15 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-06

     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                    tnsfthalavady.blogspot.com வலைப்பதிவிற்குதங்களை இனிதே வரவேற்கிறோம்.
          இன்று கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் பயிற்சிமுகாம் ஆறாம் நாள்.



   கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஆறாம்நாளான இன்று வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று துவக்கவுரை ஆற்றுகிறார் திருமிகு.ரகுபதி.ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
   

       திருமிகு. மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் வட்டார மக்கள் தங்கள் குழந்தைகளை அவசியம் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்கு கல்வி அறிவூட்ட ஆர்வம் காட்டி,அனைவருக்கும்கல்வித்திட்டத்தின் கீழ் அரசு செயல்படுத்தும் இலவச திட்டங்களை,வசதிகளை  நல்லமுறையில் பயன்படுத்தி வருங்காலத்தில் கடம்பூர் பகுதி மக்களும் நல்ல முன்னேற்றத்தைக்காண வேண்டும்.என வலியுறுத்திய காட்சி மேலே உள்ள படம்.
 
    கல்கடம்பூர் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கல்வி உரிமைச்சட்டம்,பெண்கல்விச்சட்டம்,கட்டாயக்கல்விச்சட்டம் என மக்களின் நலனுக்காக இந்த அரசு சட்டங்களையே போட்டு அனைவருக்கும் கல்வித்திட்டம் வாயிலாக அரசுப்பள்ளிகளில் கட்டடம்,உபகரணங்கள் மற்றும் அருகாமைப்பள்ளி,இடைநின்றகுழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சிப் பள்ளி,மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்சிப்பள்ளி என உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.இதனைக் கண்காணித்து தங்கள் குழந்தைகள் பயன்பெற வேண்டும், என வலியுறுத்தும் காட்சி மேலே உள்ள படம்.

   திருமிகு.ரகுபதி.ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கணிணியில் கல்வி சம்பந்தமான படங்களை திரையிட்டு விளக்கும் காட்சி மேலே உள்ள படம்.
  மதிய உணவு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு பெற்ற பொதுமக்கள் அனைவரும் மதிய உணவு உண்ண,பரிமாறும் ஆசிரியப்பெருமக்கள் மேலே உள்ள காட்சி.
   பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளியின் மாணவக்குழந்தைகள் ''Babirie Girls'' நடனம் ஆடிய காட்சி மேலே உள்ள படம்.
       கல்கடம்பூர் கிராமக்கல்விக்குழு பயிற்சிமுகாமில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி  திறமைகளை வெளிப்படுத்திய பெரிய உள்ளே பாளையம்- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள் 1)மு.பிரியதர்ஷினி, 2)அ.சௌமியா, 3)ஒ.நந்தினி, 4)சி.கீதா, 5)சி.அனு, 6)மு.திவ்யா,
 7)சி.ஜடைசாமி, 8)ந.சதீஸ்குமார், 9)கெ.சித்தேஷ், 10)மு.பிரகாஷ், 11)ம.சுகேந்திரன்  இவர்களுடன் அப்பள்ளித். தலைமை ஆசிரியை திருமிகு..கு. சாந்தி அவர்களும் மற்றும் திருமிகு.. த.இரமேஷ்.இடைநிலை ஆசிரியர் அவர்களும் மேலே உள்ள படம்

கல்கடம்பூர் அடுத்து உள்ள பெரிய உள்ளே பாளையம்  ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவியர்   ''ஓ.ரிங்கா,ரிங்கா''   என்ற பாடலுக்கு நடனம் ஆடிய எழில்மிகு காட்சி மேலே உள்ள படம்.



  பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்  துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள்   ''சாதனை என்பது சாத்தியமே''    என்ற பாடலுக்கு நடனமாடிய கலைநயமிக்க   காட்சி மேலே உள்ள படம்.
பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்  துவக்கப் பள்ளியின்   மாணவர்கள்    "Push,Push,Push The Air"      என்ற இசைக்கு நடனம் ஆடிய காட்சி மேலே உள்ள படம்.

பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்   துவக்கப்   பள்ளியின் மாணவக் குழந்தைகள்  "சாதனை என்பது சாத்தியமே"   என்ற பாடலுக்கு  நடனம் ஆடிய எழில்மிகு காட்சி மேலே உள்ள படம்.


பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள்,  ''ரொம்ப,ரொம்ப நகையெல்லாம் கேட்க மாட்டேன்''  என்ற  கிராமியப்பாடல் பாடி நடனமாடிய  அற்புதக் காட்சி மேலே உள்ள படம்.



     ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரிய சாலட்டி  பள்ளி மாணவன் சு.நாகராஜ் . இவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசிய விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பயிற்சி அளித்த ஆசிரியர்,திருமிகு.இரா.முனியப்பன் அவர்கள் அருகில் உள்ள படம்.மேலே உள்ள படம்.
  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - பெரிய சாலட்டி மாணவன் தமிழ்ப்பாடல் பாடியது.


இவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவருங்க. மிக அழகான பாடல் ஒன்று பாடினாருங்க.மேலே உள்ள படம்.


   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் நல்ல  குணங்களைப்பற்றி கருத்துரை வழங்கினார்.மேலே உள்ள படம்.
 ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு. மெய்யப்பன் அவர்கள் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களூக்கான பயிற்சி மையத்தில் வருகை தந்து பல்வேறு வகைகளில் பேச்சாற்றல்,மொழிப்புலமை,பாடல்,நடனம் ,நடிப்பு என அவரவர் திறமைகளை வெளிப்படுத்திய அந்தப்பகுதி வட்டார அரசுப்பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.
  மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் கல்கடம்பூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள்.மேலே உள்ள படம்.



    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி மற்றும் தாளவாடி வட்டாரப் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் பள்ளி மாணவருக்கு பரிசு வழங்குகிறார்.மேலே உள்ள படம்.

    ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.ரகுபதி அவர்கள் பள்ளி மாணவர் ஒருவருக்கு பாராட்டி நல்கி பரிசு வழங்குகிறார்.மேலே உள்ள படம்.

 கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு..S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள் ஒரு ஆசிரியரின் சேவையினைப்பாராட்டி பரிசு வழங்குகிறார் மேலே உள்ள படம்.
  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் பள்ளி மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் மேலே உள்ள படம்.
  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மூர்த்தி அவர்கள் மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகிறார்.மேலே உள்ள படம்.

       கல்கடம்பூர் மலைப்பகுதி   கிராமக்கல்விக்குழு பயிற்சி மையத்தின் நிறைவு  நாளான இன்று கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மரியாதைக்குரிய  S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள் உரையில்  13-ந்தேதி முதல் 15-ந்தேதியான இன்றுவரை பல்வேறு பயிற்சிகள்,மாணவக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் அதற்கான ஆசிரியர்களின் வழிகாட்டும் திறன்கள் மிகவும் பாராட்டும்விதமாக இருந்தது.அதேபோல்,இங்கு மூன்று நாட்களும் வருகை தந்து  அனைவருக்கும் கல்வித்திட்டம் சத்தி வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுனர்கள் திருமிகு.ரகுபதி அவர்கள்,திருமிகு.மூர்த்தி அவர்கள் மற்றும் திருமிகு.மெய்யப்பன் அவர்களின் விரிவான விளக்கங்கள் வாயிலாக கல்வி உரிமைச்சட்டம்,பெண்கல்விச்சட்டம்,இடைநின்ற குழந்தைகளின் கல்வி,சுகாதார மேம்பாடு,செயல்வழிக்கற்றல்,மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி மற்றும் கல்விமுகாம் என அரசு செய்து வரும் பல்வேறு சலுகைகளைப்பற்றியும்,வசதிகளைப்பற்றியும் அறிந்து கொள்ள வருகை தந்த  கடம்பூர் மலைப்பகுதி வட்டாரப் பொது மக்கள் பங்களிப்பு ,மலைப்பகுதிமக்களுக்கான விழிப்புணர்வு கொடுக்க இங்கு பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்  என  அனைத்தும்  மிகச்சிறப்பாகவும்,திறமையாகவும் மலைப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் விதத்தில்  சிறப்பாக நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் பங்குபெற்று ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.
         
 பயிற்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
  பதிவேற்றம்; PARAMESWARAN.C
                  TAMIL NADU SCIENCE FORUM,
                        THALAVADY & SATHY 
                             ERODE DISTRICT.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக