்கள் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதித்த காட்சி.அருகில் திரு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.




      மாவட்ட செயலாளர் திரு.ர. மணி அவர்கள் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றி  ஏட்டில் பதிந்த காட்சி.அருகில் மரியாதைக்குரிய ரேவதி அம்மையார் அவர்கள் மலாய் சென்று கற்பித்தலில் எளிமை பற்றி ஆய்வுநூல் எழுதி சமர்ப்பித்து அதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் ஆய்வு நூலை பார்வையிடும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.

        பொதுக்குழு கூட்டத்தில்  முக்கிய நிகழ்வாக கணித மேதை இராமானுசர் பிறந்த ஊரான நமது மாவட்டத்தலைநகராம் ஈரோடு என்பதை வெளிநாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள்,கணித மேதைகள்,அறிஞர்கள் அறிந்து அதன்விளைவாக நமது ஈரோடு நகருக்கு வருகை தந்து கணித மேதை இராமானுசர் பிறந்த வீட்டை அடையாளம் கண்டு செல்கின்றனர்.அவர்களுக்கு வழிகாட்டியாக பேரா.ந.மணி அவர்களே செயல்பட்டு கணித மேதை பிறந்த வீட்டை அடையாளம் காட்டி வருவதை சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த கட்டமாக கணித மேதை 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி இந்த வருடத்தை நமது அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்து வருடம் நிறைவடைவதை ஒட்டி நிறைவு விழாவினை நமது ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக திரு.சக்கரவர்த்தி அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
         அடுத்து உரையாற்றிய திருமிகு. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் உட்பட பொதுஇடங்களில் விருப்பமுள்ள புரவலர்களைக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலக அலமாரியுடன் சேர்த்து வழங்கும் அற்புத யோசனையை தெரிவித்தார்.அதற்கான விபரம் வேண்டுவோர் தமிழ்நாடு அறிவியல் இயகம்-ஈரோடு மாவட்ட நண்பர்களை அணுகவும்.அல்லது இங்கு கருத்துரை இடவும்.ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் புத்தக அலமாரி இலவசமாக வழங்கப்படும்.என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.