02 அக்டோபர், 2012

கணித மேதை ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விழா-2012

02 அக்டோபர் 2012

 


தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம். வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளிக்கும் விதமாக T.N.S.F.ஈரோடு- சார்பாக நடந்து வரும் நிகழ்வுகள் பற்றி இங்கு காண்போம்.
  

   இன்று (02-10-2012) ஈரோடு மாநகர்-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணித மேதை ராமானுஜர் 125-வது ஆண்டுவிழா வரவேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 முடிவற்றதைக் கண்ட மாமனிதன் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆண்டை மத்திய அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையத்தின் வழிகாட்டுதல் பேரில் கணித மேதை பிறந்த ஈரோட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மையத்தின் பொறுப்பில் நிறைவுவிழா நடத்த அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரவேற்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு  பேரா.V.பெருமாள் அவர்கள்  TNSF மாவட்ட துணைத் தலைவர்,அவர்கள் தலைமை ஏற்றார்.

திருமிகு.R.மணி அவர்கள் TNSF மாவட்டச் செயலாளர்,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் DR.பேரா.N.மணி அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்

மரியாதைக்குரிய கணிதத்துறை பேராசிரியப்பெருமக்கள் உரைநிகழ்த்திய காட்சிகள்.











 திருமிகு.R. சக்கரவர்த்தி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உரையாற்றிய காட்சி


 மரியாதைக்குரிய,ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி

    திருமிகு.ஆ.கதிரேஷ் அவர்கள், கணித ஆசிரியர் . (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தட்டக்கரை-அந்தியூர்) உரை நிகழ்த்திய காட்சி.







 திருமிகு.பா.ஸ்ரீதர் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு) உரை நிகழ்த்திய காட்சி.


 திருமிகு.M.பாலு அவர்கள் (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியல் கல்லூரி)உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.


 திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ERODE-) நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
    {இக்கூட்டத்தில் திருமிகு.சி.பரமேஸ்வரன் அவர்கள் (தலைவர்-தாளவாடி ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உட்பட மேலும் பல கணித ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் உரை நிகழ்த்தினர்.}

   
     தேசிய கணித ஆண்டின் நிறைவு விழாவின் வரவேற்புக்குழுவிற்கு  


     தலைவராக- 
    திருமிகு.M.பாலகிருஷ்ணன் அவர்களும்
   (முன்னாள் செயலாளர்-கொங்கு கல்வி நிலையம் -ஈரோடு)
செயலாளராக 
   திருமிகு.R.மணி அவர்களும்
  (மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு)  துணைத்தலைவர்களாக 
     (1)திரு.M.பாலு அவர்கள்
   (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியற் கல்லூரி)
   (2)Dr.நாகராஜ் அவர்கள் (கணிதத்துறை தலைவர்-கொங்கு கலை அறிவியல் கல்லூரி) 
    (3)Dr.V.பெருமாள் அவர்களும் (T.N.S.Fஈரோடு.மாவட்ட துணைத் தலைவர்)     
(4)பேரா.R.விஸ்வநாதன் அவர்களும்(கொங்கு பொறியியல் கல்லூரி)

இணைச்செயலாளர்களாக 
   (1)திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்
 (தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஒன்றியம்)(2)திருமிகு,P.ஸ்ரீதர் ஆசிரியர் அவர்களும்
 (அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு வட்டார வள மையம்) (3)மரியாதைக்குரிய,பேரா. மேரி டயானா அவர்களும்
   (பாரதிதாசன் கலைக்கல்லூரி) 
  (4)திருமிகு.N.வேலுமணி அவர்களும்
   (செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)(5)திருமிகு.N.சண்முக சுந்தரம் ஆசிரியர்  அவர்களும்,
   குழு உறுப்பினர்களாக 
   ஈரோடு மாவட்ட TNSF செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது மற்றும் 
  மரியாதைக்குரிய டாக்டர்,பேரா.N.மணி அவர்கள் (T.N.S.F.மாநிலத்தலைவர்) தேசிய கணித ஆண்டின் நிறைவுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொண்டு வழிகாட்டுவது.என இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை வழங்கினார்.





PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY - SATHY
ERODE-DT.  
  

 
 

19 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண:     அன்பு நண்பர்களே,வணக்கம்.          தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ,மாநில தலைவர் அவர்களது கட்டுரை -TNSFTHENI.BLOGSPOT.COM வாயிலாக.......    ...

புத்தகங்களுடன் இலவச அலமாரி-ஈரோட்டில்



அன்பு நண்பர்களே,வணக்கம். 
             கடந்த 17-9-2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திருமிகு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள்  அருமையான யோசனை ஒன்று தெரிவித்தார். 
             அதாவது எந்தப்பகுதியைச்சேர்ந்தவர்களானாலும் சரிங்க! புத்தக அலமாரி மற்றும் அறிவியல் உட்பட நல்ல தரமானபுத்தகங்களை வழங்கலாம். அதாவதுங்க!  பள்ளிகளுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ,அனாதை இல்லங்களுக்கோ,பயிற்சி நிலையங்களுக்கோ,பெரிய பெரிய கம்பெனிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ,மருத்துவமனைகளுக்கோ,முதியோர் இல்லங்களுக்கோ,தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கோ,அறிவுச்செல்வங்களைப்பெருக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள நன்கொடையாளர்கள் அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது விருப்பமுள்ளவர்கள் விலைக்கு பெற்றுக்கொள்ளவோ தாங்கள் செய்ய வேண்டியது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுத்தால் போதும். ஐந்தாயிரத்திற்கு உண்டான நல்ல தரமான புத்தகங்களுடன் இலவசமாக அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க கண்ணாடிபொருத்திய புத்தக அலமாரி கொடுக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிடவும். அல்லது அருகில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களை அணுகவும்.

வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி


                    முயற்சிகள் தவறலாம்! முயற்சிக்க தவறக்கூடாது!!


 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                            நமது ஈரோடு மாவட்டம்- சத்தி வட்டம்- தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரப்பகுதிவாழ் 'பிறமொழி' பேசும் மக்களுக்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(தாளவாடி மையம்)
        மற்றும்  டிவைன் மெட்ரிக் பள்ளி (தாளவாடி)உடன்  இணைந்து  தமிழ் மொழிப்பயிற்சி மையம்  ஏற்படுத்தி உள்ளது. 
          இந்த மொழிப்பயிற்சி மையம் தாளவாடி கொங்கள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்ட காஜனூர்  டிவைன் மெட்ரிக் பள்ளியில் 18-09-2012 அன்று முதல் நடைபெறுகிறது.விருப்பமும்,ஆர்வமும் உள்ள இளைஞர் முதல் வயதானவர் வரை சாதி, மத, இன, மொழி, வயது ,பாலினம் வேறுபாடு இன்றி அனைவரும்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.இப்பயிற்சி சமூக நலன் கருதி இலவசமாக நடத்தப்படுகிறது.

        மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் - காரணம்.
      
               இத்தாலி நாட்டைச் சேர்ந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" (Constantine joseph beschi) என்னும் பெயருடைய கிறித்துவப் பாதிரியார் அவர்கள் கிறித்துவ சமயம் பரப்ப 1710 ஜூன்மாதம் 'லிஸ்பனில்' புறப்பட்டு 'கோவா' (இந்தியா) வந்து அங்கிருந்து 'கொச்சி' வந்து பிறகு கால்நடையாக 'அம்பலக்காடு' வந்து தங்கி மதுரையில் 'காமநாயக்கன்பட்டி' வந்து சேர்ந்தார்.
              தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் கற்றிருந்த போதிலும் தமிழின் இனிமை மற்றும் பெருமையினை உணர்ந்து   இத்தாலி மொழியிலிருந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்ற தனது பெயரை "தைரிய நாதன்" என மாற்றினார்.பிறகு அந்தப்பெயர் வடமொழி என அறிந்து மீண்டும் "வீரமாமுனிவர்" என தனது பெயரை மாற்றி தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டார்.
          முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தார்.மேலும் தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து எளிமையாக்கினார்.செய்யுள் நடையில் இருந்த 'சதுரகராதி' யினை பேச்சுத்தமிழில் படைத்தார்.அதனால் 'தமிழ் அகராதிகளின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
                 இலக்கியப்படைப்புகளை உரைநடையில் அறிமுகப்படுத்தினார்.இவருக்கு முன்னரே "தத்துவ போதகர்" (1577-1656) இவரது இயற்பெயர் "இராபர்ட் டி நொபிலி" (Robert de nobili) என்னும் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கிறித்துவ பாதிரியார் சமயம் பரப்ப இந்தியா வருகை தந்த போது  முதன்முதலாக  பிறமொழிக்கலப்போடு தமிழில் உரைநடை எழுதியுள்ளார்.எனினும் வீரமாமுனிவர் பிறமொழிக்கலப்பின்றி தூய தமிழில் உரைநடை எழுதினார்.
             உரைநடையில் வேதவிளக்கம்,வேதியர் ஒழுக்கம்,ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,பரமார்த்த குருவின் கதைகள்,வாமன் கதை, திருக்காவல் ஊர்க்கலம்பகம்,கித்தேரி அம்மன் அம்மானை, தேம்பாவனி என 23 உரைநடைகள் எழுதி உள்ளார்.உலகப்பொதுமறை நூலான திருக்குறளை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
         இவ்வாறு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,அகராதி,மொழி பெயர்ப்பு,காவியம் என தமிழ்த்துறையில் பல சிறப்பான படைப்புகளை தந்து தமிழுக்காக செய்த தொண்டின்  நினைவாக  தாளவாடியில் மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் இட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளோம்.

      வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்ப்பேட்டை அருகில் (6கிலோமீட்டர் தூரத்தில்)உள்ள கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகிமாதா கோவிலில் அமைந்துள்ளது.
           வீரமாமுனிவரின் சரித்திரத்தை 1822-இல் வித்துவான் முத்துசாமிபிள்ளை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டு உள்ளார்.

TNSF ERODE பொதுக்குழு கூட்டம்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் 

 

 

      அன்பு நண்பர்களே,வணக்கம். 

             17-09-2012 இன்று மாலை5-30 மணிக்கு தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் TNGEA - அலுவலகத்தில்  நடைபெற்றது.


      மாநிலத்தலைவர் பேரா.ந.மணி அவர்கள் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதித்த காட்சி.அருகில் திரு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.




      மாவட்ட செயலாளர் திரு.ர. மணி அவர்கள் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றி  ஏட்டில் பதிந்த காட்சி.அருகில் மரியாதைக்குரிய ரேவதி அம்மையார் அவர்கள் மலாய் சென்று கற்பித்தலில் எளிமை பற்றி ஆய்வுநூல் எழுதி சமர்ப்பித்து அதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் ஆய்வு நூலை பார்வையிடும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.

        பொதுக்குழு கூட்டத்தில்  முக்கிய நிகழ்வாக கணித மேதை இராமானுசர் பிறந்த ஊரான நமது மாவட்டத்தலைநகராம் ஈரோடு என்பதை வெளிநாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள்,கணித மேதைகள்,அறிஞர்கள் அறிந்து அதன்விளைவாக நமது ஈரோடு நகருக்கு வருகை தந்து கணித மேதை இராமானுசர் பிறந்த வீட்டை அடையாளம் கண்டு செல்கின்றனர்.அவர்களுக்கு வழிகாட்டியாக பேரா.ந.மணி அவர்களே செயல்பட்டு கணித மேதை பிறந்த வீட்டை அடையாளம் காட்டி வருவதை சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த கட்டமாக கணித மேதை 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி இந்த வருடத்தை நமது அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்து வருடம் நிறைவடைவதை ஒட்டி நிறைவு விழாவினை நமது ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக திரு.சக்கரவர்த்தி அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
         அடுத்து உரையாற்றிய திருமிகு. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் உட்பட பொதுஇடங்களில் விருப்பமுள்ள புரவலர்களைக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலக அலமாரியுடன் சேர்த்து வழங்கும் அற்புத யோசனையை தெரிவித்தார்.அதற்கான விபரம் வேண்டுவோர் தமிழ்நாடு அறிவியல் இயகம்-ஈரோடு மாவட்ட நண்பர்களை அணுகவும்.அல்லது இங்கு கருத்துரை இடவும்.ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் புத்தக அலமாரி இலவசமாக வழங்கப்படும்.என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.


  

22 ஜூலை, 2012

ஆற்றல் வளம்



    

          மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும்.

மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்..
Ø படிம எரிபொருள் ஆற்றல் (Fossil fuel energy)
Ø விறகு (Fire wood) மூலம் கிடைக்கும் ஆற்றல்
Ø நீர் ஆற்றல் (Hydraulic energy)
Ø அணு ஆற்றல் (Nuclear energy)
மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
ü சூரிய ஆற்றல் (solar energy)
ü காற்றின் ஆற்றல் (Wind energy)
ü கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
ü கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
ü புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
ü உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
ü உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
ü உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)
     

ஆற்றல் வளங்கள்-2012- NCSC

அன்பு நண்பர்களே,
    இனிய வணக்கம்.
     தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012க்கான ஆய்வுத்தலைப்பு '' ஆற்றல்'' அது பற்றிய விபரம் காண்போம்.
       மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம்.
            
        நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இயற்கை எரி வாயு ஆகியனவற்றைப் படிம எரிபொருள் ஆற்றல் தருவன எனக் குறிப்பிடலாம். பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் பூமியில் புதையுண்ட தாவரம் மற்றும் விலங்குகள், மக்கிப் போய்ச் சிதைவடைந்ததால் உண்டானதே படிம எரிபொருளாகும். இவை பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. புதிதாக உற்பத்தி ஆக இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன் படுத்திக் கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் இவை தீர்ந்து போகலாம். மேலும் இவற்றையும், பல காலமாக எரிபொருளாகப் பயன்பட்டு வரும் விறகையும் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச் சூழல் தூய்மைக் கேட்டினை உருவாக்கும். மேலும் புவி வெம்மை எனும் பெரும் கேட்டினையும் விளைவிக்கும். புவி வெப்பமடைந்தால் கடல் மட்டம் உயருதல், நிலப் பரப்புக்கள் நீரில் மூழ்குதல், பனிப் பாறைகள் உருகுதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றம் அடைதல், வெள்ளம், புயல் போன்றவற்றால் பேரிடர்கள் விளைதல் போன்ற பல தீங்குகள் நிகழும்.
நீர் மின்சக்தி உற்பத்தி செய்வதில், ஏராளமான பொருட் செலவுக்கு ஆளாவது, தகுதியான இடம் இல்லாதது, கட்டுமானத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு அடைவது, அதிகப்படியான இழப்பீடுகள் தர வேண்டியிருப்பது, உற்பத்தி செய்த மின் சக்தியைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்வதால் இடைஞ்சல்களுக்கு ஆளாவது எனப் பல சிக்கல்கள் உள்ளன.