அன்பு நண்பர்களே,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.8-2-2012 இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மூன்றாவது நாள்.இன்று சத்தி-2 மையத்தில் கிராம மக்களின் ஈடுபாடு,அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவக்குழந்தைகளின் திறமைகள்,ஆசிரியப் பெருமக்களின் உழைப்பு ஆகியன பற்றி இந்த வலைப்பக்கத்தில் காண்போம்.
கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சி முகாமின் மூன்றாவது நாள் விழாவிற்கு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் அரசின் கல்விக்கான நலத்திட்டங்கள் பற்றி விளக்குகின்றனர்.
அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் ஆங்கிலத்திறமையை விவரிக்கிறார் ஆசிரியர் பயிற்றுனர் சாமுண்டீஸ்வரி அவர்கள்.
அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அறிவியல் சம்பந்தமாக உரை நிகழ்த்திய காட்சி.
அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவிகளின் சிறப்பான நடனக் காட்சி.
கலைத்திறன்களை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவக்குழந்தைகளின் திறமைகளை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் அவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் கண்டு களிப்புற்ற காட்சி.
குழந்தைகளின் குரங்கும் குல்லா வியாபாரியும் நாடகக்காட்சி.
குரங்கும் குல்லாவியாபாரியும் நாடகக்காட்சியின் ஒருபகுதி மேலே உள்ள படம்..
நகராட்சி துவக்கப்பள்ளியில் மூன்றாவது வகுப்பு பயிலும் க.சொர்ணப்பிரியா என்ற மாணவிடம் குழந்தைத் தொழிலாளர் பற்றிய பாடல் பாடச்சொல்லிக் கேட்கிறார் ஆசிரியை ஒருவர்.அந்தக்குழந்தையும் (க.சொர்ணப்பிரியா-மூன்றாம் வகுப்பு-நகராட்சித்துவக்கப்பள்ளி) சிட்டுக்குருவி தலையிலே பனங்காயைப்பாருங்க,பனங்காயைப்பாருங்க சிற்றெறும்பு முதுகிலே பாறாங்கல்லைப்பாருங்க,பாறாங்கல்லைப்பாருங்க, பத்து வயது முடியுமுன்னே குடும்ப பாரம்தானுங்க,குடும்ப பாரம் தானுங்க என்பிஞ்சுக்கை உழைச்சாத்தான் நாளும் ஜீவன் வாழுங்க,நாளும் ஜீவன் வாழுங்க! என்ற இந்த கொடூர மனதுடையோர் கல் மனதையும் இளக வைக்கும் குழந்தைத்தொழிலாளர் கொடுமை பற்றிய பாடல் இன்றைய பயிற்சி நாளின் மிகச்சிறப்பானதொரு இடத்தைப்பிடித்தது எனலாம்.(இந்தப்பாடலைக் கேட்ட பிறகு எனக்கு இதை மையமாக வைத்து ''மாற்றம் தேவை'' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் ஒன்று எடுக்கலாம் என்ற எண்ணம் உருவாகிஉள்ளதுங்க.முயற்சிப்போம்)
குழந்தைகளின் வில்லுப்பாட்டு சிறப்பாக இருந்தது.
வேப்பிலை நடனமாடும் மாணவிகளுடன் ஆடுவோர் பயிற்சி அளித்த உள்ளூர் கிராம இளைஞர்கள்.மேலே உள்ள படம்.
பள்ளிக்குழந்தைகளின் நடனத்திற்கு ஊக்கம் கொடுக்கும் ஆசிரியையின் பத்ரகாளி வேடம்.மேலே உள்ள படம்.
விடுகதைப்புதிருக்கு விடையளித்த காட்சி மேலே உள்ள படம்.
அரசு துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் அழகான தமிழ்மொழிசிறப்புப் பாடல் ஒன்று பாடிய காட்சி மேலே உள்ள படம்.
கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தந்த பெரியவர் ஒருவர் கல்வியை வலியுறுத்தும் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடி மையத்தினை மெய் சிலிர்க்க வைத்த காட்சி மேலே உள்ள படம்.
பெண் கல்வியை வலியுறுத்தும் அந்த பழைய சினிமாப்பாடல் எங்களுக்கும் தெரியும் என பள்ளி மாணவிகள் பாடிய காட்சி மேலே உள்ள படம் அதனை ஆர்வமுடன் கேட்கும் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பெரியவர் .
பள்ளிக்குழந்தைகளின் திறமைகளைக் கண்ணுற்ற பெண்மணி ஒருவர் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்களைப் பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.
கிராமக்கல்விக்குழு உறுப்பினர் பயிற்சியில் பங்கேற்றவர் பாராட்டியதோடு பள்ளிக்குழந்தைகளுக்கு பாராட்டுப் பரிசுத்தொகை வழங்கிய காட்சி மேலே உள்ள படம்.
ரங்க சமுத்திரம் பகுதி பள்ளிக்குழந்தைகளும் திறமையானவர்களே,என பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் கிராமக்கல்வி உறுப்பினர்.அருகில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்.மேலே உள்ள படம்.
அரசு துவக்கப்பள்ளி மாணவக்குழந்தைகளுடன் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் இவர்களுடன் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்.மேலே உள்ள படம்.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்விதத்திலும் திறமைகுறைந்தவர்களல்லர்.! என பயிற்சி முகாமில் ஆதாரத்துடன் வாதிட்ட பெண்மணி இவர் இரண்டு டிகிரி முடித்தவர்.விழிப்புணர்வு கொண்டவர்.மேலே உள்ள படம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த கிராம இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் காட்சி மேலே உள்ள படம்.
வேப்பிலை நடனம் பள்ளிக்குழந்தைகளுடன் ஆடிய இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.மேலே உள்ள படம்.
பள்ளி மாணவி ஒருவர் கல்வி எங்களுக்கு சுமையில்லை எனப் பாடிய காட்சி மேலே உள்ள படம்.
அறிவியல் சம்பந்தமான மற்றும் கல்வி விழிப்புணர்வு கொண்ட ஒளிப்படங்கள் திரையிட்ட காட்சி மேலே உள்ள படம்.
பதிவேற்றம்;- PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM,
SATHY & THALAVADY,
ERODE DISTRICT.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக