23 ஏப்ரல், 2012

WORLD BOOK DAY-THALAVADY-PART-2

 அன்பு நண்பர்களே, வணக்கம்.
                      உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினவிழா-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சென்ற பதிவின் தொடர்ச்சி..........
      
                

       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை செயலாளர்,திரு.S.பிரவீன்குமார் பட்டதாரி ஆசிரியர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி-சூசைபுரம்-தாளவாடி அவர்கள்-  தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் மரியாதைக்குரிய நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் முன்னிலையில்  தாளவாடியில் பேருந்து நிலையத்தில் நடைபெறும் உலக புத்தக தின விழிப்புணர்வுப்பேரணி,புத்தகக் கண்காட்சி  மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள  அனைவரையும் இனிதே வரவேற்றுப் பேசினார்.அதுவும் கவிதைநடையில் செவிக்கு உணவாக இன்புறும் விதத்தில் வரவேற்றார்

                 


    ''WORLD BOOK DAY ''விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் திரு. C.பரமேஸ்வரன் -தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளைஅவர்கள்  தமது தலைமைஉரையில்,
                     மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான கண்டுபிடிப்பு ''புத்தகம்''தான் என்றார், அனைத்து உயிரினங்களும் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறை நடத்தி வருகின்றன.ஆனால் மனித சமுதாயம் மட்டும் ஒரு தலைமுறை விட்டுச்சென்ற இடத்தில் தனது வாழ்க்கையை அடுத்த தலைமுறை துவக்குகிறது என்றார்.இந்த மாற்றத்திற்கு காரணம் நம் முன்னோர்கள் அவர்கள் அனுபவங்களை,கண்டுபிடிப்புகளை, நிறைகுறைகளை   அதாவது வரலாறாக,அறிவியலாக,இலக்கியமாக,தொழில்நுட்பமாக  பலதுறைகளைச் சார்ந்த புத்தகங்களாகஎழுதி வைத்துச்சென்றுள்ளனர்.அந்த புத்தகங்களைப் படித்து தெளிவு பெற்று நமதுவாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை  ஏற்படுத்திக்கொள்கிறோம்.என்றார். நமக்கும் புத்தகத்திற்கும் உள்ள உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் அந்தப்புத்தக உறவு நமது இறுதிக்காலம்வரை தொடர்கிறது என்றார். நல்ல புத்தகங்களைப்படித்து நல்ல ஒழுக்கங்களைப் பின்பற்றி சமூகத்தில் மதிப்புமிக்க மனிதனாக வாழ்வோம்,வாழ்ந்து காட்டுவோம் என உறுதி ஏற்போம்.என்றார்.இனி வருடந்தோறும்  இந்த மலைப்பகுதி மாணவர்களுக்காக உயர்கல்விக்கான இலவச வழிகாட்டி மையம் செயல்படுத்தப்படும். புத்தகக் கண்காட்சியும்,அறிவியல் செய்முறைக் கண்காட்சியும் நடத்தப்படும்.அதற்காக இந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பங்கு பெறச் செய்யப்படும்.என்றார்.முதல் கட்டமாக வருகிற ஜூன் மாத இறுதியில் டிவைன் மெட்ரிக் பள்ளியில் மேற்கண்ட கண்காட்சியினை நடத்தப்படும்.இப்பகுதியில்   உயர்கல்விக்கான இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை கொடுக்க  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய முனைவர்.R.செல்லப்பன்.அவர்கள்  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்களைக்கொண்டு ஆலோசனை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள படிப்புகள் தவிர கூடுதலாக அனைத்து துறைகளிலும் உள்ள இந்த மலைப்பகுதிக்கேற்றவாறு ,இம்மாணவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு,வசதிக்கேற்றவாறு,சூழ்நிலைக்கேற்றவாறு,
தகுதிக்கேற்றவாறு எந்த கல்லூரிகளில் என்னென்ன பிரிவுகள்,துறைகள் உள்ளன.இலவசக்கல்வி,மிகக்குறைந்த கட்டணத்தில் கல்வி,வேலை வாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்பு என முடிந்தவரை தகுந்த ஆலோசனை கொடுக்கப்படும்.அதனை மாணவர்கள் விருப்பம்போல் கல்லூரிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.என கூறி உள்ளார்.அதற்காக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்வதாகக் கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.







            ''உலக புத்தக தின விழா-ஓர் அறிமுகம்'' என்ற தலைப்பில் துவக்கவுரை ஆற்றிய செயற்குழு உறுப்பினர் திரு.ராஜூ அவர்கள் உரையில் ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் அதிகமாக பிறந்ததும் மற்றும் இறந்ததும் ஆன ஏப்ரல் -23ந்தேதியை இலக்கிய மேதைகளைக் கவுரவப்படுத்தும் வகையிலும்,இலக்கிய மேதைகளை நினைவு கூர் வகையிலும் பன்னாட்டு கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் அறிவிப்பின் பேரில் 1995-ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினவாழாவாக அனைத்து நாடுகளும் அனுசரித்து வருகின்றன. 
       நமது தாளவாடி மலைப்பகுதி மக்களும்  பயன்பெறும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக இதுவரை புத்தகக்கண்காட்சியே போடப்படாத நமது தாளவாடியில்  முதன்முதலாக புத்தகக்கண்காட்சி போடப்பட்டுள்ளது.அனைவரும் புத்தகம் வாங்க வாருங்கள் என்பதை விட அனைவரும் இங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிடுங்கள்.எடுத்து வாசித்துப்பாருங்கள்.மாலைவரை இங்குள்ள தங்களுக்குப்பிடித்தமான புத்தகங்களை எடுத்து இங்கு போடப்படுள்ள இருக்கைகளில் அமர்ந்து வாசிப்பை நேசியுங்கள்..தங்களது மேலான கருத்துக்களை இங்கு வைத்துள்ள கருத்துப்பதிவேட்டில் குறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் பதிவிடுங்கள்.தயவுசெய்து வாழ்த்துரை,பாராட்டுரை பதிவிட வேண்டாம்.எனக் கூறினார்.


    

   அடுத்து உரை ஆற்றிய (DIVINE MATRIC SCHOOL) டிவைன் மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு.வியானி அவர்கள்  புத்தகம்-நல்ல நண்பன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவர்தமது உரையில்    புத்தகம்  (மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)



        



  அடுத்து "வாசிப்போம்-நேசிப்போம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய திரு.பால கிருஷ்ணன் இடைநிலை ஆசிரியர் அவர்கள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடியிலிருந்து தாளவாடி வரை வாசிப்பால் நேசித்த அனுபவத்தை மிக நன்றாக பகிர்ந்து கொண்டார். ஒரு நல்ல புத்தகத்தில்  ஓராயிரம் மட்டுமல்ல ஆயிரமாயிரமான அறிவுப் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன.நாம் புத்தகத்தை வாசித்து பழக்கப்படுத்திக்கொண்டோமானால் அதில் கிடைக்கும் நிம்மதி,சந்தோஷம்,மன திருப்தி,வேறு எதிலும் கிடைக்காது.தொழில் நுட்பங்கள்,  நமது முன்னோர்கள் ,அறிவியல் அறிஞர்கள் , வில்லியம் ஷேக்ஸ்பியர்,செர்வாண்டஸ் போன்ற உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் ,    வரலாறுகள்,நீதிக்கதைகள்,கவிதைகள்,நாடகங்கள் என அத   




(மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)







    நிறைவாக திரு.பாலகிருஷ்ணன் பொருளாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்-தாளவாடி நன்றியுரை ஆற்றினார்.(மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)
    







                       
      



    









      

























புத்தக கண்காட்சி பற்றிய கருத்து பதிவிடுகிறார்










காவல் துறை மட்டுமல்ல,தாளவாடியில் முதன்முதலாக புத்தகக்கடை வைத்து கடந்த முப்பது வருடங்களாக புத்தக கடை நடத்தி வரும் அனுபவசாலி அவர்களும் புத்தகத்தை பார்வையிட்டு முதல் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தும் நல்ல ஆலோசனை வழங்கியும் சென்றார்.



























தாளவாடியின் முக்கிய நபர்களில் ஒருவர் தமது கருத்தினை கருத்துப்பதிவு நோட்டில் பதிவிடுகிறார்.அதனை கூர்மையாக கவனிக்கும் நமது நண்பர் திரு.ராஜூ அவர்கள்




   பெண்களும்










































WORLD BOOK DAY-THALAVADY-PART-1

 அன்பு நண்பர்களே,வணக்கம்.
               தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                            இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்.
   ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த மற்றும் இறந்த தினமான இன்று (ஏப்ரல் - 23) இலக்கிய மேதைகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும்,    அரியது அறிந்துகொள்ளும் வகையிலும்,இன்றைய இளைய சமுதாயம் தடுமாறி தடம் மாறுவதிலிருந்து தெளிவு பெற்று தன்னம்பிக்கை பெறும்வகையில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதத்திலும் உலக புத்தக தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
                           அதன் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை (ஈரோடு மாவட்டம்) சார்பாக தாளவாடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்குழந்தைகளின்    DIVINE MATRIC SCHOOL-THALAVADY  வாசிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்,மற்றும் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.  
                 
   புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கும் முன்னதாக தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் மரியாதைக்குரிய .நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தை இன்றைய சமூகம் அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளின் வாசிப்பு விழிப்புணர்வு பேரணி போன்ற சமூக நல சேவைகளில் பங்கெடுத்தலை பாராட்டியும் உரையாற்றுகிறார்.மேலே உள்ள படம்.






           புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விழிப்புணர்வு வாசக அட்டைகளுடன்.  

                      (ஆமாங்க! தமிழ்,கன்னடம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தக வாசிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்) .  

           தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை செயலாளர் திரு. பிரவீன் குமார்,பட்டதாரி ஆசிரியர் அவர்கள் திரு.காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி அவர்களை துவக்கி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.மேலே உள்ள படம்.






            உலக புத்தக தின வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார் மரியாதைக்குரிய.காவல் ஆய்வாளர் அவர்கள்-தாளவாடி
 
   
     


  உலக புத்தக தின வாசிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ,மாணவியர் நம்ம தாளவாடியில்..மேலே உள்ள படம்.

     
     புத்தக தினம் பேரணியில் ஆர்வமுடன் திரு.A.P.ராஜூ-அவர்கள் செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி . வாசிப்பு விழிப்புணர்வு வாசகங்களை உரக்க கோஷமிட அதனை ஆமோதித்தவாறே டிவைன் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஊர்வலம்  . மேலே உள்ள படம்.

  
  
 
                  உலக புத்தக தினம் (WORLD BOOK DAY) விழிப்புணர்வு பேரணியில் (1)திரு.காவல்துறை உதவி ஆய்வாளர்- அவர்கள் (2) தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், (3)பனகஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், (4)சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-வேடர்நகர்- இடைநிலை ஆசிரியர் (5) சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-செண்பகப்புதூர்-இடைநிலை ஆசிரியர் மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்களும்,சமூகஆர்வலர்களும் கலந்து கொண்ட காட்சி.மேலே உள்ள படம்.






    தாளவாடியில் அமைந்துள்ள  உலக சமூக ஒற்றுமைக்கே எடுத்துக்காட்டாக அமைந்து விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து முஸ்லீம் கோவில்களின் முன்புறம்  WORLD BOOK DAY AND COPYRIGHT DAY பேரணியில் ஊக்கமளிக்கும் விதமாக முன்னேறிச் செல்லும் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.L.சிவக்குமார் அவர்கள் . அவரைத் தொடர்ந்து திரு.A.P.ராஜூ அவர்கள்அவர்கள் மற்றும் சத்திப்பகுதியை சேர்ந்த  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிஇடைநிலை ஆசிரியர்கள் ,இவர்களுடன் இணைந்து டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் மேலே உள்ள படம்.



     
 
  '' புத்தகம் வாசிப்போம்,புத்தாக்கம் பெறுவோம்''-
                                            என உறுதி ஏற்று மேடையில்அமர்ந்திருப்பவர்கள்  இடமிருந்து வலமாக .1) திரு.M.பால கிருஷ்ணன் அவர்கள் இடைநிலை ஆசிரியர்,வேடர்நகர்,சத்தி.2)திரு.வியானி அவர்கள்-டிவைன் மெட்ரிக் பள்ளி தாளாளர்,தாளவாடி.3)திரு.கா.தங்கவேல் அவர்கள்,காவல்துறை ஆய்வாளர்-தாளவாடி, 4)திரு.C.பரமேஸ்வரன் அவர்கள், தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை. 5)திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை .முதல் வரிசையில் நின்றிருப்பவர்கள் வலமிருந்து இடமாக 1) திரு.S.பிரவீன்குமார் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி,சூசைபுரம், மற்றும் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி 2)திரு.L.சிவக்குமார் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்.3)டிவைன் மெட்ரிக் பள்ளி ஆசிரியை அவர்களுடன் டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியர்-தாளவாடி 4)இடது கடைசியில் நிற்பவர் சத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி- செண்பகப்புதூர் இடைநிலை ஆசிரியர் அவர்கள்- மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர் . அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்கள் தாளவாடிப்பகுதி சமூக ஆர்வலர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர்களும்,உறுப்பினர்களும்.


                                                  தொடர்ச்சி..................... அடுத்த பதிவில் காணவும்.
                              என 
                  TAMIL NADU SCIENCE FORUM-
                                 THALAVADY-
                        ERODE DISTRICT.
 

22 ஏப்ரல், 2012

WORLD BOOK DAY - ERODE

அன்பு நண்பர்களே,
              வணக்கம். தாளவாடியில் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்க உள்ள உலக புத்தக தினவிழாவிற்காக
                        
                     கடந்த 20-ந் தேதி சென்னையில் அனுப்பி  21-4-2012அன்று அதாவது நேற்று சத்தி பேருந்து நிலையம் வருவதாக இருந்த                        
 TNSF புத்தகப்பார்சல்- KPN SPEED PARCEL SERVICE கே.பி.என். டிராவல்ஸ் - தவறுதலாக கோயமுத்தூருக்கு அனுப்பிவிட்டனர்.அது மீண்டும் மேட்டுப்பாளையம் வந்து பிறகு சத்திவர இரண்டு நாளாகும் என இன்று 22-4-2012 மதியம் தகவல் கிடைக்கப்பெற்றோம் .
            
               இரண்டு நாட்கள் காத்திருந்து திடீரென இந்த தகவல் பெற்ற  நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட செயலாளர் அவர்கள் ஈரோட்டில் புத்தகங்கள் வாங்கி இன்று மாலை அனுப்புகிறார்.
                     
                அதனால் கண்டிப்பாக நாளை தாளவாடியில் திட்டமிட்டபடி புத்தக கண்காட்சி நடைபெறும்.பிறகு வரக்கூடிய புத்தகங்களையும் வருகிற 28,29,30ஆகிய மூன்று தினங்கள் கூடுதலாக தாளவாடியிலேயே  புத்தக கண்காட்சி நடத்தப்படும். 
                       
                 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நோக்கமே மக்களிடையே வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதுதான். விற்பனை முக்கிய நோக்கமன்று. அதோடு வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் உயர்கல்விக்கான இலவச வழிகாட்டி முகாம் அமைத்து மாணவர்களுக்கு நல்ல தகவல்கள் கொடுக்கவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

               கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மரியாதைக்குரிய  முதல்வர் அவர்கள் அக்கல்லூரி பேராசிரியர்கள் மூலமாக தாளவாடிப்பகுதிக்கேற்ற வகையில் சூழ்நிலைக்கேற்ப வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்புக்கான படிப்புகள் அல்லது அனைத்து துறைகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசக்கல்வி,கொடுக்கப்படுகிற அனைத்து கல்லூரிகள் பற்றிய விபரங்கள் பற்றி நம்முடன் இணைந்து வழிகாட்ட இசைவு தெரிவித்து உள்ளார்.

                     கோபி கலை&அறிவியல் கல்லூரியை மட்டும் குறிப்பிடாமல் அனைத்துக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் கொடுக்க உள்ள மரியாதைக்குரிய ஐயா அவர்களது உயர்ந்த எண்ணம் இங்கு போற்றத்தக்கது. இந்த பதிவின் வாயிலாக அனைவருக்கும்  தகவலைத் தெரிவிக்கிறோம். 
                            என 
        TAMIL NADU SCIENCE FORUM -
        THALAVADY - 
        ERODE DISTRICT.
         
         உலக புத்தக தினத்தை கொண்டாடுவோம்! இலக்கிய மேதைகளுக்கு பெருமை சேர்ப்போம்

  1)இந்திய புத்தகங்களின் தந்தை -சீகன்பால்கு(ஜெர்மனி)
2) முதல் தமிழ் நூல்-பைபிளின் புதிய ஏற்பாடு
 3)அச்சுப்பொறி கண்டுபிடித்தவர் - ஜான் கூட்டன்பர்க் (ஜெர்மனி)
 4)நூலகங்களின் தந்தை -S.R.ரங்கநாதன்
 5) சர்வதேச எழுத்தறிவு தினம்-செப்டெம்பர்-8ந்தேதி
6)நூலகர் தினம்-ஆகஸ்டு-12ந்தேதி
 7)மனிதனுடைய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது புத்தகமே! 
 8) புத்தக விற்பனை வியாபாரமல்ல! சமூக சேவையே!!
9)புத்தகத்திற்கு செய்யும் செலவு வாழ்க்கைக்கு செய்யும் முதலீடு
10) பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குவோரே! படிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!!
 11)புத்தகங்களின் உறவு பள்ளியில் தொடங்கினாலும் ஆயுள்வரை இருக்கட்டும்.
 12)பலதுறை நூல்களை வாசிப்போம்
13) பொது அறிவு பெற வாசிப்போம்
 14)சமத்துவம் பெற வாசிப்போம்
15)புதிய சமுதாயம் படைக்க வாசிப்போம்
 16)அறியாமை அகல வாசிப்போம்
17)புத்தகம்-அறிவுப்பெட்டகம்
18)புத்தகம்-நல்ல நண்பன்
19)புத்தகம்-நல்ல வழிகாட்டி
20) புத்தகம்-ஒரு உயிர் அதில் நம்  முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
21)புத்தகம் -நல்ல ஆலோசகர்
22)வாசிப்போம்-மாத்தி யோசிப்போம்
23)ஒழுக்கம் பெற வாசிப்போம்
24)சிந்தனை மேம்படுத்த வாசிப்போம்
25)சிறப்புடன் வாழ வாசிப்போம்
26)புதிய புதிய அர்த்தங்களை நல்ல புத்தகங்களே தருகின்றன
27)புத்தகம்-கருத்துப்பெட்டகம்
28)உண்மை வாசிப்பில் உலகை அறிவோம்
29)தன்னம்பிக்கை பெற வாசிப்போம்
30) சாதனையாளர்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களே
31)வாசிப்பே ஏனைய திறன்களை வளர்க்கிறது
32) வாசிப்போம் -விழிப்புணர்வு பெறுவோம்
33)மனதை ஒருமுனைப்படுத்துவது நல்ல புத்தகங்களே
34)புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை  கிணற்றுத்தவளை
35)கற்பனை வளம் பெருக வாசிப்போம்
36)புதிய புதிய மனித சாத்தியங்கள் அடைய புத்தகம் படிப்போம்
37)நிகழ்வுகள் எதுவானாலும் புத்தகங்களையே பரிசாக வழங்குவோம்
38)உலகைப்புரிந்து கொள்ள வாசிப்போம்
39)செல்வத்தால் கிடைக்காத சந்தோசம் நல்ல புத்தகங்களால் கிடைக்கிறது
40) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா
41) கற்க கசடற
42) புத்தகம் ஒரு பொய்கை நதி  உள்ளத்தைக் குளிப்பாட்டுவோம்
 43)புத்தகம் ஒரு தேன்கூடு -ஆயிரம் கருத்துக்கள் புதைந்துள்ளன
44)காற்றை சுவாசித்தால் உயிர் வாழலாம்- வாசிப்பை சுவாசித்தால் மனிதனாக வாழலாம்
45)நம்மை புதுப்பிக்க வாசிப்போம்
46)அறிவுச்செல்வங்களைப்பெற புத்தகம் படிப்போம்
47)வாசிப்பை நேசிப்போம்
48) வாசிப்போம் வாசிக்க செய்வோம்
49)தெளிவான முடிவெடுக்க வாசிப்போம்
50)சிக்கல்களைத் தீர்க்க வாசிப்போம்
51)படைப்பாளர்களை உருவாக்க நல்ல புத்தகம் படிப்போம்
52)விலைமதிப்பில்லாத பொருள் நல்ல புத்தகங்களே!
53)சுய வளர்ச்சிக்கு துணைபுரிவது நல்ல புத்தகங்களே!
54)நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு!
55)சோதனைகளை சாதனையாக்க நல்ல புத்தங்களை வாசிப்போம்!
56)வாழ்க்கையில் உயர தூண்டுதல் தருவது புத்தகங்களே!
57)அறிவாயுதம் பெற வாசிப்போம்!
58)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!
59)அறியாமை அகல புத்தகம் வாசிப்போம்!
60) ஆணவம் அடங்க புத்தகம் வாசிப்போம்!
61) நிலையாமை உலகில் நிலைபெற இலக்கியம் படைப்போம்!
62) அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் தாய் நல்ல புத்தகங்களே!
63) அதிகாரம் ஒழிய நல்ல புத்தகங்களை படிப்போம்!
64) அறிவுப்புதையல்- நல்ல புத்தகங்களே!
65) ''கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி'' என்ற இத்தாலியரை அறிவோம்! அவர்தான் வீரமாமுனிவர். கொடுந்தமிழ் முறை மாற்றி இனிய தமிழ் ஆக்கியவர்!
     என 
                   PARAMES DRIVER //
  TAMIL NADU SCIENCE FORUM // 
                  THALAVADY // 
             ERODE -DISTRICT

20 ஏப்ரல், 2012

புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை-தாளவாடி2012

புத்தகம் விற்பனை என்பது வியாபாரம் அல்ல! அதுவும் சமூக சேவையே!!
     
  அன்பு நண்பர்களே,
     வணக்கம்.  உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்-அனுசரிப்பு தினமான 23-04-2012 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை ஈரோடு மாவட்டம் சார்பாக -தாளவாடி பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டமும்,விழிப்புணர்வுப் பேரணியும், நல்ல புத்தகங்கள் கண்காட்சி & விற்பனையும் நடத்தப்படுகிறது.   புத்தகங்களும் இன்று சென்னையில் இருந்து KPN PARCEL SERVICE -ல் சத்தியமங்கலம் அனுப்பிவிட்டதாக  சென்னை DM.KPNSPS/அலைபேசி வழித்தகவல் .அதில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன.என்ற விபரங்களை பரிசோதித்து அவசியம் இங்கு பதிவிடப்படும்.புத்தக கண்காட்சி இனி வருடந்தோறும் தாளவாடியில் நடைபெறும்.அருமை நண்பர் A.P.ராஜூ அவர்கள் ஆதரவு உள்ளவரை. இதே கண்காட்சி சத்தியமங்கலம் மற்றும் கோபியிலும் போட ஆதரவு திரட்டி வருகிறார்கள் திரு. C.பரமேஸ்வரன்- அரசுப்பேருந்து டிரைவர் மற்றும் திரு. A.P.ராஜூ -அரசுப்பேருந்து நடத்துனர் அவர்களும். புத்தகம் விற்பனை என்பது வியாபாரம் அல்ல! அதுவும் சமூக சேவையே!!

                    என 
TAMIL NADU SCIENCE FORUM-
             THALAVADY.

உலக புத்தகம் & பதிப்பக தினம்APRIL-23

அன்பு நண்பர்களே,
          வணக்கம். வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் உலக புத்தகம் மற்றும் பதிப்பக தினம் -அனுசரிப்பை ஒட்டி தாளவாடியில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டம் ,விழிப்புணர்வுப் பேரணி,புத்தக கண்காட்சி பற்றிய அழைப்பிதழ் காணீர்.இங்கு.


    
                           அனைவரும் வாங்க!    புத்தகம் வாங்க!!          நீங்கதாங்க!! 
                                                                                நன்றிங்க!