சர்வதேச புள்ளி விபரம் – உலக சுகாதார அமைப்பு (WHO)
  • ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மனிதர்கள் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள்.
  • 20 முதல் 50 மில்லியன் மனிதர்கள் படுகாயம் அடைகிறார்கள்.
  • சாலை விபத்தில் இறக்கும் 90 சதவிகித மனிதர்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.
  • சாலை விபத்தில் பலியானவர்களில் 50 சதவிதிதம் பேர் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் இருசக்கர ஓட்டுநர்கள் ஆவர்.
    க்ஷி உலக அளவில் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய வரிசைப் பட்டியலில் 9 வது இடத்தை சாலை விபத்துக்கள் அடைந்துள்ளது. (2004)
  • இது 2030 ஆம் ஆண்டில் 5வது இடத்தைப் பிடிக்கும் அபாயம் உள்ளது.
தேசிய புள்ளி விபரம் – இந்தியா
  • ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் சாலை விபத்தில் உயிரிழக் கிறார்கள்.
  • ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாயை இந்தியா சாலை விபத்தினால் இழக்கிறது. (Courtesy Financial Express)

தீர்வுகள்

  • சாலைப் பாதுகாப்பிற்கான தேசியக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டு இதை மத்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
  • சாலைப் பணிகளை திட்டமிடும் போது, அனைத்து வகை சாலை பயன்பாட்டாளர் களையும் அவர்களுக்குரிய உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் சாலை மேம்பாட்டுத் திட்டங் களுக்காக பல கோடி ரூபாயை செலவிடும் அரசாங்கம், சாலை மற்றும் வாகன பயன்பாடு பற்றிய கல்வியிலும் கவனம் செலுத்தி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • கற்றுக் கொடுத்ததை கடை பிடிக்காத வர்களை, பயிற்சி மையங்களுக்கு அனுப்பி, சான்றிதழ் கொடுத்த பிறகே, சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  • வாகன வேகத்தை நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசாங்கத்திடமே தற்போது உள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் கட்டளைக்கு உட்பட்டதாகவும், சர்வதேச சாலைப் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துக் களுக்கு உடன்பட்டதாகவும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதில் இந்தியா 30 சதவிகிதமும், தலைக்கவசம் மற்றும் இருக்கை பெல்ட் அணிவதை கட்டாயப்படுத்துவதில் 20 சதவிகிதமும் தான் கட்டுப்படுத்தி இருக்கிறது.
  • சாலையிலும் சாலை சந்திப்புகளிலும் அதிவேகமாக வாகனத்தை செலுத்துவது முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும்.
    சர்வதேச புள்ளி விபரம் உலக சாலைப் பாதுகாப்பு நடுவம்
  • உலக வரலாற்றில் மனிதர்களை அழிக்கும் பேராபத்துக்களில் பல அங்கீகாரம் பெறுவது இல்லை, அதிரடியாக களையப்படுவதும் இல்லை. இதில் சாலை விபத்துகளும் ஒன்று.
  • சாலை விபத்துகளில் சுமார் 3500 பேர் தினமும் உயிரிழக்கிறார்கள்.
  • சாலை விபத்துகளில் சுமார் 1000 பேர் தினமும் படுகாயமடைகின்றனர்.
  • ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒரு குழந்தை சாலையில் சரிந்து உயிரிழக்கிறது.
  • 2,60,000 குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இறக்கிறது.
  • பல மில்லியன் குழந்தைகள் படுகாயமடை கிறது.
  • சாலையை கடக்க முடியாமல் தினமும் தடுமாறும் பள்ளிக் குழந்தைகளையும், முதியவர்களையும் சாலை வடிவமைப் பாளர்கள் கருத்தில் கொள்ள தவறி விடுகிறார்கள்.
  • இந்த நிலை தொடர்ந்தால் 2015 ஆம் ஆண்டு சாலை விபத்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளை செயற்கை மரணத்திற்கும், உடல் ஊனத்திற்கும் ஆளாக்கிவிடும் அபாயம் உள்ளது.
  • இது மேலும் மோசமடைந்து 2030 ஆண்டு ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் மனிதர்களை கொன்று குவிக்கும் பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது.
  • சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி சர்வதேச அமைச்சர்களின் மாநாடு வரும் நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் (2009) மாஸ்கோ நகரத்தில் நடைபெற இருக்கிறது.
  • சாலைப் பாதுகாப்பிற்காக அரசியல் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே 5 மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும்.
  • இந்த 5 மில்லியன் குடும்பங்களுக்கு மரணச் செய்தி வரவிருப்பதை அறியாமல் நாம் நம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
  • இதற்கான தீர்வை அளிக்கும் வல்லுநர்களை அரசாங்கம் வரவேற்று, பயனடைய வேண்டும்.
  • சர்வதேச முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இந்த சாலை விபத்தை தவிர்க்க தடுமாறி இருப்பது சர்வ தேசத்திலும் இருக்கும் அரசியல் வழிகாட்டிகளின் தோல்வியாகும்.
  • சாலைப் பாதுகாப்பிற்காக 1 டாலர் செலவு செய்வது உயிரிழப்பு மற்றும் வாகனச் சேதாரம் போன்றவற்றால் ஏற்படும் 20 டாலர் விரயத்தை மிச்சமாக்கும்.
  • பல ஆயிரம் சாலை விபத்துக்களை பற்றி அறிந்து கொண்ட பிறகும், பொது மக்கள் தங்கள் கடமைகளை உணராமல் வாகனத்தை செலுத்துவது மிக முக்கியமான பிரச்சனை யாகும்.
  • சாலைப் பாதுகாப்பில் 70 சதவித பொறுப்பு பொதுமக்களிடம் தான் இருக்கிறது. (சாலை விபத்து ஆராய்ச்சி மையம் கோவை)
மிதமான வாகனப்பயணம்
மீதமாகும் வாழ்க்கைப்பயணம்!
சாலை ஞானம் வளர்ப்போம்
சாலை விபத்தை தடுப்போம்!
மனிதனை கொண்டு செல்வதற்குத் தான்
வாகனம். கொன்று செல்வதற்கு அல்ல!
விழி பூட்டைத் திற……
விழிப்பூட்டைப் பெற
மூன்று கண்ணாடி பொருத்திடு…
மூன்றாம் கண்ணைத் திறந்திடு!
மனம் உழன்றது
வாழ்க்கைச் சக்கரத்தில்….
உடல் சுழன்றது
வண்டிச் சக்கரத்தில்….
சேமிக்க நினைத்து சில நொடிகள்…
சேதம் அடைந்தது பல உயிர்கள்…
சிகப்பு விளக்கை மதித்திடு…
இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு!

பொது மக்கள் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான
டார்ச் விளக்கு நிகழ்ச்சி

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 3 வகையாகப் பிரித்து மரணம் அடைந்தவர்களை சிகப்பு விளக்காலும், ஊனமடைந்தவர்ளை மஞ்சள் விளக்காலும் படுகாயம் அடைந்து பிழைத்தவர் களை பச்சை விளக்காலும் அடையாளம் காணும் வகையில் வ.உ.சி மைதானத்தில் நவம்பர் 15, மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் டார்ச் விளக்கை எடுத்து வர வேண்டும். அந்த டார்ச் விளக்கின் முகப்பை சிகப்பு நிற கலர் கண்ணாடி காகிதத்தால் மறைத்து, ஒளியை பரப்பி தான் தனக்கு தெரிந்த ஒருவரை நிரந்தரமாக இழந்து விட்டதை தெரிவிக்கலாம்.
அதுபோலவே, மஞ்சள் நிற ஒளியை பரப்பி தான் தனக்கு தெரிந்த நபர் ஊனமுற்று இருக்கிறார் என்பதை தெரிவிக்கலாம். அதுபோலவே பச்சை நிற கலர் கண்ணாடி காகிதத்தை பயன்படுத்தி, பச்சை ஒளியை பரப்பி , தான் அல்லது தனக்குத் தெரிந்த நபர் சாலை விபத்தினால் படுகாயம் அடைந்து இருக்கிறார் என்பதை தெரிவிக்கலாம்.
இவ்வகையில் பாதிக்கப்பட்ட அனைவரும் வ.உ.சி மைதானத்திற்கு பெருந்திரளாக வந்து இந்த 3 வகையான ரணங்களையும் டார்ச் விளக்கின் உதவியுடன் 3 வகையான நிறங்களை பயன்படுத்தி பிரதிபலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து ஓட்டுநர்களையும் பொறுப்புடன் வாகனத்தை செலுத்துமாறு வலியுறுத்த, உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை. அனைவரும் வருக!
சாலை விபத்திற்குள்ளானவர்களின் சர்வதேச நினைவு நாள் நவம்பர் 15, 2009
யூத் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகனைத் தீர்ப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் கிடைத்த தீர்வுகளை அரசாங்க அதிகாரிகளின் துணையோடு, ஆக்கப் பூர்வமான திசையில் செயல்படுத்தி வருகிறது.
இதில் குறிப்பாக சாலை விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி சாலை விபத்துக்குள்ளானவர்களின் சர்வதேச நினைவு நாளை யூத் டாஸ்க் ஃபோர்ஸ் கடைபிடிக்கவிருக்கிறது. சாலை விபத்தில் ஊனம், படுகாயம், மரணம் ஆகிய நிகழ்வுகளைச் சந்தித்தவர்கள் தங்களுடைய உணர்வுகளை உலகுக்குச் சொல்லும் நாள் நவம்பர் 15.
ஒரு நொடியில் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து விடும், ஒவ்வொரு சாலை விபத்திற்குப் பின்னும் தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேத்தி, நண்பர்கள், உறவினர்கள், சக மாணவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள் என்கிறது WHO அமைப்பு.
இதை உணர்த்தும் விதமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தினத்தை சர்வதேச அளவில் நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்க ஐக்கிய நாடுகளின் சபையில் 2005ஆம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.
உலக அளவில் இளைஞர்களை அதிகமாக பலி வாங்கிக்கொண்டிருக்கம் இந்த சாலை விபத்துக் களின் மூல காரணங்களை, சாலை விபத்து ஆராய்ச்சி மையத்தின் துணையோடு ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வருகிறது யூத் டாஸ்க் ஃபோர்ஸ்.
சாலை விபத்தினால் ஏற்படும் மரணம், ஊனம், படுகாயம் ஆகியவற்றின் மூல காரணங்களை பதிவு செய்ய விரும்புவோர்களும், விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களும், சாலைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர்களும், விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களும், சாலைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விரும்புவர்களும் யூத் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் யூத் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.


 யூத் டாஸ்க் ஃபோர்ஸ்
10, அலமேலு நகர்
உப்பிலிபாளையம், கோவை – 15.
போன் : 99411 76070
email : suresh@freshindian.org
web : www.freshindian.org, www.roadcrashvictimsday.org

                  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டெல்லி: உலகிலே சாலைவிபத்துக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 13 பேர் பலியாகி வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தனது முதல் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில்,

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்ளும் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும்.

தற்போது சாலை விபத்துக்களிலும் உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால், இங்கு உலக வாகனங்களில் 48 சதவீதம் தான் இயக்கப்படுகிறது. மீதம் 52 சதவீத வாகனங்கள் இயக்கப்படும் வளர்ந்த நாடுகளில் விபத்துக்களில் உயிரிழப்பு பெருமளவுக்கு தடுக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவுக்கு முதலிடம்...

அதேநேரம் சாலைவிபத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட சாலைவிபத்தில் பலியாவோர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் வெறும் 89 ஆயிரத்து 455 பேரும், அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642 பேரும் பலியாகியுள்ளனர். இது இங்கிலாந்தில் வெறும் 3 ஆயிரத்து 298 ஆக இருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலியாகி வருகின்றனர். அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகுகிறார்கள்.

இந்தியாவில் அதிக சாலைவிபத்துகள் ஆந்திராவில் தான் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 12 சதவீதம் இங்கு நிகழ்கிறது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 11 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வேகம் தான் காரணம்...

இந்தியாவில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதே காரணம். சராசரி வேகத்தை விட 5 சதவீதம் அதிவேகத்தில் செல்பவர்களுக்கு விபத்தினால் காயம் ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதமும், மரணம் சம்பவிக்கும் அபாயம் 20 சதவீதமும் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநாவின் ஆசிய சாலை பாதுகாப்பு கமிஷன் தலைவர் ரோகித் பலுஜா கூறுகையில்,

இந்தியாவில் விஞ்ஞானபூர்வமான சாலை பாதுகாப்பு முறைகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த முறைகள் 1930களில் இருந்தே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருகிறது என்றார்...

====================================================================
புதுடில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர், 4 பேர் காயமடைகின்றனர். இதில் வாகன ஓட்டுனர்களின் தவறும் முக்கிய காரணமாகிறது. இப்படியே போனால் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ்,மற்றும் சர்க்கரை வியாதியை விட சாலை விபத்துக்களால் உயிர்பலி அதிகரித்துவிடும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களால், விபத்துக்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகம், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம், போதுமான அளவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.இது குறித்து மத்தியஅரசின் நெடுஞ்சாலை மற்றும் ‌தரைவழி போக்குவரத்து துறையின் செயலர் ஏ.கே. உபாத்யாயா கூறியதாவது:கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் 4.9 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் காயமடைந்துள்ளனர். ஆனால் 2010-ம் ஆண்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் அதிகரித்து 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் நன்கு திட்டமிட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.. பக்கத்துநாடான சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆனால் சாலைவிபத்துக்கள் குறைவு, அமெரிக்காவில் வாகனங்கள் அதிகம் ஆனால் அங்கு சாலைவிபத்துக்கள் குறைவு ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை. சாலை விபத்துக்கள் மோசமான நிலையில் உள்ளது . இந்தியாவில் சாலை விபத்துக்களால் பெரும்பாலும் 25 முதல் 65 வயது வரை உள்ளவர்களில் 52 சதவீதத்தினரும், நடந்து செல்பவர்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிளின் செல்பவர்கள் 39 சதவீதத்தினர் என ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர். 4 பேர் காயமடைகின்றனர். மேலும் டிரைவர்களின் கவனக்குறைவும் உயிர்பலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.. இந்நிலை தொடர்ந்தால் வரும் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி. , எய்ட்ஸ், சர்‌க்கரை நோயால் இறப்பவர்களைவிட சாலை விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இத்தகைய சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் உயிர்பலியாவதை தடுப்பதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி 5 குழுக்களை நியமித்துள்ளது. இக்குழு சில பரிந்துரைகளை சமர்பித்துள்ளது. இதனை மத்திய தரை வழி ப‌ோக்குவரத்துதுறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சாலை பாதுகாப்பு கமிஷன் . 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இம்முறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் சாலை விபத்துக்களை குறைத்திடவும் உயிர்பலி ஆவதை தடுக்க நடவடிக்கை மேற்‌கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.