அன்பு நண்பர்களே,
வணக்கம். தாளவாடியில் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்க உள்ள உலக புத்தக தினவிழாவிற்காககடந்த 20-ந் தேதி சென்னையில் அனுப்பி 21-4-2012அன்று அதாவது நேற்று சத்தி பேருந்து நிலையம் வருவதாக இருந்த
TNSF புத்தகப்பார்சல்- KPN SPEED PARCEL SERVICE கே.பி.என். டிராவல்ஸ் - தவறுதலாக கோயமுத்தூருக்கு அனுப்பிவிட்டனர்.அது மீண்டும் மேட்டுப்பாளையம் வந்து பிறகு சத்திவர இரண்டு நாளாகும் என இன்று 22-4-2012 மதியம் தகவல் கிடைக்கப்பெற்றோம் .
இரண்டு நாட்கள் காத்திருந்து திடீரென இந்த தகவல் பெற்ற நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட செயலாளர் அவர்கள் ஈரோட்டில் புத்தகங்கள் வாங்கி இன்று மாலை அனுப்புகிறார்.
அதனால் கண்டிப்பாக நாளை தாளவாடியில் திட்டமிட்டபடி புத்தக கண்காட்சி நடைபெறும்.பிறகு வரக்கூடிய புத்தகங்களையும் வருகிற 28,29,30ஆகிய மூன்று தினங்கள் கூடுதலாக தாளவாடியிலேயே புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நோக்கமே மக்களிடையே வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதுதான். விற்பனை முக்கிய நோக்கமன்று. அதோடு வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் உயர்கல்விக்கான இலவச வழிகாட்டி முகாம் அமைத்து மாணவர்களுக்கு நல்ல தகவல்கள் கொடுக்கவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள் அக்கல்லூரி பேராசிரியர்கள் மூலமாக தாளவாடிப்பகுதிக்கேற்ற வகையில் சூழ்நிலைக்கேற்ப வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்புக்கான படிப்புகள் அல்லது அனைத்து துறைகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசக்கல்வி,கொடுக்கப்படுகிற அனைத்து கல்லூரிகள் பற்றிய விபரங்கள் பற்றி நம்முடன் இணைந்து வழிகாட்ட இசைவு தெரிவித்து உள்ளார்.
கோபி கலை&அறிவியல் கல்லூரியை மட்டும் குறிப்பிடாமல் அனைத்துக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் கொடுக்க உள்ள மரியாதைக்குரிய ஐயா அவர்களது உயர்ந்த எண்ணம் இங்கு போற்றத்தக்கது. இந்த பதிவின் வாயிலாக அனைவருக்கும் தகவலைத் தெரிவிக்கிறோம்.
என
TAMIL NADU SCIENCE FORUM -
THALAVADY -
ERODE DISTRICT.
உலக புத்தக தினத்தை கொண்டாடுவோம்! இலக்கிய மேதைகளுக்கு பெருமை சேர்ப்போம்
1)இந்திய புத்தகங்களின் தந்தை -சீகன்பால்கு(ஜெர்மனி)
2) முதல் தமிழ் நூல்-பைபிளின் புதிய ஏற்பாடு
3)அச்சுப்பொறி கண்டுபிடித்தவர் - ஜான் கூட்டன்பர்க் (ஜெர்மனி)
4)நூலகங்களின் தந்தை -S.R.ரங்கநாதன்
5) சர்வதேச எழுத்தறிவு தினம்-செப்டெம்பர்-8ந்தேதி
6)நூலகர் தினம்-ஆகஸ்டு-12ந்தேதி
7)மனிதனுடைய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது புத்தகமே!
8) புத்தக விற்பனை வியாபாரமல்ல! சமூக சேவையே!!
9)புத்தகத்திற்கு செய்யும் செலவு வாழ்க்கைக்கு செய்யும் முதலீடு
10) பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குவோரே! படிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!!
11)புத்தகங்களின் உறவு பள்ளியில் தொடங்கினாலும் ஆயுள்வரை இருக்கட்டும்.
12)பலதுறை நூல்களை வாசிப்போம்
13) பொது அறிவு பெற வாசிப்போம்
14)சமத்துவம் பெற வாசிப்போம்
15)புதிய சமுதாயம் படைக்க வாசிப்போம்
16)அறியாமை அகல வாசிப்போம்
17)புத்தகம்-அறிவுப்பெட்டகம்
18)புத்தகம்-நல்ல நண்பன்
19)புத்தகம்-நல்ல வழிகாட்டி
20) புத்தகம்-ஒரு உயிர் அதில் நம் முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
21)புத்தகம் -நல்ல ஆலோசகர்
22)வாசிப்போம்-மாத்தி யோசிப்போம்
23)ஒழுக்கம் பெற வாசிப்போம்
24)சிந்தனை மேம்படுத்த வாசிப்போம்
25)சிறப்புடன் வாழ வாசிப்போம்
26)புதிய புதிய அர்த்தங்களை நல்ல புத்தகங்களே தருகின்றன
27)புத்தகம்-கருத்துப்பெட்டகம்
28)உண்மை வாசிப்பில் உலகை அறிவோம்
29)தன்னம்பிக்கை பெற வாசிப்போம்
30) சாதனையாளர்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களே
31)வாசிப்பே ஏனைய திறன்களை வளர்க்கிறது
32) வாசிப்போம் -விழிப்புணர்வு பெறுவோம்
33)மனதை ஒருமுனைப்படுத்துவது நல்ல புத்தகங்களே
34)புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை கிணற்றுத்தவளை
35)கற்பனை வளம் பெருக வாசிப்போம்
36)புதிய புதிய மனித சாத்தியங்கள் அடைய புத்தகம் படிப்போம்
37)நிகழ்வுகள் எதுவானாலும் புத்தகங்களையே பரிசாக வழங்குவோம்
38)உலகைப்புரிந்து கொள்ள வாசிப்போம்
39)செல்வத்தால் கிடைக்காத சந்தோசம் நல்ல புத்தகங்களால் கிடைக்கிறது
40) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா
41) கற்க கசடற
42) புத்தகம் ஒரு பொய்கை நதி உள்ளத்தைக் குளிப்பாட்டுவோம்
43)புத்தகம் ஒரு தேன்கூடு -ஆயிரம் கருத்துக்கள் புதைந்துள்ளன
44)காற்றை சுவாசித்தால் உயிர் வாழலாம்- வாசிப்பை சுவாசித்தால் மனிதனாக வாழலாம்
45)நம்மை புதுப்பிக்க வாசிப்போம்
46)அறிவுச்செல்வங்களைப்பெற புத்தகம் படிப்போம்
47)வாசிப்பை நேசிப்போம்
48) வாசிப்போம் வாசிக்க செய்வோம்
49)தெளிவான முடிவெடுக்க வாசிப்போம்
50)சிக்கல்களைத் தீர்க்க வாசிப்போம்
51)படைப்பாளர்களை உருவாக்க நல்ல புத்தகம் படிப்போம்
52)விலைமதிப்பில்லாத பொருள் நல்ல புத்தகங்களே!
53)சுய வளர்ச்சிக்கு துணைபுரிவது நல்ல புத்தகங்களே!
54)நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு!
55)சோதனைகளை சாதனையாக்க நல்ல புத்தங்களை வாசிப்போம்!
56)வாழ்க்கையில் உயர தூண்டுதல் தருவது புத்தகங்களே!
57)அறிவாயுதம் பெற வாசிப்போம்!
58)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!
59)அறியாமை அகல புத்தகம் வாசிப்போம்!
60) ஆணவம் அடங்க புத்தகம் வாசிப்போம்!
61) நிலையாமை உலகில் நிலைபெற இலக்கியம் படைப்போம்!
62) அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் தாய் நல்ல புத்தகங்களே!
63) அதிகாரம் ஒழிய நல்ல புத்தகங்களை படிப்போம்!
64) அறிவுப்புதையல்- நல்ல புத்தகங்களே!
65) ''கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி'' என்ற இத்தாலியரை அறிவோம்! அவர்தான் வீரமாமுனிவர். கொடுந்தமிழ் முறை மாற்றி இனிய தமிழ் ஆக்கியவர்!
என
PARAMES DRIVER //
TAMIL NADU SCIENCE FORUM //
THALAVADY //
ERODE -DISTRICT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக