20 பிப்ரவரி, 2012

கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம்-2012


                                            
அன்பு நண்பர்களே,

     tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.

   நமது இந்திய நாடு முழு எழுத்தறிவு பெற்ற நாடு என்ற நிலையை அடைய மைய அரசு பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.இவ்வகையில் உலக எழுத்தறிவு நாளான 08-09-2009 அன்று நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் ''கற்கும் பாரதம்''-2012  SAAKSHAR BHARATH-2012 என்ற புதிய எழுத்தறிவுத்திட்டத்தினைத் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் மகளிர் எழுத்தறிவு (Adult Female Literacy Rate) 50 சதவீதத்திற்கும் குறைந்து காணப்படும் மாவட்டங்களில் செயல்பட்டு மார்ச்-2012க்குள் எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,தொழிற்கல்வி மற்றும் தொடர்கல்வி அளித்து அவர்தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

   அகில இந்திய அளவில் கற்கும் பாரதம் திட்டம் குறித்த எழுத்தறிவு விழிப்புணர்வு கலைப்பயணம் பிப்ரவரி 20-ந்தேதி { இன்று துவக்கவிழா ஈரோடு மாநகராம் பகுத்தறிவுப் பகலவன், ஈ.வெ.ரா.பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் சொந்த இல்லத்தில் நடைபெற்றது.      



  

   தேசிய கலைப்பயணத்தை துவக்கிவைக்க வருகை தரும் மாணபுமிகு.S.காந்தி செல்வன்-குடும்பநல மற்றும் சுகாதார மத்திய இணை அமைச்சர் அவர்களை வரவேற்க தயாராக உள்ள கூட்டத்தினர் மேலே உள்ள படம்.
   மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களை வரவேற்கக் காத்திருக்கும் கோலாட்டம் மற்றும் மேளதாளக் கலைக்குழுவினர்.

    துவக்கவிழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை செலுத்தும் காட்சி.

     கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் துவக்கவிழாவில் வரவேற்புரை மற்றும் துவக்கவுரை வழங்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் திருமிகு. Dr.N.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.அமர்ந்திருப்பவர்கள்.திருமிகு.M.அண்ணாதுரை,அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு) . திருமிகு.R.மணி அவர்கள்-மாவட்டத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு. திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள்,இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்கம்.புதுடெல்லி.மாண்புமிகு.S.காந்தி செல்வன்,மத்திய இணைஅமைச்சர் அவர்கள்,குடும்பநலம் & சுகாதாரம்.மேலே உள்ள படம்.
   
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு. பேரா.Dr.N.மணி அவர்கள் மாநிலத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தமிழ்நாடு.மேலே உள்ள படம்.
   
       மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள் இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்ககம்.மேலே உள்ள படம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்கள் SAAKSHAR BHARAT என்னும் கற்கும் பாரதம் தேசிய கலைப்பயணத்தினை துவக்கி வைத்து உரையாற்றுகையில் இந்த திட்டத்தினை அனைவரும் பயன்படுத்தி எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,மற்றும் தொடர்கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும்.என அறிவுறுத்தினார்.
   ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கிராம மக்களைத்திரட்டி ''எங்கள் கனவுகளில் எங்கள்கிராமம், மற்றும் எங்கள் கனவுகளில் நமது இந்தியா'' என விவாதித்து புத்தகமாகத் தயாரிக்கப்படும்.இவ்வாறு இந்தியா முழுவதும் ஆயிரம் ஒன்றியங்களில் ஒரு இலட்சம் கிராமங்களில் பெறப்படும் புத்தகங்கள் இறுதியில் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மக்கள் புத்தகங்கள் தயாரித்த கல்லூரி மாணவ,மாணவியர் மேலே உள்ள படம்.

  மக்கள் புத்தகங்களை கலைப்பயணக்குழுவினரிடம் ஒப்படைக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.உடனிருப்பவர் பேரா.Dr.G.பாண்டே அவர்கள்.

      கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணத்தை மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள்  கொடி அசைத்து துவக்கிவைக்கும் காட்சி.
கலைப்பயணக்குழுவினர் விபரம்.
  (1)திரு.ஆறுமுகம்-கிருஷ்ணகிரி(தலைமை) 
  (2)திரு.கருணாகரன்-கிருஷ்ணகிரி 
  (3)மரியாதைக்குரிய.கலா-கிருஷ்ணகிரி 
 (4)மரியாதைக்குரிய.ஜெயலட்சுமி-கிருஷ்ணகிரி 
 (5)திரு.சாமுவேல்-வேலூர்,
 (6)வ.விஜயரசு-தருமபுரி,
 (7) திரு.சண்முக சுந்தரம்-தருமபுரி,
 (8)திரு.ஏழுமலை-திருவண்ணாமலை,
 (9)மரியாதைக்குரிய.ராணி-திருவண்ணாமலை,    (10)மரியாதைக்குரிய.J.A.செல்வி-திருவண்ணாமலை, (11)மரியாதைக்குரிய.M.செல்வி-திருவண்ணாமலை,(12)மரியாதைக்குரிய.தமிழ்ச்செல்வி-திருவண்ணாமலை,(13)மரியாதைக்குரிய.சசிகலா-திருவண்ணாமலை,
   மாண்புமிகு.மத்திய அமைச்சர் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு ,கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் அதன் திட்டம்,நோக்கம்,அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கிய காட்சி.அருகில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர்,மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் அவர்கள்.மேலே உள்ள படம்.

    ''பெண்மை போற்றும் தேசமே'',என்ற பாடலுக்கு கோலாட்டம் நடனம்.

  மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் அவர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் பேரா.Dr.N.மணி அவர்களும் கலைப்பயணக்குழுவினரின் நடனத்தைக் காணும் காட்சி.மேலே உள்ள படம்.
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டச் செயலாளர் அவர்களும்,மாவட்டத்தலைவர் அவர்களும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்களும் கலைப்பயணக்குழுவின் நிகழ்ச்சிகளைக்கண்டு களிக்கும் காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையப் பொறுப்பாளர் அரங்கில்!!!!


       கடந்த ஒருவார காலமாக பயிற்சி எடுத்த கலைக்குழுவினர்களுக்கு சுவையான சாப்பாடு சமைத்து வழங்கிய கிராமத்து சமையல்காரப் பெண்மணி அவர்களுக்கு பாராட்டு வழங்கிய காட்சி மேலே உள்ள படம்.
  இந்த கலைப்பயண நிகழ்ச்சியில்  (1) வள்ளியின் வழக்கு, (2)பூங்கோதை,(3)படித்த பாரதி, (4)சரஸ்வதி, (5)கொள்ளி வை, (6)பவுனு குஞ்சு,,,,, போன்ற நாடகங்களும், மேலும்    (1)கற்கும் பாரதம்.........................,(2)வீதியிலே,வீதியிலே.....................,(3)அச்சம்,மடம்,நாணம்..................(4)பெண்மை போற்றும் தேசமே................இன்னும் பல, கிராமியப்பாடல்கள், எழுத்தறிவு விழிப்புணர்வுப்பாடல்கள், கோலாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,கரகாட்டம் என கிராம மக்களைக் கவர்ந்து கல்வி விழிப்புணர்வினைக்  கொடுக்க அனைத்து கிராமங்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.என்றனர் கலைக்குழுவினர்.
  துவக்கவிழா அரங்கத்தில் நடத்திய ''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....


''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....


                      ''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....


                           ''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....

           ''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....



''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....






   மரியாதைக்குரிய.M.அண்ணாதுரை அவர்கள் கையெழுத்து பெறப்பட்ட துணி பேனரை பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
   மக்கள் கையெழுத்து பெற்ற துணி பேனரை திருமிகு.பாண்டே அவர்களிடம் ஒப்படைத்த காட்சி மேலே உள்ள படம்
 

     இறுதியாக நன்றியுரை ஆற்றுகிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட செயலாளர் திருமிகு.R.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.
      POST BY:-            PARAMESWARAN.C
                           TAMILNADU SCIENCE FORUM,
                                       ERODE DISTRICT



  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக