23 டிசம்பர், 2011

கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண


    அன்பு நண்பர்களே,வணக்கம். 

        தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ,மாநில தலைவர் அவர்களது கட்டுரை -TNSFTHENI.BLOGSPOT.COM வாயிலாக.......     

    Dec 22, 2011

        கணிதமேதை இராமானுஜம்.-DR.N.MANI,TNSF.


         முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்.. 

       


         டோக்கியோ அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் அவர். கணித மேதை இராமானுஜன் பற்றி ஜப்பானிய மொழியில் புத்தகம் எழுதி உள்ளார். நூலாக்கத்தின் துவக்க கட்டத்தில் ஈரோடு வந்திருந்தார். அந்நூலை வெளியிடும் பதிப்பக உரிமையாளர், புகைப்பட கலைஞர், அறிவியல் இயக்க ஆர்வலர் என ஒரு குழுவாக வந்தனர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, ’இராமனுஜன் வீட்டைப் பார்வையிட வேண்டும் அழைத்துச் செல்லுங்கள்” என்றனர். கணிதமேதை இராமனுஜன் ஈரோட்டில் பிறந்தவர் என்று அறிவேனே தவிர, ஈரோட்டில் அவர் பிறந்த இடத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியது இல்லை. இவ்வாறு அறிந்து கொள்ளாமல் இருந்தமைக்கு மிகவும் வெட்கப்பட்டேன். நம்பி வந்த குழுவினருக்கு உதவிடும் முயற்சியில் இறங்கினேன். வரலாற்று ரீதியாக பல விபரங்களை அறிந்த ஓர் அறிவு ஜீவியை தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரோ, ’அய்யா, கணித மேதை ஈரோட்டிலா பிறந்தார்?” என்றார். இதற்கு மேல் யாரிடம் கேட்பது என்று ஐயம் மேலிட எனக்குத் தெரிந்தவர்கள், விபரமறிந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலரிடமும் கேட்டேன். அரை மணி நேர தகவல் அறியும் எனது முயற்சி படுதோல்வியில் முடிந்தது. ஜப்பான் கணிதப் பேராசிரியர் என் அழைப்புக்காக விடுதியில் காத்துக் கொண்டு இருந்தார். வருத்தம் தோய்ந்த மனதுடன் நேரில் காண சென்றேன்.

‘ஈரோடு, தெப்பக்குளம், பழைய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு எதிர்வீடு” என்ற ஆவணக் குறிப்பை வைத்துக் கொண்டு ஆட்டோவில் அங்கு சென்று அடைந்தோம். ஈரோட்டின் மையப்பகுதி அது. ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. உண்மையில் தெப்பக்குளம் எந்தக் காலத்தில் இருந்ததோ தெரியவில்லை. தெப்பக்குளம் என்ற பெயர்; மட்டும் நின்று நிலவுகிறது. அறிவு ஜீவிகளுக்கு தெரியாத இடத்தை ஆட்டோ டிரைவர் எளிதாக கண்டுபிடித்து கொடுத்தார். கதவு எண்.18, அழகிய சிங்கர் வீதி, தெப்பக்குளம், ஈரோடு - 1 என்பதே அந்த வீட்டின் முகவரி. இங்குதான், 124 ஆண்டுகளுக்கு முன் 22.12.1887 - ல் கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தார். நாளை முதல் 125 ம் ஆண்டு தொடங்குகிறது.


இராமானுஜன் வாழ்ந்த இடங்களைப் பார்வையிட ஜப்பானிய பேராசிரியர் பல முறை சென்னைக்கும், கும்பகோணத்துக்கும் வந்திருந்ததாகவும், அவர் பிறந்த இடத்தைப் பற்றிய குறிப்புகள் இன்மையால் துயரத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறினார். தனது வாழ்நாளில் இதனை விட கூடுதல் மகிழ்ச்சி அடைந்த தருணம் இல்லை எனக் கூறி, நம்மை இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர் பிறந்த வீட்டையும், அந்த வீதியையும் போட்டோவாக எடுத்துத் தள்ளினர் புகைப்படக் கலைஞர். அந்த வீதியில் குடியிருந்தோருக்கும் கூட அன்றுதான் கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றி தெரிய வந்தது. சென்னையில் உள்ள இராமானுஜன் அருங்காட்சியகத்திற்கும் அது முக்கிய ஆவணம். உலக வரலாற்றில், கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றிய முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் அன்றுதான். இந்த சம்பவம் என்றோ நடந்தது என்று எண்ணி விடாதீர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2008 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ம்தேதி.


இராமானுஜன் பிறந்த வீடு, தற்போது அவரது சொந்தக்காரர்கள் வசம் கூட இல்லை. பெருமுயற்சி எடுத்து தேடிப்போகும் ஒன்றிரண்டு பேரிடம் கூட வீட்டு உரிமையாளர், ‘கணித மேதை இராமானுஜன் இங்கேதான் பிறந்தாரா?” என்ற கேள்விக்கு ஆம் என பல நேரங்களில் பதில் தருவதில்லை. இந்த விசயம் பிரபலமாகி, வீட்டை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ என்ற பயம். ஜப்பான் பேராசிரியர் சக்குராய் வந்த அன்று உரிமையாளர் வீட்டில் இல்லை. அவரது மகன் ஆற அமர வைத்து உபசரித்து அனுப்பினார். நான் பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் இந்த வீட்டைப் பற்றி சொல்லித் திரிகிறேன். அவ்வீட்டைக் காண விளைவோரிடம் நான் கூறும் செய்தி இதுதான். ‘ஈரோடு பிர‡ப் ரோட்டில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலுக்கு எதிர் சந்தில் செல்லுங்கள். அழகிய சிங்கர் வீதி வலது புறத்தில் வரும். வீதியில் நுழைந்ததும் நான்கு, ஐந்து


வீடுகள் தள்ளி மஞ்சள் கோபி நிறத்தில், உள்ள வீடு. ஜோதி நிலையம் என்று பெயர் எழுதப்பட்டிருக்கும். சற்று நேரம் நின்று பார்த்து விட்டு வந்து விடுங்கள்” என்பதுதான். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் அழகிய சிங்கர் வீதியில் நுழைந்து, அந்த வீட்டின் மீது ஓர் பார்வை வீசி விட்டு வருகிறேன்.


எனது அலைபேசி எண்ணில் ஒரு முறை லண்டன் கணிதப் பேராசிரியை ஒருவர் தொடர்பு கொண்டார். தான் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும் கூறினார். கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு காரில் வர இருப்பதாக கூறினார். தனக்கு கணித மேதையின் வீட்டை காண்பிக்க வேண்டும் என்றார். ‘நான் ஊரில் இல்லை. பிறிதொரு முறை வாருங்கள்” என்றேன். ‘நான் பல முறை இந்தியா வந்துள்ளேன். பல முறை கும்பகோணம், சென்னை என சென்று, அவர் வாழ்ந்த இடங்களை எல்லாம் பார்வையிட்டுள்ளேன். ஈரோடு வந்து, அவரது பிறப்பிடம் கண்டுபிடிக்க இயலாமல் திரும்பிச் சென்ற நாட்களும் உண்டு. எனவே தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள்” என்றார். மாற்று ஏற்பாடு மூலம் காண ஏற்பாடு செய்தேன். லண்டனில் இருந்து வந்த பெண் பேராசிரியர் என்பதால் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்தும், மறுப்பு எதுவும் கூறாமல் வீட்டில் அனுமதித்து, உபசரித்து அனுப்பினார். கார் ஏறும் போது அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.


கணிதம் படித்த அனைவரும் கணித மேதை இராமானுஜனை அறிவர். இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இராபர்ட் கனிகள் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் எழுதிய நூலின் தலைப்பு ‘;முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்” என்பது. இந்தப் புத்தகம் பல  பதிப்புகளைக் கண்டுள்ளது. இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதும் இந்த நூலே. இத்தகைய நூல்கள் ஒரு பக்கம். இராமானுஜன் இறந்த பிறகு, அவரது சமன்பாடுகள், கோட்பாடுகளை ஆய்ந்தறிந்த கணித மேதைகளுடன் இணைத்து பெயரிடப்பட்ட சமன்பாடுகள் அவரது பெயரிடப்பட்ட ஆய்விதழ்கள், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பரிசுகள் ஆய்வு மையங்கள் என 25 க்கும் மேல் பட்டியல் நீளும்.


ராயல் சொசைட்டி ஆ‡ப் இங்கிலாந்தின் மதிப்புமிக்க அங்கத்தினராக மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவர் செய்த ஆய்வுகளுக்காகவே டீ.யு. பட்டம் வழங்கியது. அந்த டீ.யு. பட்டமே பின்னர் டாக்டர் பட்டமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இத்தகைய கௌரவம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. 

கணித மேதை இராமானுஜத்தை கண்டெடுத்து உலகறியச் செய்தவர் பேராசிரியர் ஹார்டி. இவரிடம் ‘உலகக் கணித மேதைகளை 100 புள்ளிகளைக் கொண்ட அளவுகோலில் அளந்தால் யார், யார் எத்தனை புள்ளிகள் தேறுவர்” என்று கேட்டனர். ‘நான் ஒரு 25 புள்ளிகள் தேறுவேன். லிட்டில்வுட் 30 புள்ளிகள் பெறுவார். டேவிட் ஹில்பர்ட்டுக்கு 80 புள்ளிகள் வழங்கலாம். 100 புள்ளிகள் பெற தகுதியுள்ளவர் இராமானுஜன் மட்டுமே” என்றார். இராமானுஜத்தின் இரண்டாவது நோட்டுப் புத்தகத்;தில் இருந்த 47 கோட்பாடுகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பேராசிரியர் ஹார்டி ‘எஞ்சியுள்ள ஆய்வுகளை தொகுத்து வெளியிட என் ஆயுட்காலம் போதாது. வேறு எந்த ஆய்விலும் ஈடுபட முடியாது” என மலைத்துப் போய் கூறினார். 18ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய ஜெர்மனிய கணித மேதை ஜேகப் ஜேகோபியுடனும், 17 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய சுவிஸ் நாட்டு கணித மேதை லியனார்டு ய+லரோடும் ஐரோப்பிய கணித மேதைகள் இவரை ஒப்பிடுகின்றனர்.

இராமானுஜத்தின் வாழ்வையும் பணியையும் முன் வைத்து பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள், நாடகங்கள், புனைக் கதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகள் உடலில் புகுந்து இராமானுஜத்தின் உடலை அரிக்கத் தொடங்கிய பின்னரே, இங்கிலாந்து செல்லகப்பல் ஏறினார். 1914 முதல் 1919 வரையான கேம்பிரிட்ஜ் வாழ்க்கையில்

நோயுடன் போராடிக் கொண்டே, கணிதம் என்னும் பெருங்கடலில் மூழ்கி, முத்தெடுத்த வண்ணமே இருந்தார். முறைப்படியான கணித கல்வி பெறாமலும், ஐந்தாண்டு காலத்திலும், இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய மனிதன்; உலகில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

ஐன்ஸ்டினின் இயற்பியல் சாதனைகளை போற்றிட 2005ம் ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக சர்வதேச சமூகம் கொண்டாடியது. கலிலியோவின் பங்களிப்பை வானவியலில் போற்றும் வகையில் 2009ம் ஆண்டு சர்வதேச வானவியல் ஆண்டாக பன்னாட்டு சமூகம் கொண்டாடி மகிழ்ந்தது. வேதியியலுக்கு மேரிகிய+ரி ஆற்றிய பங்கை நினைவு கூற 2011ம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஆண்டாக கொண்டாடப்பட்டுள்ளது. இராமானுஜத்தின் 125ஆம் ஆண்டு பிறந்த ஆண்டையொட்டி 2012ஆம் ஆண்டு சர்வதேச கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு ஐ.நா.சபை அறிவிக்காமல் விட்டது வேதனை அளிக்கும் விசயம். அதனினும் கொடியது, 125 ஆண்டுகளுக்குப் பிறகும், கணித மேதை இராமானுஜன் பிறந்த இடம் உலகம் அறியாமல் இருப்பது. அதனை அறிந்தவர்கள் கூட அந்த வீட்டிற்குள் சென்று, நிதானமாக பார்த்து வர முடியாமல் இருக்கும் அவலம். 

இராமானுஜன் கணிதத்தில் மட்டும் மேதையல்ல. நற்பண்புகளிலும், மனிதாபிமானத்திலும் மாமேதை. கேம்பிரிட்ஜில் அவர் வாழ்ந்த காலம், முதலாம் உலகப் போர்முடிவுற்ற தருவாய். தான் உண்டு பழகிய சைவ உணவு கிடைப்பதில் பெருத்த சிரமம் இருந்த காலம். இருந்தும், அவர் சைவ உணவு பழக்கத்தை கைவிடவில்லை. தனது வழிகாட்டியான பேராசிரியர் ஹார்டி தீவிரமான கடவுள் மறுப்பாளர். இருந்தும் இருவரும் உயிருக்கு உயிராய் நட்புக்
கொண்டிருந்தார்கள். நோய் முற்றி இந்தியா திரும்பிய பிறகு வாழ்ந்தது ஓர் ஆண்டு காலம் மட்டுமே. இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஹார்டிக்கு
எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட ‘நான் ஒரு முக்கிய சமன்பாட்டைக் கண்டு பிடித்துள்ளேன். அதற்கு மோக் தீட்டா (ஆழஉம வுhநவய) என்று பெயரிட்டுள்ளேன். அதில் சில எடுத்துக்காட்டுகளை தங்களுக்கு அனுப்புகிறேன்” என்று எழுதினார். தான் படும் அவஸ்தை, ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருப்பது, சிகிச்சைக்காக கோவை, கொடுமுடி, கும்பகோணம், சென்னை என அலைந்து திரிவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதவர். இந்தியா திரும்பியபின் தன் ஆய்வுகளைத் தொடர சென்னைப் பல்கலைக் கழகம் அளித்த ஸ்காலர்ஷிப்பின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கும் நோட்டு புத்தகங்களுக்கும், உடைகள் மற்றும் பள்ளிக் கட்டணத்திற்கு செலவிடும்படி தெரிவித்தவர். வறுமை, ஏழ்மை, காச நோய் ஆகியவை தன்னை பங்கிட்டுக் கொண்ட போதும் இத்தகைய கருணை உள்ளத்தோடு இருந்தது கர்ணணை விஞ்சிய செயல் என்றே குறிப்பிட வேண்டும்.

கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த சிறிய வீடு. படித்த டவுன் உயர் நிலைப் பள்ளி. ஆய்வு மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இறுதியாக ஆய்வு மேற்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம். தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட சென்னை பெருமாள் செட்டியார் வீடு. ஆகியவை அனைத்தும் அவரது

நினைவுகளை சுமந்து நிற்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலை, 100 கணித மேதைகளின் சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், ‘தி இராமானுஜன் இன்ஸ்டிடிட்  ‡பார் அட்வான்ஸ் ஸ்டடி இன் மேத்தமெடிக்ஸ்” என்ற நிறுவனத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ளது போல மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கணித மேதை இராமானுஜன் அருங்காட்சியகம் மற்றும் கணிதக் கல்வி மையம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள ‘டாட்டா இன்ஸ்டிடிய+ட் ஆ‡ப் ‡பண்டமண்டல் ரிசர்ச்”, அவரது கணிதக் குறிப்பேடுகளை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அது திகழ்கிறது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம், 32 வயதுக்குள் கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்களை உலகில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டறிந்து, ஆண்டு தோறும் ‘கணித மேதை இராமானுஜன் விருது” வழங்கி வருகிறது. அவர் பிறந்த இடத்தில் மட்டும் எந்த அடையாளமும் இல்லை. ஈரோடு நகரில் வாழ்பவரில் ஆயிரத்தில் ஒருவருக்காவது தெரியுமா? என்பது சந்தேகம். 

இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22ஆம் தேதியை தமிழக அரசு மாநில அரசின் தகவல் தொழில் நுட்ப நாளாக அறிவித்துள்ளது. இது எத்தனை பேருக்கு
தெரியும்? கணித மேதை இராமானுஜனின் 125 வது பிறந்த ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் ஓர் ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு இருக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். வருடம் முழுவதுக்குமான கொண்டாட்ட நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு இருக்க வேண்டும். மத்திய அரசு பல விசயங்களில் அமைதியாக இருந்துவிடுவது போல் இந்த விசயத்திலும் அமைதியாக இருக்கலாம். மாநில அரசு இப்போதேனும் விழித்துக் கொள்ளட்டும். உலகம் முழுவதும் பல ஆய்வு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளன. அறிவு ஜீவிகளோடு அந்த செய்திகள் முடிந்து விடும். குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், மக்கள் என பெரும் எண்ணிக்கையில் இந்த மாமேதையின் 125-வது ஆண்டை கொண்டாட என்ன திட்டம் இருக்கிறது? கணித மேதை இராமானுஜத்தின் 125-வது ஆண்டு விழாவையோ, பிறந்த நாளையோ, நினைவு நாளையோ கொண்டாட வேண்டுவது, அவரது புகழ் பாடுவதற்கு அல்ல. அவரது நினைவு அலைகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் நாம் திளைப்பதும் அவசியம். இராமானுஜன் என்னும் மின் காந்த அலையை நமது குழந்தைகளையும் உணர வைப்பது அத்தியாவசியம். அதன் வழியாக படைப்பாற்றல் என்னும் பெரு நெருப்பை பற்ற வைத்தல் வேண்டும். இந்திய நாடு அறிவியல் தொழில் நுட்பத்தில் சுய சார்பை எட்ட இச்சமூகக் கடமையை செய்தாக வேண்டும். இதற்காகவே 125-வது ஆண்டு பிரமிக்கத்தக்க வகையில் கொண்டாடப்பட வேண்டும். பத்திரிக்கைகள், ஊடகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகளும் தங்கள் பங்குக்கு நிகழ்ச்சிகளை திட்டமிடலாம்.

கணிதமேதை இராமானுஜன் வீடு உள்ள தெருவின் பெயர் ‘கணித மேதை இராமானுஜன் வீதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போது அந்த வீட்டில் குடியிருக்கும் உரிமையாளர் சம்மதத்துடன் அவரது நினைவு இல்லம் உருப்பெற வேண்டும். வீட்டின் மேல் தளத்தில் உரிமையாளருக்கு அரசு வீடுகட்டிக் கொடுத்து விட்டு, கீழ் தளத்தை பார்வையாளர் சென்று காணவாவது அனுமதிக்கலாம். 125-வது ஆண்டிலேயேனும் கணித மேதை இராமானுஜத்திற்கு நிகழ்ந்த இந்த அவலம் துடைத்தெறியப்பட வேண்டும்.

         
                                             கட்டுரையாளர்,
                          முனைவர்..என்.மணி அவர்கள்,
            மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
             மற்றும்  ஈரோடு கலைக்கல்லூரி பேராசிரியர்.
              

21 டிசம்பர், 2011


1. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.com/

2. கற்போம்
http://www.karpom.com/


3. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com


4. கம்ப்யூட்டர் டிப்ஸ்
http://tamil-computer.blogspot.com/


5. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.com


6. Saran R - Learning never ends
http://saranr.in


7. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 613,846

8. கொம்பியூட்டர் உலகம்
http://computerulakam.blogspot.com/


9. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com

10. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.blogspot.com


11. NUNUKKANGAL
http://nunukkangal.blogspot.com/


12. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com


13. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.blogspot.com

14. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com


15. சித்திரம் பேசுதடி
http://sithirampesuthadi.blogspot.com/


16. பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்
http://tipsblogtricks.blogspot.com/


17. இ-சீக் (Eseak)
http://eseak.com


18. சுடுதண்ணி
http://www.suduthanni.com

19. தமிழ்பிளாக்.இன்
http://www.tamilblog.in/


20. அலசல்கள் 1000
http://alasalkal1000.blogspot.com/


21. தமிழ் கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo.blogspot.com


22. Ravi 4 the people
http://ravi4thepeople.blogspot.com/


23. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com


24. Browse All
http://browseall.blogspot.com


25. பிலாக்கர்டிப்ஸ்/ Blogger tips
http://bloggertipsintamil.blogspot.com/


26. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com


27. எளிய தமிழில் கணினி தகவல்
http://vikupficwa.wordpress.com/


28. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
http://tamilcomputermini.blogspot.com/

29. அதே கண்கள்
http://athekangal.blogspot.com


30. போட்டோஷாப் கல்வி
http://photoshopkalvi.blogspot.com/


31. கணினி அறிவியல் மாணவர்களுக்காக
http://kaniniariviyal.blogspot.com/


32. சின்ன பையன்
http://cp-in.blogspot.com


33. கணினி-மொழி
http://mani-g.blogspot.com/


34. Information Technology Corner
http://itcornerlk.blogspot.com/


35. எளிய தமிழில் போட்டோஷாப்
http://photoshopintamil.blogspot.com/


36. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com


37. புதுநுட்பம்
http://www.puthunutpam.com/

தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.com


ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot.com/

டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/


TamilTech.info
http://www.tamiltech.info


தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.com


Gnome - லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.com/


தொழில்நுட்ப உலகம்
http://itulaku.blogspot.com


தமிழ் லினக்ஸ்
http://fosstamil.blogspot.com


ஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்
http://skopenoffice.blogspot.com/


Ivan's Blog
http://ipadiku.blogspot.com/


LEARN Tally.ERP9 in Tamil
http://tamiltally.blogspot.com/


Tamilhackx
http://www.tamilhackx.com


dareone's tech blog
http://dareone.blogspot.com/


கம்ப்யூட்டர் மெக்கானிக்
http://420gb.blogspot.com/






தொழில்நுட்பக் குறுந்தகவல்கள் தமிழில்
http://ta.amazingonly.com

சுதந்திர கிம்ப் (Photoshop Substitute)
http://gimp.suthanthira-menporul.com/
http://gimp.suthanthira-menporul.com/?m=1




17 டிசம்பர், 2011

DIVINE ROAD SAFETY COMMITTEE


அன்பு நண்பர்களே,வணக்கம்.
         மனித சமூகத்திற்கு மிக அச்சுறுத்தலாக ,விளங்கும் சாலை விபத்து அதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு தாளவாடியில் டிவைன் மெட்ரிக் பள்ளியில்'' DIVINE ROAD SAFETY COMMITTEE ''-THALAVADY சார்பாக 17-12-2011சனிக்கிழமை அன்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதாவது
       ''12-12-2011ஞாயிறு அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடிகிளையின் கோரிக்கை'' யின் பேரில் அமைக்கப்பட்ட ''டிவைன் சாலை பாதுகாப்புக்கமிட்டி''யின் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.






       இந்த ''DIVINE ROAD SAFETY COMMITTEE '' கூட்டத்தில் டிவைன் மெட்ரிக் பள்ளி நிர்வாகி மதிப்பிற்குரிய ''ஐயா'' அவர்களது தலைமையில்  டிவைன் சாலைபாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களான பெற்றோர் சங்கம்,மாணவர் அமைப்பு,ஆசிரியர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி கிளை ஆகியன கலந்து கொண்டன.

        வருகிற ஜனவரி2012 அன்று 5-ந்தேதி தாளவாடியில் காவல்துறை அனுமதியின் பேரில் ROTARY CLUB-THALAVADY மற்றும் TAMILNADU SCIENCE FORUM-THALAVADY ஆகிய சமூக அமைப்புகளுடன் இணைந்து தாளவாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை இணைத்து சாலை பாதுகாப்பு பேரணி நடத்துவது என்றும் 
       அன்று வட்டார வள மையத்தின் முன்பு உள்ள மைதானத்தில் கருத்தரங்கு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
      அதற்கு முன்பாக
        ''விபத்து ஏன் ஏற்படுகிறது? விபத்தை தடுக்க என்ன செய்யலாம்?'' 
         என்ற தலைப்பில் விருப்பமுள்ள அனைத்து பள்ளி மற்றும் சமூக ஆர்வலர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள் இன்னும் பிற துறைகளைச் சார்ந்த அனைவரிடமும் கட்டுரைப்போட்டி நடத்துவது என்றும் அதனுடன் கருத்துப்பதிவுகள் அவசியம் பெற்று ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பிவைப்பது அல்லது பொதுமக்களிடையே விளம்பரம் செய்து விபத்துக்களைத்தடுக்க முயற்சி செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
         அன்றைய தினம் பள்ளி வளாகத்தில் மூலிகைப்பண்ணை அமைப்பது என்றும் அன்று முதல் மூலிகைத்தாவரங்களை சேகரிப்பதோடு நில்லாமல் அனைத்து மாணவர்,மாணவியர்களிடையே மூலிகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி ஆர்வத்தை ஊட்டவும் முடிவு செய்யப்பட்டது.
       TAMILNADU SCIENCE FORUM THALAVADY-ERODE DISTRICT

அளவுகளையும் அலகீடுகளையும் உங்கள் வசதிகேற்ப தெரிந்துகொள்ள‌

அளவுகளையும் அலகீடுகளையும் உங்கள் வசதிகேற்ப தெரிந்துகொள்ள‌

அளவுகளையும் அலகீடுகளையும் உங்கள் வசதிகேற்ப மாற்றிக்கொள்ள அல்லது தெரிந்துகொள்வதற்கு.
Measurement Unit Converter
வெப்ப நிலை, தூர நீள அளவுகள், நில அளவுகள், எடை அளவுகள், வால்யூம் அளவுகள், சக்தி அளவுகள், விசை அளவுகள், சக்தி அளவுகள், அழுத்த அளவுகள், போன்றவற்றை உங்கள் வசதிக்கு ஏற்ப அல்லது உங்களுக்கு தெரிந்த அளவுக்கு மாற்றிக்கொள்ள கீழ்க்காணும் லிங் பயன்படும்.
உதாரணமாக 1 ஏக்கர் எத்தனை சதுரடி என்பதை தெரிந்துகொள்ள இதை பயன்படுத்தி, 43,560 சதுரடிகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
இது உங்களுக்கு மிகுந்த பயன்களை அள்ளித்தரும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.
http://people.virginia.edu/~rmf8a/convert.html
http://www.digitaldutch.com/unitconverter/area.htm

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம்

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம்

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாகப் படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமை யை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் பு திய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல் லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கிலப்புலமையை (“Test your vocab“) சோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது.
5-ல் இருந்து 10 நிமிடத்திற்குள் நம் ஆங்கில சொல் அகராதியின் புலமையை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் புதியவர்கள்கூட எளிதாக புரிந்து பயன்படுத்தும் படி இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவை இல்லை, எளிதாக சில நிமிடங்களில் எத்தனை வார்த்தைகள் வரை நமக்கு தெரியும் என்று அறிந்து கொள்ளலாம்.

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கு கிறது.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப் பட வில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பய னாய், தமிழ்நாட்டில் ஆண்டுக ளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.
இதன் தனிச்சிறப்பு
ஒன்றே முகால் அடி அல்ல‍து ஏழே வார்த்தைகள் கொண்டு, பொருள் விளக்கும் ஒப்ப‍ற்ற‍ காவியமா கும். திருக்குறளால் தமிழுக்கு கிடைத்த‍ பெருமைகளை வார்த்தை களால் வரையறுக்க‍ முடியா தது.
அத்தகைய சிறப்பு மிக்க‍ திருக்குறளில் உள்ள‍ எத்தனை குறள்கள் நம்மில் எத் த‍னைப் பேருக்கு நினைவிருக்கும் என்று கேட்டால் நம்மில் ப‌லருககு திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களு க்காகவே இந்த தளம் உள்ள‍து. ஆம் திரு க்குறளில் உள்ள‍ முதல் அல்ல‍து கடைசி வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய் தால் பக்க‍த்தில் உள்ள‍ பெட்டியில் தானா கவே தமிழில் மாறும் பின் அதறகு அரு கில் உள்ள‍ தேடுக என்ற பொத்தானை அழுத்தினால் தாங்கள் தேடும் திருக்குறள் தோன்றும்,
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தளத்தி னை பயன்படுத்தி, திருக் குறள் அறிவோம், குறள் வழி நடப்போம். நண்பர்களே!
திருக்குறள் (இந்த வார்த்தையை கிளிக் செய்க•)

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி http://www.tneb.in/ 01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள  முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/ 07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி http://www.hcmadras.tn.nic.in/ [...]

அறிவுசார் சொத்து

       சர்வதேச வாணிபத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும். அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம் பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கும் வகையில் 2001 முதல் ஆண்டுதோறும் ஒரு பொருளில் ஏப்ரல் 26 ம் தேதி ‘உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
அறிவுசார் சொத்து என்பது ஒருவன் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான சமுதாயத்திற்கு பயன்படுகின்ற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாக கருதப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றைமட்டுமே சார்ந்தது என்றகருத்து பழங்கதையாகி, அறிவுத்திறனே முக்கிய காரணி என்றகருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தை பெருக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.
அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படி தெரிந்துகொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.
வேத காலத்திலேயே இந்தியா அறிவுத் திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே வள்ளுவர், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றும் ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்றும் அறிவைப் போற்றி புகழ்ந்துள்ளார்.
ஒரு நாட்டின் ‘வளர்ச்சி’ என்பது தேசிய வருமானத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் அது 1990ம் ஆண்டு முதல் வளர்ச்சி என்பது மக்களின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றைஉள்ளடக்கிய ‘மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்’ மூலம்கணக்கிடப்படுகிறது.
உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய நிலையில் இளைஞர்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு இந்தியா. 70 சதவீத மக்கள் 35 வயதிற்கும் குறைவானர்கள். இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் இளம் பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்றும், இதற்கு நேர்மாறாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இளம் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மதிப்பீடுகள் கூறுகின்றன. 2020களில் இந்தியாவில் 4 கோடியே 70 லட்சம் இளம் வயது பணியாளர்கள் உபரியாக இருப்பார்கள் என்றும் அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 70 லட்சம் இளைஞர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம் நாட்டில் கல்வியறிவு பெற்றதிறமையான இளை ஞர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்து, இயற்கை யோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
அறிவுசார் சொத்துரிமை பெற வேண்டு மானால் ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத் தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற் கொண்டவரின் அறிவார்ந்த திறமையினை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றைவர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற் காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக் கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் ‘டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் ‘வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.
1. காப்புரிமை, 2. பதிப்புரிமை, 3. வர்த்தக சின்னங்கள், 4. பூகோள அடையாளங்கள்,
5. தொழிலியல் வடிவமைப்புகள், 6. மின்னணு இணைப்புச்சுற்று டிசைன்கள் 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது ‘பேட்டன்ட் ரைட்’ எனப்படும் காப்புரிமை யாகும்.
காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். கண்டுபிடிப்பு என்பது புதியதொரு பொரு ளாகவோ அல்லது அவற்றின் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதாகவோ அல்லது எளிதாக்குவதாகவோ இருக்கலாம். இவை தொழில் பயன்பாடு உடையதாகவும், சமுதாயத்திற்கு பயனளிக்க தக்கதாகவும் இருக்க வேண்டும். இத்தகயை அம்சங்களை பெற்றிருந் தால் மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமையில் இருவகை உண்டு.
1.பொருட்களுக்கான காப்புரிமை 2. பொருட் களை தயாரிக்கும் முறைமைக்கான காப்புரிமை.
காப்புரிமை என்பது ஒரு புதிய கண்டு பிடிப்பு பற்றி முழு தகவல்களையும் தெரிவித்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரத்யேக உரிமை பெறுவது. பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கும், பிறர் அறிந்திராத விஷயங்களுக்கும் காப்புரிமை பெறலாம். இதில் தயாரிப்பு முறைகள், புதிய தயாரிப்புகள், அதில் செய்யப்பட்ட மேம்பாடுகள், புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை அடங்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழிநுட்பம் அதற்கு முன் எழுத்து வடிவிலோ அல்லது நடை முறைவடிவிலோ இருப்பது நிரூபிக்கப்பட்டால் அதற்கு காப்புரிமை வழங்கப்பட மாட்டாது. அதேபோல் காப்புரிமை பெறதேவையற்றவை என பட்டியலிடப்பட்ட பிரிவுகளில் உள்ள கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்பட மாட்டாது.
காப்புரிமை பெறுவதன் மூலம் அக்கண்டுபிடிப்பு அவர் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை வேறு எவரேனும் பயன்படுத்தினால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கண்டுபிடிப்பின் தொழில் நுட்பத்தை காப்புரிமை காலத்திற்குள் சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி எவரும் காப்பியடிக்கவோ அல்லது சிறிது மாற்றி பயன்படுத்தவோ முடியாது. காப்புரிமை காரணமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு குறைந்த விலையில் தரமான பொருட்கள் தயாரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுகர்வோர் பெருமளவில் பயனடைவார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் காப்புரிமையால் புதிய உத்வேகம் கிடைக்கும். காப்புரிமை காலம் முடிந்த பின் அந்த புதிய கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமைக் கோரி விண்ணப்பிக்கப்படும் நாளி லிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.
காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியா வின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக் காட்டாக வேப்பம் பொருட்களிலிருந்து தயாரிக் கப்படும் 40 வகை பொருட்களுக்கு அமெரிக் காவும், மேலும் 50 பொருட்களுக்கு பிறநாடு களும் காப்புரிமை பெற்றுள்ளன. ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப் பட்டுள்ளது. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற் றுள்ளது. ஆனால் இந்தியா 8 பொருட்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, பூவந்திக் கொட்டை, மாதுளை போன்றவற்றிற்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெறகுறைந்த பட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிக பட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை பெற்றுத்தரப் படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25000 மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சி பணிகளுக்கு செலவிடப் படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள் களின் பயணத்தைத் துல்லியமாக கணக்கிட்ட வர்கள் இந்தியர்கள். இராமாயண மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிக மாக உள்ளது. ஆகவேதான் இன்றும் கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவில் பெரும்பாலான விஞ்ஞான தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணி யாற்றும் மருத்துவர்கள் பாரதம் திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.
இந்திய அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாக திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும். அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.

நேரத்தை திட்டமிடுங்கள்

           நம் எல்லாருக்கும் சரிசமமாக  கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பது செல்லாத காசோலை.
நாளை என்பது பிராமிசரி நோட்டு.
இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.
எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.
1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
அ. பயனுள்ளவை
ஆ. அன்றாடச் செயல்கள்
இ. பயனில்லாதவை
உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.
2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்
(Time Wasters)
நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்
அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. ஒத்திப்போடுதல் (Procrastination)
2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை
3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்
ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.
2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.
3. பிறர் செய்யும் தவறுகள்
4. சூழ்நிலை
உகந்த நேரம் (Preferential / Prime Time)
ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.
காலந்தவறாமை (Punctuality)
கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.
நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)
உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.
1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)
இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்
2 செய் வேண்டிய வேலை (Need to do)
அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்
ஆனால் அவசரமில்லை.
3. செய்ய விரும்பும் வேலை (Like to do)
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.
4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)
வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.
நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்
1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.
4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.
6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்
வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.
நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!

சாலை விபத்துக்கள்

         சாலை விபத்துக்கள்



          சர்வதேச புள்ளி விபரம் – உலக சுகாதார அமைப்பு (WHO)
  • ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மனிதர்கள் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள்.
  • 20 முதல் 50 மில்லியன் மனிதர்கள் படுகாயம் அடைகிறார்கள்.
  • சாலை விபத்தில் இறக்கும் 90 சதவிகித மனிதர்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.
  • சாலை விபத்தில் பலியானவர்களில் 50 சதவிதிதம் பேர் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் இருசக்கர ஓட்டுநர்கள் ஆவர்.
    க்ஷி உலக அளவில் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய வரிசைப் பட்டியலில் 9 வது இடத்தை சாலை விபத்துக்கள் அடைந்துள்ளது. (2004)
  • இது 2030 ஆம் ஆண்டில் 5வது இடத்தைப் பிடிக்கும் அபாயம் உள்ளது.
தேசிய புள்ளி விபரம் – இந்தியா
  • ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் சாலை விபத்தில் உயிரிழக் கிறார்கள்.
  • ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாயை இந்தியா சாலை விபத்தினால் இழக்கிறது. (Courtesy Financial Express)

தீர்வுகள்

  • சாலைப் பாதுகாப்பிற்கான தேசியக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டு இதை மத்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
  • சாலைப் பணிகளை திட்டமிடும் போது, அனைத்து வகை சாலை பயன்பாட்டாளர் களையும் அவர்களுக்குரிய உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் சாலை மேம்பாட்டுத் திட்டங் களுக்காக பல கோடி ரூபாயை செலவிடும் அரசாங்கம், சாலை மற்றும் வாகன பயன்பாடு பற்றிய கல்வியிலும் கவனம் செலுத்தி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • கற்றுக் கொடுத்ததை கடை பிடிக்காத வர்களை, பயிற்சி மையங்களுக்கு அனுப்பி, சான்றிதழ் கொடுத்த பிறகே, சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  • வாகன வேகத்தை நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசாங்கத்திடமே தற்போது உள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் கட்டளைக்கு உட்பட்டதாகவும், சர்வதேச சாலைப் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துக் களுக்கு உடன்பட்டதாகவும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதில் இந்தியா 30 சதவிகிதமும், தலைக்கவசம் மற்றும் இருக்கை பெல்ட் அணிவதை கட்டாயப்படுத்துவதில் 20 சதவிகிதமும் தான் கட்டுப்படுத்தி இருக்கிறது.
  • சாலையிலும் சாலை சந்திப்புகளிலும் அதிவேகமாக வாகனத்தை செலுத்துவது முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும்.
    சர்வதேச புள்ளி விபரம் உலக சாலைப் பாதுகாப்பு நடுவம்
  • உலக வரலாற்றில் மனிதர்களை அழிக்கும் பேராபத்துக்களில் பல அங்கீகாரம் பெறுவது இல்லை, அதிரடியாக களையப்படுவதும் இல்லை. இதில் சாலை விபத்துகளும் ஒன்று.
  • சாலை விபத்துகளில் சுமார் 3500 பேர் தினமும் உயிரிழக்கிறார்கள்.
  • சாலை விபத்துகளில் சுமார் 1000 பேர் தினமும் படுகாயமடைகின்றனர்.
  • ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒரு குழந்தை சாலையில் சரிந்து உயிரிழக்கிறது.
  • 2,60,000 குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இறக்கிறது.
  • பல மில்லியன் குழந்தைகள் படுகாயமடை கிறது.
  • சாலையை கடக்க முடியாமல் தினமும் தடுமாறும் பள்ளிக் குழந்தைகளையும், முதியவர்களையும் சாலை வடிவமைப் பாளர்கள் கருத்தில் கொள்ள தவறி விடுகிறார்கள்.
  • இந்த நிலை தொடர்ந்தால் 2015 ஆம் ஆண்டு சாலை விபத்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளை செயற்கை மரணத்திற்கும், உடல் ஊனத்திற்கும் ஆளாக்கிவிடும் அபாயம் உள்ளது.
  • இது மேலும் மோசமடைந்து 2030 ஆண்டு ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் மனிதர்களை கொன்று குவிக்கும் பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது.
  • சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி சர்வதேச அமைச்சர்களின் மாநாடு வரும் நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் (2009) மாஸ்கோ நகரத்தில் நடைபெற இருக்கிறது.
  • சாலைப் பாதுகாப்பிற்காக அரசியல் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே 5 மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும்.
  • இந்த 5 மில்லியன் குடும்பங்களுக்கு மரணச் செய்தி வரவிருப்பதை அறியாமல் நாம் நம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
  • இதற்கான தீர்வை அளிக்கும் வல்லுநர்களை அரசாங்கம் வரவேற்று, பயனடைய வேண்டும்.
  • சர்வதேச முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இந்த சாலை விபத்தை தவிர்க்க தடுமாறி இருப்பது சர்வ தேசத்திலும் இருக்கும் அரசியல் வழிகாட்டிகளின் தோல்வியாகும்.
  • சாலைப் பாதுகாப்பிற்காக 1 டாலர் செலவு செய்வது உயிரிழப்பு மற்றும் வாகனச் சேதாரம் போன்றவற்றால் ஏற்படும் 20 டாலர் விரயத்தை மிச்சமாக்கும்.
  • பல ஆயிரம் சாலை விபத்துக்களை பற்றி அறிந்து கொண்ட பிறகும், பொது மக்கள் தங்கள் கடமைகளை உணராமல் வாகனத்தை செலுத்துவது மிக முக்கியமான பிரச்சனை யாகும்.
  • சாலைப் பாதுகாப்பில் 70 சதவித பொறுப்பு பொதுமக்களிடம் தான் இருக்கிறது. (சாலை விபத்து ஆராய்ச்சி மையம் கோவை)
மிதமான வாகனப்பயணம்
மீதமாகும் வாழ்க்கைப்பயணம்!
சாலை ஞானம் வளர்ப்போம்
சாலை விபத்தை தடுப்போம்!
மனிதனை கொண்டு செல்வதற்குத் தான்
வாகனம். கொன்று செல்வதற்கு அல்ல!
விழி பூட்டைத் திற……
விழிப்பூட்டைப் பெற
மூன்று கண்ணாடி பொருத்திடு…
மூன்றாம் கண்ணைத் திறந்திடு!
மனம் உழன்றது
வாழ்க்கைச் சக்கரத்தில்….
உடல் சுழன்றது
வண்டிச் சக்கரத்தில்….
சேமிக்க நினைத்து சில நொடிகள்…
சேதம் அடைந்தது பல உயிர்கள்…
சிகப்பு விளக்கை மதித்திடு…
இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு!

பொது மக்கள் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான
டார்ச் விளக்கு நிகழ்ச்சி

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 3 வகையாகப் பிரித்து மரணம் அடைந்தவர்களை சிகப்பு விளக்காலும், ஊனமடைந்தவர்ளை மஞ்சள் விளக்காலும் படுகாயம் அடைந்து பிழைத்தவர் களை பச்சை விளக்காலும் அடையாளம் காணும் வகையில் வ.உ.சி மைதானத்தில் நவம்பர் 15, மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் டார்ச் விளக்கை எடுத்து வர வேண்டும். அந்த டார்ச் விளக்கின் முகப்பை சிகப்பு நிற கலர் கண்ணாடி காகிதத்தால் மறைத்து, ஒளியை பரப்பி தான் தனக்கு தெரிந்த ஒருவரை நிரந்தரமாக இழந்து விட்டதை தெரிவிக்கலாம்.
அதுபோலவே, மஞ்சள் நிற ஒளியை பரப்பி தான் தனக்கு தெரிந்த நபர் ஊனமுற்று இருக்கிறார் என்பதை தெரிவிக்கலாம். அதுபோலவே பச்சை நிற கலர் கண்ணாடி காகிதத்தை பயன்படுத்தி, பச்சை ஒளியை பரப்பி , தான் அல்லது தனக்குத் தெரிந்த நபர் சாலை விபத்தினால் படுகாயம் அடைந்து இருக்கிறார் என்பதை தெரிவிக்கலாம்.
இவ்வகையில் பாதிக்கப்பட்ட அனைவரும் வ.உ.சி மைதானத்திற்கு பெருந்திரளாக வந்து இந்த 3 வகையான ரணங்களையும் டார்ச் விளக்கின் உதவியுடன் 3 வகையான நிறங்களை பயன்படுத்தி பிரதிபலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து ஓட்டுநர்களையும் பொறுப்புடன் வாகனத்தை செலுத்துமாறு வலியுறுத்த, உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை. அனைவரும் வருக!
சாலை விபத்திற்குள்ளானவர்களின் சர்வதேச நினைவு நாள் நவம்பர் 15, 2009
யூத் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகனைத் தீர்ப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் கிடைத்த தீர்வுகளை அரசாங்க அதிகாரிகளின் துணையோடு, ஆக்கப் பூர்வமான திசையில் செயல்படுத்தி வருகிறது.
இதில் குறிப்பாக சாலை விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி சாலை விபத்துக்குள்ளானவர்களின் சர்வதேச நினைவு நாளை யூத் டாஸ்க் ஃபோர்ஸ் கடைபிடிக்கவிருக்கிறது. சாலை விபத்தில் ஊனம், படுகாயம், மரணம் ஆகிய நிகழ்வுகளைச் சந்தித்தவர்கள் தங்களுடைய உணர்வுகளை உலகுக்குச் சொல்லும் நாள் நவம்பர் 15.
ஒரு நொடியில் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து விடும், ஒவ்வொரு சாலை விபத்திற்குப் பின்னும் தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேத்தி, நண்பர்கள், உறவினர்கள், சக மாணவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள் என்கிறது WHO அமைப்பு.
இதை உணர்த்தும் விதமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தினத்தை சர்வதேச அளவில் நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்க ஐக்கிய நாடுகளின் சபையில் 2005ஆம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.
உலக அளவில் இளைஞர்களை அதிகமாக பலி வாங்கிக்கொண்டிருக்கம் இந்த சாலை விபத்துக் களின் மூல காரணங்களை, சாலை விபத்து ஆராய்ச்சி மையத்தின் துணையோடு ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வருகிறது யூத் டாஸ்க் ஃபோர்ஸ்.
சாலை விபத்தினால் ஏற்படும் மரணம், ஊனம், படுகாயம் ஆகியவற்றின் மூல காரணங்களை பதிவு செய்ய விரும்புவோர்களும், விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களும், சாலைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர்களும், விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களும், சாலைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விரும்புவர்களும் யூத் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் யூத் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.


 யூத் டாஸ்க் ஃபோர்ஸ்
10, அலமேலு நகர்
உப்பிலிபாளையம், கோவை – 15.
போன் : 99411 76070
email : suresh@freshindian.org
web : www.freshindian.org, www.roadcrashvictimsday.org

                  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டெல்லி: உலகிலே சாலைவிபத்துக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 13 பேர் பலியாகி வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தனது முதல் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில்,

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்ளும் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும்.

தற்போது சாலை விபத்துக்களிலும் உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால், இங்கு உலக வாகனங்களில் 48 சதவீதம் தான் இயக்கப்படுகிறது. மீதம் 52 சதவீத வாகனங்கள் இயக்கப்படும் வளர்ந்த நாடுகளில் விபத்துக்களில் உயிரிழப்பு பெருமளவுக்கு தடுக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவுக்கு முதலிடம்...

அதேநேரம் சாலைவிபத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட சாலைவிபத்தில் பலியாவோர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் வெறும் 89 ஆயிரத்து 455 பேரும், அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642 பேரும் பலியாகியுள்ளனர். இது இங்கிலாந்தில் வெறும் 3 ஆயிரத்து 298 ஆக இருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலியாகி வருகின்றனர். அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகுகிறார்கள்.

இந்தியாவில் அதிக சாலைவிபத்துகள் ஆந்திராவில் தான் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 12 சதவீதம் இங்கு நிகழ்கிறது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 11 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வேகம் தான் காரணம்...

இந்தியாவில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதே காரணம். சராசரி வேகத்தை விட 5 சதவீதம் அதிவேகத்தில் செல்பவர்களுக்கு விபத்தினால் காயம் ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதமும், மரணம் சம்பவிக்கும் அபாயம் 20 சதவீதமும் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநாவின் ஆசிய சாலை பாதுகாப்பு கமிஷன் தலைவர் ரோகித் பலுஜா கூறுகையில்,

இந்தியாவில் விஞ்ஞானபூர்வமான சாலை பாதுகாப்பு முறைகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த முறைகள் 1930களில் இருந்தே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருகிறது என்றார்...

====================================================================
புதுடில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர், 4 பேர் காயமடைகின்றனர். இதில் வாகன ஓட்டுனர்களின் தவறும் முக்கிய காரணமாகிறது. இப்படியே போனால் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ்,மற்றும் சர்க்கரை வியாதியை விட சாலை விபத்துக்களால் உயிர்பலி அதிகரித்துவிடும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களால், விபத்துக்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகம், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம், போதுமான அளவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.இது குறித்து மத்தியஅரசின் நெடுஞ்சாலை மற்றும் ‌தரைவழி போக்குவரத்து துறையின் செயலர் ஏ.கே. உபாத்யாயா கூறியதாவது:கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் 4.9 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் காயமடைந்துள்ளனர். ஆனால் 2010-ம் ஆண்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் அதிகரித்து 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் நன்கு திட்டமிட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.. பக்கத்துநாடான சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆனால் சாலைவிபத்துக்கள் குறைவு, அமெரிக்காவில் வாகனங்கள் அதிகம் ஆனால் அங்கு சாலைவிபத்துக்கள் குறைவு ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை. சாலை விபத்துக்கள் மோசமான நிலையில் உள்ளது . இந்தியாவில் சாலை விபத்துக்களால் பெரும்பாலும் 25 முதல் 65 வயது வரை உள்ளவர்களில் 52 சதவீதத்தினரும், நடந்து செல்பவர்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிளின் செல்பவர்கள் 39 சதவீதத்தினர் என ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர். 4 பேர் காயமடைகின்றனர். மேலும் டிரைவர்களின் கவனக்குறைவும் உயிர்பலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.. இந்நிலை தொடர்ந்தால் வரும் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி. , எய்ட்ஸ், சர்‌க்கரை நோயால் இறப்பவர்களைவிட சாலை விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இத்தகைய சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் உயிர்பலியாவதை தடுப்பதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி 5 குழுக்களை நியமித்துள்ளது. இக்குழு சில பரிந்துரைகளை சமர்பித்துள்ளது. இதனை மத்திய தரை வழி ப‌ோக்குவரத்துதுறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சாலை பாதுகாப்பு கமிஷன் . 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இம்முறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் சாலை விபத்துக்களை குறைத்திடவும் உயிர்பலி ஆவதை தடுக்க நடவடிக்கை மேற்‌கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

14 டிசம்பர், 2011

சந்திர கிரகணம்-01

அன்பு நண்பர்களே,வணக்கம். 
                 கடந்த 10-12-2011 அன்று காணக்கிடைக்கப்பெற்ற சந்திர கிரகணப்புகைப்படங்களைக்காணீர். இந்த புகைப்படங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய V. உமா சங்கர் ,



                                           THIRU:-V.UMA SANKAR   
                                               அவர்கள் எடுத்த படங்கள்.

                                         சந்திரகிரகணம் படம் -01 கீழே 

 சந்திரகிரகணம் படம்-02 கீழே
     





                                         சந்திரகிரகணம் படம்-03கீழே







                                       சந்திரகிரகணம் படம்-04 கீழே


மரியாதைக்குரிய ஐயா V.UMA SANKAR அவர்களுக்கு மிக்க நன்றி! 
                tnsfthalavady.blogspot.com

ராஜ நாகம்.-01


அன்பு நண்பர்களே,வணக்கம். 

இந்தப்பதிவில் மரியாதைக்குரிய அம்மையார் பேரா.மோகனா அவர்களது பதிவு காணீர்.

 

Dec 14, 2011

ராஜ நாகம்.


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது 100 %உண்மைதான்   நண்பா! . உங்களுக்குத் தெரியுமா, பாம்புகள் உலகின் காலில்லாத பல்லிகள். அவ்வளவே. ! சில பாம்புக்கள்   விடம் உள்ளவை. இவைகளுக்கு கண் இமையும், வெளிக்காதும் கூட  கிடையாது,வெளி வெப்ப நிலைக்குத் தகுந்தாற்  போல தன உடல் வெப்பத்தை வைத்திருப்பவை இவைகளுக்கு தாடையில் எலும்பு கிடையாது. எனவே எவ்வளவு பெரிய உணவானாலும் விழுங்க முடியும்.இன்னொரு முக்கியான விஷயம். நமக்கு ஜோடி ஜோடியாக உள்ள அனைத்து உறுப்புகளும் இவைகளுக்கு ஒத்தையாகவே உள்ளன. முதன்மையாக ஒரே  ஒரு நுரையிரல் மட்டுமே உண்டு.அன்டார்டிகாவிலும், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் நியுசிலாந்து தவிர, உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன .    
    .   உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன? பாம்பில் 15 குடும்பங்களும்  2 ,900  ௦௦இனங்களும் உள்ளன. இவற்றில் 10 செ.மீ உள்ள நூல் பாம்பிலிருந்து, 7 .9 மீ நீளமுள்ள அனகோண்டா வரை உண்டு. இதுவரை உலகில் வாழ்ந்த பாம்புகளில் மிகப் பெரியது.58 -60 மில்லியன்ஆண்டுகளுக்கு  முன்  வாழ்ந்த டைடானிக் போயா தான். இதன் நீளம்12-15 மீ ஒரு மீட்டர்.  விட்டம்1 மீ. , .எடை, 1385 கிலோ. 
    உலகிலுள்ள பாம்பு இனங்களில் ஒரே ஒரு பாம்பு மட்டும் பறவை போல கூடு கட்டும் .அதில் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுதான் ராஜ நாகம். இதன் நீளம் 5 .5 மீ.ராஜ நாகத்திலே  200 இனங்கள் உள்ளன. இவை மற்ற நாகப் பாம்புகளை விட புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவை இணை சேரும் சமயத்தில், இணையைக் கண்டு பிடிப்பதற்காகவே, ஒருவித வாசனையை காற்றில் கலக்க விடும். ஆண் பெண் இரு பாம்புகளுமே, புனுகு வாசனையை வெளிவிடும். கிராமத்தில் , நாகப் பாம்பு இருந்தால்,உளுந்து வாசனை அடிக்கும் என்று சொல்வார்கள். அது இதுதானோ.!
   இணை சேர்ந்த 2 மாதம் கழித்து, ராணி நாகம் முட்டை இடும்.பின் இரண்டு மாதம் சென்ற பின் அவை பொரிக்கும். முட்டையை ராணி நாகம் இலை, செத்தை,மரக்  குப்பைகள் போட்டு கூடு கட்டும், அடை காக்கும். தந்தை முட்டையையும் அம்மாவையும் காவல் காக்கும்.  இது20 ௦-40 முட்டைகள் இடும்ஆண் அடை காக்கும் பெண் பாம்பையும் முட்டையையும் சேர்த்து பாதுகாக்கும் . பெண் பாம்புதான் ஆண் பாம்புடன் சேர்ந்து  முட்டையை தரையில் அடை   காக்கும். அடைகாக்கும் காலம்  60-90 நாட்கள் .  முட்டையிலிருந்து  வெளிவரும்  குஞ்சுகள்   50 செ.மீ நீளத்தில் இருக்கும். முட்டையிலிருந்து குழந்தை ராஜநாகம் வெளி வந்ததும் ராணி விலகிப் போய் தன பணிகளை பார்க்க போய்விடும். குட்டிகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.அதனுடைய விடமும் கூட முதிர்ந்த பாம்பின் நஞ்சு போலவே வீரியம் மிக்கது
         நாகப்பாம்புக்கு நன்றாக கண் தெரியும் , இரவிலும் கூட. !ராஜநாகத்தின் கண் பார்வை மற்ற பாம்புகளைவிட கூர்மையானது.தன் எதிரில் உள்ள பொருளை 330 அடி தூரத்திலேயே நன்றாக கவனித்து விடும்  ராஜ நாகம் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும்.பாம்புகள் கிடைக்காவிட்டால் இவை, ஓணான், பறவைகள், அணில் போன்றவற்றையும் உண்ணும்.  பாம்புகள் மிக மெலிதான வெப்ப மாறு பாட்டைக்   கூட உணரும் தன்மை பெற்றவை. இதற்காகத்தான் அது அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டு கிறது.குட்டியூண்டு உறுப்பான ஜகோப்சன் உறுப்பு இதன் மேல் தாடையில் உள்ளது. அதன் மூலம் இது வெப்பத்தை உணருகிறது. மற்ற பாம்புகள் போலவே, இதுவும் பிளவுபட்ட  நாக்கின் மூலம் இரையின் வாசனை உணர்ந்து அது  இருக்கும் திசையையும் அறிகிறது. இந்த பிளவுபட்ட நாக்கு ஸ்டீரியோ போல செயல்படுகிறது.மேலும், இதன் உதவியால்தான் பாம்பு இரவிலும் தன் இரையைப் பிடிக்கிறது.ராஜ நாகம் மற்ற பாம்புகள் போல் இரையை அரைத்து உண்ணாது. அப்படியே முழுங்கிவிடும். 
       ராஜநாகம் மூர்க்க குணம் உள்ளது. நாகப்பாம்பின் நஞ்சுநேரடியாக  நரம்பு மண்டலத்தைத்தான் தாக்கும்.அனைத்து பாம்புகளின் நஞ்சும் புரதம் தான். ராஜ நாகம் கடித்ததும், அந்த கடி சுமார் 1 .5 செ.மீ ஆழமான காயத்தை நம் உடம்பில் உண்டுபண்ணும்.விடம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். உடனே கடுமையான வலி ஏற்படும். அதைத் தொடர்ந்து கண் பார்வை குறைந்து, தலை சுற்றி, உடனடியாக பக்கவாதம் உண்டாகும்.இதய இரத்த குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். பிறகு மூச்சு திணறலால் இறப்பு நிகழும்.  ராஜ நாகத்தின்  நஞ்சு மிகவும் வீரியமுள்ளது அல்ல. ஆனால் ஒரே கொத்துதான் அதிலேயே ஒரு யானை கூட வீழ்ந்து , இறந்தும் போகும். அந்த  அளவுக்கானஅதிக நஞ்சை ஒரு போடு
போடும்போதே, செலுத்தி விடும் .ஒரு கடியில் சுமார் 7 மி.லி விடத்தை செலுத்தும்.ஒரு முறை கொத்தும்போது 20 பேரை கொல்லும் அளவுக்கு   அதில்  நஞ்சு உள்ளதாம்.  அதில் இருக்கிறது.பொதுவாக ராஜ நாகம்   கடித்தால் ஒருவர் அதிகபட்சம்  15 நிமிடத்துக்குள் இறந்து விடுவார்பெரும்பாலும் ராஜ நாகம் கடித்தால் 80 % இறப்புதான். உடனடியாக பாம்பின் எதிர் நஞ்சு செலுத்தினால் , சிகிச்சைக்குத் தகுந்தாற்போல் காப்பாற்றப்பட  வாய்ப்பு உண்டு..இதுவரை ராஜ நாகம் கடித்து ஒருவர் தான் பிழைத்துள்ளார். அவரும் இதனை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, கடித்ததால், உடனே பாம்பின் எதிர் நஞ்சு ஒரு நிமிடத்திற்குள் செலுத்தப் பட்டதால் , காப்பாற்றப் பட்டார். 
           பொதுவாக நாகப் பாம்பு மற்றவர்கள் எதிரில் வரவே வெட்கப்படும். மனிதர்களைக் கண்டால் ஓடிப்போய் புதர், மரம், மறைவான இடத்திற்குப் போய் ஒளிந்து கொல்லும். ஆனால் ராஜநாகம்   மனிதர்களை   எதிர்த்து நின்று தரையி லிருந்து   சுமார் 6 அடி உயரம்       எழும்பி படமெடுக்கும். பாம்புகள் புத்திசாலித்தனம் நிறைந்தவை. ஆபத்தான பகுதியை தவிர்த்து விடும்.,ராஜநாகம் இந்தியா , மலேசியா ,தென்சீனா, வியட் நாம் போன்ற தெற்கு ஆசியப் பகுதிகளிலும்வடக்கு ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும்  காணப் படுகிறது. 

ராஜ நாகத்தின் சீறும் சத்தம், நாய் உறுமும் சத்தம் போலவே கேட்கும்.பாம்பின் உடல் வளர்ந்தவுடன்ராஜநாகம் வருடத்தில் 4 -6 முறை தன் தோலை உறிக்கும். ஆனால் குட்டி பாம்புகள் மாதம் ஒரு முறை தோல் உறிக்கும்.தோல் உறிக்கும் காலகட்டத்தில், பாம்பு தான் பழைய தோலை உறிப்பதற்காக   ஏராளமாய் தண்ணீர் குடிக்கும்.ராஜநாகம் மற்ற பாம்புகளைவிட ரொம்பவும் சாதுரியமனவை. ராஜநாகம் பொதுவாக, தான் சுற்றிவளைக்கப் பட்டாலும் கூட , தப்பித்து ஓடவே முயற்சி பண்ணும்.  , தப்பிக்க வழியில்லை என்றால்,அல்லது முட்டைகள் தாக்குதலுக்கு உட்பட்டால் மட்டுமே தாக்கும்/கொத்தும். இது ராஜநாகத்துக்கு மட்டுமல்ல எல்லா பாம்புகளுக்கும் பொருந்தும். எந்த பாம்பும் பொதுவாக மனிதர்களை/ விலங்குகளை தேடித் போய் தாக்குவதில்லை. தான் தாக்கப்படும்./ பாதிக்கக்கபடும் நிலை ஏற்பட்டாலேயே, பிறர் மேல் தாக்குதல் நிகழ்த்துகின்றன. பாம்பின் விடம் என்பது தன் இரையை, உணர்விழக்கச் செய்வதற்காக, இயற்கை அளித்த சொத்து.    ராஜ நாகத்தின் இயற்கை எதிரி கீரிதான். இதற்கு பாம்பின், நரம்புநஞ்சை முறிக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது.  பொதுவாக ராஜ நாகம்  காடுகளில்தான்   வாழுகின்றன  . நீர்நிலைகளில்  நிரந்தர   வெப்பம்     உள்ள    இடத்தில்  வாழும் . இவைகளின்  வாழிடம்  பாதிப்பு  உள்ளாவதாலேயே   , இவை ஊருக்குள்  வருகின்றன .  .  
 பேரா.மோகனா


நறுமணப்.. பொருள்களின் ..ராஜா













அன்புள்ள நண்பர்களே.
வணக்கம். ஒரு காலத்தில் மிளகு பண்டமாற்று பொருளாகவும். பணம்மகவும் பயன்பட்டதாம். அந்த கதையைக் கேட்கிறீர்களா? .

கொல்லிமலையில் மிளகு கொடி
 நண்பா நீங்கள் சைவமா, அசைவமா?எதுவாக இருந்தாலும் சரி..,!தமிழ்நாட்டுக்காரர் என்றால், தினம் சாப்பாட்டில், கட்டாயம் ரசம் உண்டு . திருமணத்தில் எப்படி பெண் அவசியமோ ,அதுபோல ரசத்தில் நிச்சயம் மிளகு உண்டு. மிளகில்லாத ரசமா?அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே..!அப்படி,மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும்,சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது.அது மட்டுமல்ல இந்த சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.

  மிளகு..! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் மிளகு. நம் சமையலில் மட்டுமல்ல,இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும்,மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது.மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். ஆனால் அதிகம் மிளகைப்பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான். நறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான்மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான் சதையால் மூடப்பட்ட கனி என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதுதான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு ,இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.கருப்பு குறு மிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வாணிக சந்தையில்,மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது.மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும்,உபயோகப்பட்டது.

உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்க. அதே போல உலகின் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான்.இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில்.இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில் , மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.ரோமானியர்கள்காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ்,அலேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு, வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும்,ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல்,உணவை பதப்படுத்தவும் இது பயன்பட்டது.மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும் , வாடகை கொடுக்கவும்,பயன் படுத்தினர்.இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது . .
மிளகு, பூத்து காய் த்து படர்ந்து வளரும் கொடிஇது மிளகு பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது.நறுமணப் பொருளாகவும், உணவுக்கு சுவையூட்டும் பொருளாகவும், பயன்படுகிறது.பொதுவாக 4 மீ உயர மரத்திலோ,குச்சியிலோ கம்பிலோ படர்ந்து,ஆதாரத்துடன் வளரும்...இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10௦ செ. மீ நீளத்தில் இருக்கும் இதன் பழத்தில் ஒரேஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும்மிளகு அதன் பொடி போன்றவை பொதுவாக கருப்பாகவே இருக்கும். இதனை கருப்பு மிளகு என்கின்றனர். இதைத தவிர,பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு,பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன இவை கடல் மட்டத்திலிருந்து 3 ,000 அடி உயரத்திற்கு மேல் வளராது.மிளகு கொடிலநடுக்கோட்நிலநடுக்கோட்டிலிருந்து 15 டிகிரி அட்ச ரேகைப் பகுதிகளில் மட்டுமே மிளகு வளரும்.உலகின் அதிகமான மிளகு ஏற்றுமதியாளர் இந்தியா மட்டுமே உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது

  மிளகு கேரளாவிலிருந்து கிடைத்தாலும், மலபார் கடற்கரையை ஒட்டி விளைவது, மலபார் மிளகு என்றும். தெல்லிச்சேரியிலிருந்து விளைவது தெல்லிச்சேரி மிளகு என்றும் சொல்லப்படுகிறது. இதில் தெல்லிச்சேரி மிளகுதான் தரத்தில் உயர்ந்தது.பண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் வந்து சேர்ந்தது.பின்னர் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது,கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி,அதனை கண்டுபிடிக்கும் வரை.சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.

மத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர் அப்போது மிளகுஎடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப் பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது.ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள்.அதுலுள்ள மிக்கியமான அம்சம் என்றவென்றால், மிகை வாணிபத்தின் பொது கையாளும் தொழிலாளிகள்,அதனை கையாளும்போது, பை வைத்த சட்டையோ, கையை மடித்து அழகு படுத்துவதோ கூடாது . ஏன் தெரியுமா.அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான்.

. மத்திய காலங்களில், கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும் , நல்ல சுவையை நாக்குக்கு தரவும், மிளகை கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன் படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அளவு மிளகு உண்பவர்கள்.அதில் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப் படுத்து கிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது.கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.இரத்தக் குழாய்கள் கடினமாவதையும், இரத்தத்தை கட்டியையும் குறைக்கிறது.உடலின் செல்களை பாதுகாத்து,வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தை கட்டுப் படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்று பொருமலை குறைக்கிறது

மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
மோகனா.